கடந்த 2021 செப்டம்பர் 7 ஆம் நாள் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் நன்றி மலர்களாக வெளியிடப்பட்ட சிறு நூல்


 கடந்த 2021 செப்டம்பர் 7 ஆம் நாள் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் நன்றி மலர்களாக வெளியிடப்பட்ட சிறு நூல்

நன்றி மலர்களைச் செலுத்துவோம் !
வெறும் வார்த்தைப்புனைவுகளால் அல்லாமல்
நம் எண்ணங்களில் உருவாகும் எழுத்துகளைக்கொண்டு
சுமார் 220 ஆண்டு கால வரலாற்று நிகழ்வை !
வெளிக்கொண்டு வந்த
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் !
மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களுக்கும் !
நாம், நமது உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின்சார்பில்
நன்றி மலர்களைத் தொடுத்து
மாலையாகச் சூடிடுவோம் . . . !
07.09.2021 உடுமலை மண்ணிற்கு விடுதலை கிடைத்திட்ட நாள் ,
வீரத்திற்கும் விளைநிலமாக விளங்கிய தளி எத்தலப்ப மன்னரை உலகம் அறியச்செய்த நாள்.
இது ஏதோ, ஒரு நாள் இரண்டு நாள் அல்ல , இந்த உழைப்பு !
முனைவர் இந்திரசித்து தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொடங்கிய தொடர் பயணம் நிறைவுக்கு வந்திருக்கிறது. 1801 ல் நடந்த நிகழ்வு இது நாள் வரையிலும் உடுமலை பகுதி மக்களால் அறிந்து தெரிந்திருந்தாலும், அதை முறையாக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அரசால் அதற்குண்டான முறையான அறிவிப்பு வரும்போதே, அதன் உண்மைத்தன்மையோடு வெளிப்படும்.
இந்த இருநூற்று இருபது ஆண்டுகால மாக மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை வெளிக் கொண்டுவரக்காரணமாக இருந்திட்ட வரலாற்று நிகழ்வுகளை, வருடக் கணக்கில் ஆவணப்படுத்தி அதை இரு நூல்களாக வெளியிட்ட பெருமை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்திற்கே சாரும்.
புலவர் ஜல்லிபட்டி பழனிச்சாமி கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனவர், ஆனால் அதற்கு முன்பே 2001 முதல் முனைவர் இ;ந்திரசித்து அவர்களால் களப்பணியில் கோட்டைக்காடு, தூக்கு மரத்தோட்டம், வழக்குச் சொற்களில் படுசாமக்கருப்பன், வீரண்ணன் , வெங்கலமடையாள் என தளி எத்தலப்பர் சார்ந்த வரலாற்றுப் பதிவுகளை தளிப்பகுதியில் சுவடுகளாக, எச்சங்களாக, படிமங்களாகக் காணமுடிந்தது. ஆனால் இதற்கு சரியான சான்றாதாரங்களோ, ஆள்வழித் தரவுகளோ செவி வழிச் செய்திகளோ இல்லை. கால இடைவெளி ஏற்பட்டாலும் தொடர்ச்சியான பணிகளின் காரணமாக 2013 இல் புலவர் பழனிச்சாமியின் அறிமுகம், துணை பலம் பக்க பலமாக உடன் வந்தது.
தளி எத்தலப்பர் குறித்தான தரவுகள், நீர் மேலாண்மை சார்ந்த கல்வெட்டுகள், நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் என அனைத்து நிலைகளிலும் தரவுகள் கிடைக்க ஆரம்பித்தது. மேலும், சென்னை ஆவணக்காப்பகத்தில் ஆவணங்கள் இருந்தாலும், அங்கு சென்று அதைத் தேடி எடுப்பதற்கு உரிய துறை சார்ந்த , அறிமுகமும், ஆள் வழி உறவுகளும் கிடைத்தது.
2014 முனைவர் க.இந்திரசித்துவால் நாம் பேசிக்கொண்டிருக்காமல் இருக்கும் தரவுகளை வைத்து தளி எத்தலப்ப மன்னர் அறிமுகம் எனும் ஒரு சிறுநூலை அச்சிட்டு வெளிக்கொண்டு வரலாம் என்ற முடிவில் 50 பக்கமே உள்ள தளி எத்தலப்ப மன்னர் - அறிமுகம் என்ற நூலை 20.09.2015 உடுமலை நாராயணகவி, தளி பாளையப்பட்டு எத்தலப்ப மன்னர் என இரு பெரும் அறிமுக விழாவை நடத்தினோம்.
