KVE (கீர்த்தி வீரர் எத்தலப்பர் ) 5-10-2015-24
KVE வாட்ஸஅப் குழு KVE (கீர்த்தி வீரர் எத்தலப்பர் ) வாட்ஸஅப்ப் குழு ...சொந்தமே .
KVE ..(கீர்த்தி வீரர் எத்தலப்பர் ).உடுமலைப்பேட்டை வாட்ஸஅப்ப் குழு ஆரம்பித்து 5 -10-2015.அன்று .சிறு குழுவாக ஆரம்பித்து இன்று இன்று உலகம் முழுவதும் கம்பள சொந்தங்களை ஒரே ஒற்றை புள்ளியில் ஒன்றிணைத்து கல்வி ,பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு அனைத்து தகவல்களையும் கொண்டு செல்ல காரணமாக இருக்கும்
எங்கள் குஜ்ஜபொம்மு குலச்செல்வி திருமதி பிரேமா செல்வம் பாப்பாவிற்கு
..KVE குழுவின் சார்பில் எங்கள் இனிய வாழ்த்துக்கள்
தளி எத்தலப்பர் ...வரலாறை உலகெங்கும் பரவசெய்பவர் ..முனைவர் மஞ்சுளா தேவி -உடுமலைப்பேட்டை
.வாட்ஸப் குழு ..வார்தை விளையாட்டுக்கு அல்லாமல் ..வாழ்க்கைக்கும் பயன்படட்டும் ...என்று தான் 05.10.2015...அன்று ஆரம்பித்தது ...கம்பளத்து பெண்குழந்தை மூலம் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த குழு ..தொடரும் கம்பளத்து சொந்தங்கள் ..பந்தங்கள் ...தொடரும் பயணம் ...10 -வது வருடமாக .....
KVE.....கீர்த்தி வீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
சதீஷ்குமார் -தனியார் நிறுவனம் ..PN சாலையூர் ,உடுமலைப்பேட்டை
நமது இனத்தை சேர்ந்தவரான கரப்பாடி பூபாலம் முருகசே பாண்டியன் அவர்கள் ஆல் இந்திய ரேடியோவில் பல நிகழ்சிகளில் கலந்துகொண்டு பேசியுள்ளாராமே . நாம் அதுபோல் இந்த வாட்ஸ்அப் குழுவில் தினந்தோரும் ஏதேனும் பயனுல்ல தகவல்கள் பற்றி பேசி பதிவிடலாமே...தலைப்பு "சிறு மாற்றம் சமுதாய முன்னேற்றம்"
ஜெயராமன் தங்கவேல் -வங்கி அதிகாரி -உடுமலைப்பேட்டை
இன்றைய கால கட்டங்களில் ஒரு whatsapp குழு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது..
அரசு துறை அலுவலக வாட்ஸ்அப் குழுக்கள் தனியார் துறை வாட்ஸ்அப் குழுக்கள்
குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள் கோயில் வாட்ஸ்அப் குழுக்கள்
அரசியல் வாட்ஸ்அப் குழுக்கள்
என நிறைய உண்டு
அந்தந்த தலைப்புகளுக்கு ஏற்றவாறு அந்த செய்திகளை பதிவு செய்கிறார்கள்
அதை தெரிந்துகொள்ள ஏதுவாக...
இப்போது நமது KVE கீர்த்தி வீரர் எத்தலப்பர் என்ற நமது சமுதாய நலன் சார்ந்த குழுவிற்க்கு வருவோம்..
இதிலே பதியப்படும் 90% சதவீத பதிவுகள் நமது சமுதாய உயர்வுக்கு பயன்படுவதாக இல்லை..
