மற்ற எந்த துறையிலும் இல்லாத படி, காவலர்களுக்கு மட்டும், police hospital , police quaters
, police housing board என தனியாக ஒரு குட்டி துறையே இயங்குகிறதே....இத்துறையின் மதிப்புமிக்க பணியை கூறமுடியுமா ...
எந்த ஒரு போலீஸ் காரராவது தமது குழந்தைகளை உங்களைப்போல காலையில் பள்ளிக்கு கொண்டுசென்று விட்டு மாலையில் தினசரி அழைத்து வருவதை பார்த்துள்ளீர்களா?
எந்த போலீசுக்காரராவது
உங்களைப்போல ஊர்ப்பொங்கல்
திருவிழாவிற்கு ஆடல் பாடலாக விடுமுறை எடுத்து சென்றதை பார்த்துள்ளீர்களா?
எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களைப்போலதீபாவளி ,பொங்கலன்று குடும்பத்துடன்
விடுப்பு எடுத்து புத்தாடை அணிந்து பார்த்துள்ளீர்களா?
எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களைப்போலபுதுப்படம் ரிலீஸ் அன்று முதல் ஷோ பார்ப்பதை பார்த்துள்ளீர்களா?
எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களைப்போலடாஸ்மாக்கின் உள்ளே அல்லது பாரில் சீருடை அணிந்து மது குடிப்பதை பார்த்துள்ளீர்களா?
எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களில் ஒருவரைப்போல சாலையோரமோ,ட்ரான்ஸ்பார்மரிலோ இயற்கை உபாதை கழிப்பதை பார்த்துள்ளீர்களா?
எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களைப்போல
சட்டையை டக் இன் செய்யாமல் பார்த்துள்ளீர்களா?
எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களைப்போலசுகர்
,பிரஷர் ,சர்க்கரை வியாதியென்று பணியில் இருக்கும்சமயம்
மருந்து மாத்திரை எடுத்து பார்த்துள்ளீர்களா?
எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களைப்போல
விருப்பப்பட்ட நாற்காலியில்
அமர்ந்து பார்த்துள்ளீர்களா?
எந்த ஒரு போலீஸ் காரராவது அரசியல்வாதிகளுக்காக பணியில் அமர்த்தப்பட்ட
சமயம் சாலையோரம் எவ்வளவு நேரம் நின்றாலும் அமரமாட்டார்களென்று உங்களுக்கு தெரியுமா?
எந்த ஒரு போலீஸ் காரராவது உங்களைப்போல
பேஸ் புக்,டிவிட்டரில்,யூ டியூப் வீடியோக்களில் நாள் முழுக்க பொழுது போக்கி பார்த்துள்ளீர்களா?
காவல் துறையில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு கிடைப்பதுபோல
விடுமுறை கிடைப்பதில்லை
என்று தெரியுமா?
அவர்களுக்கென்று சங்கம் கிடையாதென்று தெரியுமா?
அப்புறம் அவர்கள் குடும்பத்தாருக்கான மருத்துவமனை
தேவைகள்,ஸ்டோர்ஸ்,அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான வீடுகள் ,வசதிகள் போன்றவற்றை செய்து கொடுத்துதான்
ஆகவேண்டும்.
இதற்கான புரிதல் மக்களிடம் வெகு குறைவு சார்!
ஆனால் நான் உங்களை மிகவும் மதிக்கின்றேன்
காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஊழியர்களே!
ஒருபோதும் உங்களை நான் தவறாக நினைப்பதில்லை.
ஒரு சிலர் இருக்கலாம் உள்ளுக்குள்ளே!அவர்களால் ஒட்டுமொத்த காவல் துறைக்குமே சங்கடங்கள்.
புரிகின்றது!
நன்றி
வணக்கம்.
அப்டேட்!
மிக மிக அவசரம்! என்ற திரைப்படம் பாருங்கள் சார்!இந்த கேள்விக்கான பதில் சரியா?தவறா?என்று புரியும்.
பதிவு சொந்தம் திரு .முதுவை.பா. நாகராசன் (Muduvai.p. Nagarajan) அவர்களுக்கு சமர்ப்பணம்.
நன்றி!
வணக்கம் .
Comments
Post a Comment