அதில் கல்வெட்டு ஆய்வாளர், அய்யா பூங்குன்றன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர் திரு. ரவி , உடுமலை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவரும், தற்போதைய திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வருமான முனைவர். வ. கிருஷ்ணன் , ஆகியோருடன் உடுமலையின் முகாமையான ஆளுமைகள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வாழ்வுரிமைக்கட்சி நிறுவனர் திரு. வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு மிகச்சிறப்பானதொரு உரை நிகழ்த்தி இரு நூல்களையும் வெளியிட்டார். அப்போதுதான் உள்ளூர் மக்களும், ஊடகத்தினரும் தளி எத்தலப்பர் சார்ந்த பதிவுகளும், ஆண்ட்ரோ கேதீசு எனும் ஆங்கிலேயர் தூக்கிலிட்ட நிகழ்வையும் அறியும் வகையில் வெளிக்கொண்டு வரப்பட்டது என்றால் மிகையில்லை.
அதற்கு முன்பு வரை இவ்வாறான நிகழ்வுகள் இந்த மண்ணில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிட்ட ஒரு ஆய்வாளர்களும் அறிஞர் பெருமக்களுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.
ஜல்லிபட்டி பழனிச்சாமி
எங்களது வரலாற்று ஆய்வின் செயல் தளத்திற்குக் கருவியாகவும்; பொருளாகவும் ;; உடுமலை வீர வரலாற்றின் வரலாற்று நாயகர் ; உடுமலை மண்ணின் வீரத்தின் விளைநிலமாகவும் ; உடுமலை வரலாற்றின் உன்னதப்பணியாகவும் ; எங்களது வரலாற்றுக்கனவாகவும் ; இந்த மண்ணில் திட்டமிட்டே மறைக்கப்பட்டு ; இன்று வரையிலும் வெளிவராது ; கண்ணுக்குத் தெரியும் சான்றுகளை வரலாற்றுச்சான்றுகளாகக் கண்ணுற வைத்தவரும் ; வீரத்தின் விளை நிலம் மாவீரன் எத்தலப்ப மன்னரின் வீர வரலாற்றை வெளிக்கொணரும் பெருமுயற்சியில் எங்களுக்கு முதன்மைச்சான்றாகவும் ; ஆள்வழி ஆதாராமாகவும் ; கிடைத்ததற்கரிய மிகப்பெரிய வரலாற்றுப்பெட்டகமாகவும் ; ஆவணங்களை ஆவணப்படுத்தும் வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆவணமாகவும் ; எத்தனையோ பணிகள் எல்லாருக்குமிருந்தாலும் ; எனது கடன் எத்தலப்பர் வரலாற்றைப் பணி செய்து கிடப்பதே ; என்று ஒன்றைக் குறிக்கோளுடன் எங்களையெல்லாம் ஆட்டுவித்த, வரலாற்று ஆய்வு நடுவத்தை இயக்குவித்த இயக்குநர் எங்களது பெரும்பாவலர் அய்யா பழனிச்சாமி அவர்களுக்கு முதற்கண் நன்றி,
முனைவர் க.இந்திரசித்து
2016 ல் தன் இறுதி மூச்சுள்ளவரையிலும், உடுமலை வரலாறு தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவில் வாழ்ந்தவர். தளி எத்தலப்ப மன்னர் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அனைத்து சான்றுகளையும் முன்னிறுத்தி, தளி எத்தலப்ப மன்னர் - அறிமுகம் எனும் சிறு நூலை எழுதி வெளியிட்டார். அய்யா அவர்களின் 25 ஆண்டு கால உழைப்பில் இலக்கியம், நாட்டுப்புறவியல் சார்ந்தும், தமிழியல் ஆய்வு சார்ந்தும் 35 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தளி எத்தலப்ப மன்னர் என்ற நூலை எழுதத் துணிந்த போது, நாங்கள் அனைவரும் அவரிடம் கேட்ட கேள்வி, அய்யா, மலையாண்டிவெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கர் என்று வழங்கப்படுவதை ஏன்? எத்தலப்ப மன்னர் என்று அழைக்கப்படவேண்டும் என்று கேட்டதற்கு, ' தளி எத்தலப்ப மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பநாயக்கர்' என்பவர் தன்னுடைய சாதி சனத்திற்காக வாழ்ந்தவர் அல்ல, மேலும், தன்னுடைய அரசவையில் தன் சாதியைச்சார்ந்த