அதற்க்கு காரணம்
பொதுவாக ஒரு விளக்கம் உண்டு " தவறு செய்பவன் மட்டுமே குற்றவாளி அல்ல தவறு செய்பவனை தட்டி கேட்காமல் தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பவனும் குற்றவாளியே " என்பதைப்போல
இக்குழுவில் ஆக்ச்சிறந்த கல்வியாளர்கள் அரசு தனியார் துறையில் உயர் பொறுப்புகளில் இருப்பவர் விளையாட்டுத்துறை
தொழில்முனைவோர் தொழிலதிபர்கள் என நிறையபேர் பயணித்தாலும் தங்களின் மேலான கருத்துக்களையும்
அவர்கள் அத்துறையில் எவ்வாறு உயர்ந்தார்கள் என்பதையும் தங்களுக்குத் தெரிந்த அத்துறை சார்ந்த கருத்துக்களையும் செய்திகளையும் இதிலே பதிவு செய்ய தவறி விட்டார்கள்
அப்படி அவரவர் தங்கள் துறைசார்ந்த வேலை சார்ந்த தொழில்சார்ந்த பதிவுகள் வருமேயானால் தேவையற்ற அரசியல் தேவையற்ற விவாதங்கள் பதியப்படாமல் இருந்திருக்கும்
2015 முதல் 2024 வரையிலும் இதே நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது எனலாம்..
மேலும்
எல்லோரும் எல்லா அரசியல் கட்சிகளிலும் பயணிக்க கூடியவர்கள் தான்
அதை இங்கே காட்டிக்கொள்வதில் பயணொன்றும் இல்லை
மாறாக அந்த அரசியல் திறமையை பயன்படுத்தி நமது சமுதாய நலனை முன்னேற்றுவாரென்றால் அதனை ஒத்த பதிவுகள் வருமேயானால் அதுவே சமுதாய குழுவின் சிறந்த பயன் என்று கூறலாம்...
குழுவில் மாற்றம் செய்யவேண்டியது.1.முதலில் ஒருவன் உயிர்வாழ ஆரோக்கியமான உணவு வேண்டும்
வாழ்வில் உயர கல்வி வேண்டும்
ஆக அந்த கல்வியை கற்க வேண்டும் அந்த கல்வியில் நமது சமுதாயம் பின்னடைவில்தான் உள்ளன
காரணம் அதைப்பற்றிய விழிப்புணர்வு
அத்தகைய விழிப்புணர்வை இதிலே பயணிக்கும் ஆகச்சிறந்த கல்லூரி பேராசிரியர்கள்
பள்ளி ஆசிரியர்கள்
எடுத்துரைக்க வேண்டும்...
2. கல்வி பெற்றுவிட்டோம் சரி அந்த கல்வியை பயன்படுத்தி பணிகளுக்குச் செல்கிறோமா என்றால் அது மிகவும் குறைவு ஏனென்றால் சேர்ந்தால் மேலாளராகத்தான் சேருவேன் என்ற என்னம் மேலும் எதையும் சகித்துக்கொண்டு வேலை பற்றிய புரிதல் இல்லாமல் அந்தப் பணியில் எப்படி அடுத்த நிலையை அடைவது என்ற ஒரு சிந்தனை உழைப்பும் இல்லாதது வேலைவாய்ப்புகளில் நாம் முன்னேறாமல் இருக்க ஒரு காரணம், வேலைவாய்ப்புகளில் உயர்வது எப்படி என்கிற விழிபாபுணர்வை இதிலே பயணிக்கும் அரசு தனியார் துறைகளில் பணி செய்து உயர் இடத்திற்க்கு சென்றவர்கள் இருக்கிறார்கள் எனவே அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் (யார் யார் எனக்கு தெரியும் எனவே அத்தகைய விழிப்புணர்வு பதிவுகள் பதிவிடுங்கள்)
3. மேலும் தொழில் முனைவோர் நீண்டகாலமாக ஒரே தொழிலில் வெற்றிகரமாக பயணிப்போர் தங்கள் தொழில்பற்றிய பதிவுகள் மேலும் இதே வேறு எந்த தொழிலில் லாபம் வெற்றி வாய்ப்புகள் எப்படி எந்த் ஊரில் எந்த தொழில் கனரக வாகனங்கள் தொழில் சார்ந்த வாகனங்கள் வைத்திருப்போர் என தங்கள் பதிவுகளை பதிவிடும்போது இதன் மூலம் தங்கள் தொழில் விரிவடைய வாய்ப்புகள் உள்ளன.