யாரையும் நியமிக்கவில்லை. ஆண்டிமுத்து (கவுண்டர்) என்பவரை தானாதிபதியாக்கி உள்ளார். வீரண்ணன் என்பவரை படைத்தளபதி ஆக்கி உள்ளார். படுசாமக் கருப்பனை ஒற்றனாக நியமித்து உள்ளார். ஆக, அவருடைய ஆட்சியில் அனைத்து சமூக மக்களையும் தம் அரசவையில் ஆளுமைகளாக நியமித்திருந்தார். ஆகவே, அவரை நாயக்கர் எனும் குறுகிய வட்டத்திற்குள் ஆய்வாளர்களாகிய நாம் முன்னிறுத்தக்கூடாது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டது மட்டுமல்லாமல், ஒரு ஆங்கிலேய அதிகாரியைத் தூக்கிலிடும் அளவிற்கு அவருக்கு மக்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்ததை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டார். மேலும் 2015 தளி எத்தலப்ப மன்னர் எனும் நூல் அறிமுகவிழாவில் இது குறித்து விரிவான விளக்கத்தையும் தந்தார். ஆகவேதான் அதற்குப்பிறகு அவரை தளி எத்தலப்ப மன்னர் என்று அழைக்கப்பட்டார்.
முனைவர் மா.மதியழகன்
இந்த நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக இருக்கும் வகையில் வழிமொழிந்து உறுதிப்படுத்தும் வகையில் வரலாற்றுத் துறைப்பேராசிரியர் முனைவர் மா. மதியழகனின் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து சுமார் மூன்றாண்டு காலம் ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம் என ஆவணங்களைத் தேடித்தேடி ஆவணப்படுத்தும் வகையில் முனைவர் மதியழகனின் உழைப்பு, மேலும், உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. சென்னை ஆவணக் காப்பகத்தின் இருக்கும் வருவாய் ஆவணங்களும், (Revenue Documents) ராணுவத்துறை ஆவணங்களும் (Military Documents) பெருமளவில் உதவியாக இருந்தது. இதையே ஆவணமாக்கி தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் நூலினை முனைவர் மா. மதியழகன் அவர்கள் கடுமையான மன உளைச்சலில் உருவாக்கினார். அதை நூலாக்கி வெளிக்கொணர அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பிரசன்னராமசாமி, குறிச்சிக்கோட்டை வருவாய் ஆய்வாளர் திரு. விஷ்ணுகண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் உதவியாளர் திரு. சபரி ஆகியோரும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தனர்.
இதைக்கடந்த 2018 மே 19 சனிக்கிழமை யன்று உடுமலையில் ஆயிரக்கணக்கான மக்களில் முன்னிலையில் அப்போதைய செய்தித்துறை அமைச்சர் மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பெற்றது. அன்று மணி மண்டபம் கண்டிப்பாக கட்டப்பெறும் என்ற உறுதியும் அப்போதைய அமைச்சர்களால் வழங்கப்பெற்றது. ஆனால் அது ஆட்சி முடியும் வரை எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன்
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஏழைப்பங்காளன், முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் கடந்த 2018 சூன் 25 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக தளி எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபம் அமைப்பதற்கு குரல் கொடுத்த முதல்வன், எனும் வகையிலும் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர் எனும் நூலுக்கு நூலக அங்கீகாரம் பெறும் வகையில் சட்டமன்றத்தின் குரல் கொடுத்தவரும் இவர்தான். எனவே, தளி எத்தலப்பருக்காக அரங்கும் திருஉருவச்சிலையும் அமைப்பதற்கு கடந்த ஆட்சியிலேயே குரல் கொடுத்த பெருமைக்குரியவர் ஜெ.ஆர். கே. எனும் ஜெயராமகிருஷ்ணன். மீண்டும் 2019 பிப்ரவரி 13 ஆம் நாள் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் நூல் நூலக அங்கீகாரம் வழங்கப்பட்டும் நூலக உத்திரவு வரப்பெறவில்லை என்பதை மீண்டும் பதிவு செய்தார். அதன் பிறகும் பல முறை முயற்சி செய்தும் நூலுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம்
வரலாற்று ஆய்வாளர், பொறிஞர் கு.சண்முகசுந்தரம் கடந்த டிசம்பர் 2019 முதலே உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பணிகளை கூர்ந்து கவனித்து வந்தாலும், உடுமலை வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்வையும், உடுமலை வரலாறு நூலினையும் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கவனித்து அடுத்த கட்டப்பணிகளைக் கொண்டு சொல்லக்காரணமாக இருந்திட்டார். அவரிடம் தளி எத்தலப்பர் குறித்தான தரவுகளைத் தெரிவித்தது முதல் அனைத்து ஆவணங்களையும் வாங்கிப் படித்துப்பார்த்து , இனிமேல் இந்தப் பணிகளை என்னிடம் விட்டுவிடுங்கள் என்று சொல்லி, ஆட்சி மாற்றம் அமைந்தால் தளி எத்தலப்பர் மணிமண்டபம் கட்டாயம் அமைக்கப்படும் எனும் இனிப்பான செய்திகளுடன் தனது பணிகளை உரியவாறு செய்திட்டார்.
மே மாதம் ஆட்சி மாற்றம் வந்தவுடன் அவர் சொன்ன முதல் தகவலே, உங்களுக்கான மணி மண்டபக் கோரிக்கை உறுதியாக நிறைவேறும். அதற்குண்டான அடிப்படைப்பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார். அது முதல் அறிவிப்பு வரும் வரையிலும், அறிவிப்பு வந்த பிறகு அதற்குண்டான பணிகளில் இன்று வரையிலும், இனிமேலும் துணை நிற்பார். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பணிகளைப் பார்த்து, அதில் தன்னையும் இணைத்துக்கு கொண்டு பாடாற்றும் நல்லுள்ளம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினரை எப்படி, என்ன சொல்லி நன்றி கூறுவது. அவரின் பணிகள் அனைத்தும் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பணிகளே. இன்னும் உடுமலை சார்ந்த வரலாற்றுப்பணிகளை அவரே முன்னெடுத்துச் சென்று செய்து தர வேண்டும்.
திரு. தி.குமாரராஜா தலைவர், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்
நான் ஜிலோப்பநாயக்கன்பாளையத்தில் பிறந்தவன். இதை வழக்கில் செலவநாயக்கன்பட்டி எனும் அழைப்பர். எனது ஊரின் தெற்குக் கோடியில் கற்சிற்பங்கள், நடுகற்கள் சில இருக்கின்றன. நான் சிறுவயதில் அங்கு சென்று என்நண்பர்களுடன் விளையாடியிருக்கிறேன். என் தாத்தா திருமூர்த்தி அந்த ஊரின் கர்ணமாக இருந்தவர். அவரிடம் இது குறித்துக்கேட்ட போது இது இந்த ஊர்ல வாழ்ந்த பெரிய மகாராசன் சண்டை போட்ட இறந்த இடம் எனக்கூறினார்.
அதற்குப்பிறகு என் விவரம் தெரிந்த நாள் முதல் இந்த வரலாற்றை அறிந்த போது எனது ஊருக்குத் தெற்கில் தளிப்பகுதியில் ஒரு பாளையக்காரராக இருந்ததையும் அவர் மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் ஆட்சி செய்தார் எனவும் ஆங்கிலேயனைத் தூக்கிலிட்ட பகுதி திணைக்குளத்தில் இருப்பதை அறிந்து தெரிந்து கொண்டேன்.
பிற்பாடு முனைவர் க. இந்திரசித்து அவர்களின் தளி எத்தலப்ப மன்னர் அறிமுகம் நூலினையும், முனைவர் மா. மதியழகன் எழுதிய தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர் நூலினையும் படித்தறிந்த பிறகு தளி எத்தலப்பர் செய்த அரும்பெரும் செயல்களைத் தெரிந்து கொண்டேன்.