4. மேலும் தமது சமுதாயம் கால்நடைகள் அதிகம் வைத்திருப்பதால் அதைச் சார்ந்த பதிவுகள் இன்றய காலகட்டங்களுக்கு ஏற்ப் நவீன முறையில் ஆடு மாடுகள் வளர்ப்பு சந்தை படுத்துதல் என அதனைச் சார்ந்த பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும்..
5. விவசாயம் சார்ந்த பதிவுகள் காய்கறி தேங்காய் விலை நிலவரங்கள் பருவகால பயிரிடல் போன்றவற்றை பதிவிடலாம்..
6.அரசியலில் பயணிப்போர்கள் நமது சமுதாயம் சார்ந்த சலுகைகள் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்புகள் அரசு மானியங்கள்
அரசு ஆவணங்களை உதாரணமாக DNT சான்றிதல்கள்
போன்ற அரசு சார்ந்த ஆவணங்கள் பற்றிய விழிப்புணர்வு பதிவுகளை பதிவிடலாம்..
இனி வரும் காலங்களில் இது போன்ற பதிவுகள் பதிவிட வேண்டும் இது நமது குழுவில் செய்யப்பட வேண்டிய மாற்றம்...
(பின் குறிப்பு. இது போன்ற உயர்வுக்கான பதிவுகள் வரும் போது அதை பயன்படுத்தி முன்னேறுவது அவரவர் விருப்பம் ஆனால் "வாடு ஏமி செப்பேதி நேனு ஏல வினால" ன்னு நினைத்தால் அதற்க்கு குழு பொறுப்பல்ல
புத்தகங்கள் படிப்பதை காட்டிலும் அதன் மூலம் உயர்ந்தவர்கள் கருத்துக்களை சற்றே செவிமடுத்து கேளுங்கள் உங்கள் முன்னேற்றம் அங்கிருந்து கூட ஆரம்பிக்கலாம் என்ற வரிகளுக்கேற்ப்ப
நல்லவற்றை புரிந்து கொண்டு உயர இந்த குழுவின் பங்களிப்பு சிறிதளவேனும் இருக்கட்டும் இனிமேல்..
அன்புடன் ஜெயராமன்..வங்கி துணை மேலாளர் ..உடுமலைப்பேட்டை .
திரு .கார்த்தி SR -மின்சார பொறியாளர் -உடுமலைப்பேட்டை
காலத்தை உள்வாங்கும் எவையும் தன்னை தற்காத்துக்கொள்ளும் என்பது இயற்கையின் நியதி
அன்றிலிருந்து இன்றுவரை நமது இலக்கு ஒன்றுதான்
"தன்னிறைவு " என்பதில் நாம் தன்னிறைவடைய வேண்டும் ..
அதற்கான விதைகள் துளிர்ப்பதை நாம் இனங்காண வேண்டும்
கேட்பதை கேட்டபடி கொடுக்கும் தேவதாரு விருட்சம் போல் விளங்கவேண்டும் .. இல்லையென்பதே இல்லையென்ற சொல்லாடல் நிலைபெறவேண்டும்
We are all in one coporation that is called as "KALPA VIRUCHA "
We are improve ours as like as ENCYCLOPEDIA OF KAMBALA
நன்றி ....
Mrs Veeralakshmi Rajavel....Andipatti
Best and heart felt wishes for a successful decade !!
The idea of creating this group is a very noble cause as u have put together and encouraged our community people to express which itself is a very productive growth.
And the intensity of sharing and interaction in the group I would say is very strong and alive which is very difficult to maintain I know as an admin .The credit goes to you ya for keeping the group lively. Hats off to it !
Just do what ur doing, I am sure the group will evolve as a platform to express refined thoughts and progressive experiences where the members stay confident to express!!