மேலும் என்னுடைய தாத்தா திருமூர்த்தி அவர்கள் திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருத்தலத்தின் முன்பு ஒரு தீபத்துணை அமைத்த போது அதில் கார்த்திகைப் பெருந்தீபத்தன்று எனது ஊரின் கம்பளத்து சமூக மக்கள் எண்ணெய் கொண்டு சென்று அதில் ஊற்றி தீபமேற்றி வழிபட்டு வருவதையும், அது தளி எத்தலப்ப மன்னருக்காகச் செய்யப்படுகிறது என்பதையும் பிற்பாடு அறிந்துகொண்டேன்.
80 வயதிற்கும் மேலான எனக்கு என்னுடைய சொந்த மண்ணில் ஒரு ஆங்கிலேயனைத் தூக்கிலிட்ட ஒரு தமிழ் மன்னனுக்கு தமிழக அரசின் சார்பில் மணி மண்டபம் திருவுருவச்சிலை அமைப்பது எவ்வளவு பெரிய விசயம்.
இந்த மணிமண்டபம், திருவுருவச்சிலை அமைக்க நடவடிக்கை எடுத்திட்ட அனைவருக்கும். குறிப்பாக பொள்ளாச்சிநாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், காந்தி கலா நிலையம் எனும் நான் படித்த பள்ளியில் படித்த மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணன், உடுமலை மத்தீன் அவர்களுக்கும் எனது சார்பில் எங்களது வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் நன்றி மலர்களைச் சூடிடுவோம்.
செயர்கரிய செய்வார் பெரியார் எனும் சொல்லிற்கேற்ப மிகப்பெரிய பணிகளைச் செய்திட்ட தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும். செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி மலர்களைச் சூடிடுவோம்
நல்லாசிரியர் வை.விஜயலட்சுமி
பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
உடுமலைப்பேட்டை
நான் புவியியல் பட்டதாரி ஆசிரியராக இருந்தாலும், என்னிடம் பயிலும் அனைத்து மாணவிகளுக்கு பாடம் சார்ந்த அனைத்து செய்திகளையும் சொல்லித் தருவேன். மேலும், பாடம் தவிர்த்து சமூகச் செயல்பாடுகளிலும் என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வதால் இயல்பாக நாம் வாழும் மண்ணின் மீதும், மக்களின் மீதும் எனக்கு உள்ள அக்கறை பாசமாகவே உடுவெடுத்து விட்டது.
அந்த வகையில் உடுமலை பகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் என்னுடைய குழந்தைகள் என்னிடம் பயிலும் அனைத்து மாணவிகளையும் அரசு மற்றும் அரசு சார்ந்த பொது நிகழ்வுகளில் கலை இலக்கிய நிகழ்வுகளைக் கட்டாயம் பங்கு பெறச்செய்வேன்.
அவ்வாறே, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நண்பர்களோடு ஐந்தாறு முறை திருமூர்த்தி மலை, தளி எத்தலப்ப மன்னரின் வாரிசுகளாகக் கருதப்படும் காண்டூர் கால்வாய் அருகில் இருக்கும் புடைப்புச் சிற்பங்கள் நமக்கு உண்மைகளைத் தெரிவிக்கும் வகையில் உருவங்களாக நிற்கின்றனர்.
இதற்காகப் பல முறை ஊடகத்தில் தளி எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபம் அமைக்கப்பெற வேண்டும் என்பதை பதிவு செய்துள்ளேன். இறுதியாக கடந்த ஆகஸ்ட் 15 விடுதலை நாள் நிகழ்வுக்கு முன்பு வரையிலும் இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். மேலும், கடந்த மாதம் கோயிவ்பட்டி அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறையுடன் உடுமலை அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கிலும் இந்த செய்திகளைப் பதிவு செய்தேன்.
அந்த வகையில் வரலாற்று ஆய்வாளர்களாகிய எங்களுக்கு இது போன்ற வரலாற்று ரீதியான அறிவிப்புகள் நம் மண்ணில் மறைந்துள்ள வீர வரலாறுகள் வெளிக்கொணரவும், எம் போன்ற வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஊக்கமளிக்கும் செயலாகவே இது இருக்கும்.
இந்த அறிவிப்பு வரக்காரணமாக இருந்திட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்களுக்கும், மேலும் கடந்த ஆட்சிக்காலங்களில் இதற்காக முன் முயற்சி எடுத்திட்ட நல் நெஞ்சங்களுக்கும் எங்களுடைய வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியர் எனும் வகையிலும் மிகப்பெருமிதத்தோடு நன்றிகளை மலர்களை அனைவருக்கும் சூடிடுவோம்.
பின் இணைப்பு
பாளையக்காரர் வரலாறு The poligar history
கோயமுத்தூர் நாட்டு பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கர் பற்றிய குறிப்புகள்
தொட்டிய கம்பாள சாதி கட்சான பொம்ம நாயக்கர். டீல்லி பாதுஷாவின் பேரரசு ஆட்சியின் கீழிருந்த குறிச்சிபாளையத்தை ஆண்டு வந்தார். டெல்லி பாதுஷா இவரது குடும்பப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்பியதை ஏற்காத இவர் தனது சாதி மக்கள் மற்றும் குடும்பத்துடன் விஜயநகரத்திற்கும் இடம் பெயர்ந்தார். அவருக்கு விசயநகர மன்னர் ஒரு கிராமத்தை இனமாகக் கொடுத்தார். ஒரு எத்தல முத்தல நாயக்கர் குடும்பம் தென்வடலாக நான்கு காதம், கிழமேலாக இரண்டறை காதம் அளவுள்ள காட்டுப்பகுதியை புணரமைத்தனர். இது ஆனைமலைப் பகுதியில் அருகில் வரகிரி மலைச்சரிவில் இருந்தது. இவர் மதுரை எல்லைக்கும், மலையாள நாட்டிற்கும் ஒரு பாதை அமைத்தார்.
இவர் மும்மூர்த்திகளின் சிலைகளை மீட்டெடுத்து (பிரம்மா, விஷ்ணு, மகேஷ்வரா) விநாயகா, பத்ரகாளி மற்றும் வெங்கடாசலபதி ஆகியோருக்கும் வழிபாட்டை ஏற்படுத்தினார். இக்கிராமத்திற்கு அம்பாசமுத்திரம் என்று பெயரிட்டார். இதிலிருந்து வடக்கே ஒரு காத தூரத்திற்கும் அப்பால் இவர் குடியிருப்பதற்காக குறிஞ்சேரி என்ற கிராமத்தை உருவாக்கினார். இவருக்கு கிருஷ்ணதேவராயர் மும் முடிப்பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தி ஒரு பாளையப்பட்டு நிலத்தையும் வழங்கினார். மேலும், 32 அமரக்காரர்களையும் இவருக்கு பணியாளர்களாக நியமித்து கௌரவப்படுத்தினார்.
இம்முடி எத்தல முத்தல நாயக்கர் முதல் பதினாறு பாளையக்காரர்கள் நானூற்று ஐம்பத்தி ஐந்து 455 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். முதல் பாளையக்காரர் கைர நதியின் குறுக்கே ஒரு அணை கட்டியதாகச் சொல்லப்படுகிறது. 32 அமரக்காரர்களுக்கும், 32 கிராமங்களும் 19 சிறிய கிராமங்களும் இருந்தன. இந்தப் பெரு நிலம் நான்காவது பாளையக்காரர் தலைமுறையில் அவருக்கும் அவரது சகோதரருக்குமிடையே பாகம் பிரிக்கப்பட்டது. அவரது சகோதரரே ஜல்லிபட்டி பாளையக்காரர் என அழைக்கப்பட்டார் . 5 ஆவது தலைமுறையிலும் பாளையக்காரரின் சகோதரர் ஜல்லிபட்டி பாளையக்கார் ஆனார். 5 ஆவது தலைமுறை பாளையக்காரர் திருமலைநாயக்கர் முன் குதிரையேற்றத் திறனைக் காட்டிப் பரிசாக ஆண்டுக்கு 100 பொற்காசுகள் பெற்றார்.
6 ஆவது பாளையக்காரர் ரங்கராஜா முத்து வீரப்ப நாயக்கர் தளியில் ஒரு கோட்டையைக்கட்டி 10,000 காலாட்படை, 8.000 வில் வீரர்கள். மற்றும் சில யானைகள் அடங்கிய படையையும் வைத்திருந்தார். 11 ஆவது பாளையக்காரர் மற்றும் 17 பாளையங்களும் மைசூரின் சாம்ராஜ் உடையாரின் ஆட்சியின் கீழ் வந்தது. இது மலையடிவாரத்தில் இருந்தது.
இவர் 1000 பகோடாவை ராஜகோபால் கப்பமாகக் கட்டினார். இவர் தாராபுரம் போரில் பங்கு பெற்றதால் பரிசாக மைசூரில் குமாரநந்தம் என்ற பட்டம் பெற்றார். 12 ஆவது பாளையக்காரர் மைசூர் மகாராஜாவின் கோயமுத்தூர் கோட்டைக் காவலாளியாக சிக்கராஜா உடையாரால் நியமிக்கப்பட்டார். படைக்காவல் வழி வசூலிக்கும் உரிமையும் இவருக்கு வழங்கப்பட்டது. 13 ஆவது பாளையக்காரர் ஹைதர் அலியின் உத்தரவிற்கிணங்க மலையாள சீமையின் மாங்கரை லக்காணி கோட்டை நாயர்களுக்கு எதிரான போரில் அமின்சாகிப்பிற்கு உதவியதால் 2500 பொன் மானியமாகப் பெற்றார். 15 ஆவது பாளையக்காரர் வெங்கடபதி எத்தலப்ப நாயக்கர் காலத்தில் பழனி வேலாயுத நாயக்கரின் பாளையப்பட்டுவை ரங்கசாமி நாயக்கர் கைப்பற்றினார். இவர் பாளையப்பட்டின் உள்பகுதிகளுக்கு ரோடுகளை அமைத்து சில பாளையப்பட்டுகளைக் கைப்பற்றி அவைகளில் சில வழிபாடும் செய்து வந்தார்.
திப்பு சுல்தான் கப்பம் கட்டாத இவர் மீது நடவடிக்கை எடுத்த தனது தளபதி சர்க்கார் நாரா சாகிப்பற்கு உதவுமாறு தளி பாளையக்காரரருக்கு உத்தரவிட்டார். இருவருமாகசேர்ந்து பேரரிட்டு வேலயாயுத நாயக்;கரை மீண்டும் பழனி பழைய பாளையக்காரர்களாக நியமித்தாரர்கள்.
கோயமுத்தூரில் சர்வாதிகார திம்மைய கவுண்டன், எல்லா பாளையக்காரர்களையும் துன்புறுத்தி ஆட்சியை ஏற்றக்கொள்ள ஆணையிட்டார். தளி பாளைக்காரர் ஏற்க மறுத்ததால் திம்மைய கவுண்டர் அந்தப் புகுதியை ஆக்கிரமித்தான். தளி பாளையக்காரர் ஆனைமலை காட்டுக்குள் தப்பித்துச் சென்றுவிட்டார் ஆனாலும் ஏரப்பன் என்பவரின் சூழ்ச்சியால் திம்மைய கவுண்டன் அவரைப்பிடித்தான். அவர் சொத்துகள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்குப்பின்னால் 16 ஆவது பாளையக்காரரின் பாட்டியான ஆண்டியம்மாள் கோயமுத்தூர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஜெனரல் மீடோஷ் என்பவரின் ஆதரவில் பாளையத்தையும் இழந்த சொத்துக்களையும் மீட்டெடுத்தாள். இவர் கம்பெனிக்கு 2500 பொன் கப்பமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் பாளையம் மீண்டும் சில காலம் திப்பு சுல்தான் கைகளுக்குப் போனது. கடைசியாக கம்பெனியின் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டு வருடத்திற்கு ஏழாயிரம் பொன் கப்பமாக நிர்ணயிக்கப் பட்டது. இந்தப் பெருந்தொகையை பாளையக்காரர் செலுத்த இயலாததால் கிழக்கிந்தியக் கம்பெனி தன் வசம் எடுத்துக்கொண்டது.
தமிழில் இந்தக் குறிப்புளை எழுதி வைத்துள்ள மலையாண்டி எத்துலப்ப நாயக்கர் 17ஆவது பாளையக்காரர் ஆவார். அவருக்கு அப்பொழுது வயது 8 ஆகும். இவர் கம்பெனியின் பாதுகாப்பில் இருந்து வந்தார்.

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