I am just an audience sir, u r the performer, and the way u give space to everyone who expresses is really great... 😊way to go 👍
5..10..2024..அன்று ஒன்பதாம் ஆண்டு கடந்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கீர்த்தி வீரர். எத்தலப்பர்
திரு .முத்துசாமி அவர்கள் ...பெதப்பம்பட்டி
KVE.வாட்ஸ் அப் குழுவிற்கு வாழ்த்துக்கள் ஆரம்பித்த அட்மின் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
உறவுகளே நீங்கள் ஆரம்பித்த ஒன்றாம் ஆண்டில் நீங்கள் என்ன நோக்கத்திற்காக ஆரம்பித்தீர்கள் என்று தெரியவில்லை அந்த நோக்கம் இன்று 10 ஆம் ஆண்டில் நிறைவேறியதா என்றும் தெரியவில்லை ஆனாலும் இந்த குழு என்று ஆலமரமாக வளர்ந்து சமுதாயம் எனும் வேர் பரப்பி மிக கம்பீரமாக பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது அரசியல் ஆன்மீகம் பொழுதுபோக்கு சினிமா சமுதாய செய்திகள் அனைத்தும் இக்குழுவில் பகிர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள நம் உறவுகளை இக்குழுவில் இணைத்து ஒரு உறவு பாலமாக விளங்குகின்றது இப்பொழுது ஒரு சிறு whatsapp குழுவாக ஆரம்பிக்கப்பட்டது இன்று நானுருக்கும் மேற்பட்ட நபர்களை இணைத்து மிகப் பிரமாண்டமாக ஆலமரமாக வளர்ந்து நிற்கின்றதுஇக்குழுவிள்பல நல்ல செய்திகளை நம் உறவுகள் பகிருகிறார்கள்
சில நேரங்களில் சச்சரவான செய்திகளும் பகிர்கிறார்கள்
வாக்குவாதங்களும் வருகின்றது அந்த வாக்குவாதங்களை அன்புடன் மறந்து மறுநாள் நல்ல செய்திகளாக வருகின்றது நல்ல விஷயம் தானே இன்னும் நிறைய தமிழகம் முழுவதும் உள்ள நம் உறவுகளை இதில் இணைத்து குறைந்தது ஆயிரம் நபர்களை யாவது இணைத்து தமிழகம் முழுவதும் நடக்கும் நம் உறவுகளுக்குள் நடக்கும் நல்ல செய்திகள் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் செய்திகள் நம் விடுதலைக் களம் எனும் அரசியல் கட்சியின் செய்திகள் அனைத்தும் வர வேண்டும் என்று நினைக்கிறேன் இக்குழுவில் இருப்பவர்கள் டிபியில் அவர் அவர் போட்டோவை வைத்தால் இன்னும் உறவுகளுக்குள் நல்ல அறிமுகம் கிடைக்கும் எனது வேண்டுகோள் முடிந்தால் அட்மின்கள் இதற்க்கும் ஒரு பரிசிலனை செய்யலாம் போட்டோ இருந்தால் நமக்குள் நல்ல அறிமுகம் கிடைக்கும் என்பது எனது வேண்டுகோள் இன்னும் KVE.மிகப் பிரம்மாண்டமாக வளர வேண்டும் எனநமக்குள் ஒரு உறவு பாலமாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை குழுவில் இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் தொடர்க நம் பயணம்என்றும் நட்புடன் டி முத்துச்சாமி திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா குடிமங்கலம் ஒன்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைச் செயலாளர் பெதப்பம்பட்டி எஸ் அம்மாபட்டி
திரு .டி. முத்துச்சாமி அவர்கள் .பெதப்பம்பட்டி
திரு .அசோகன் ...பொள்ளாச்சி ...பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் KVE வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இது சமயம் சில ஆலோசனைகள்.
1) மிகவும் முக்கியமான விஷயங்கள் மட்டும் KVE விருட்சத்தின் விதைகள் குழுவில் பகிரப்பட வேண்டும்.
2) கல்வி, சமுதாய சொந்தங்களின் இறப்பு போன்ற மிக அவசியமான தகவல்கள் மட்டும்.
3) மற்ற அனைத்து தகவல்/,விஷயங்கள் சம்பந்தப்பட்ட குழுக்களில் பதியவும்.
4) தேவையற்ற தகவல்கள்,பதிவுகள் முக்கியமான விசயங்களை மூலையில் உட்கார வைத்து விடும்.
5) சிவகுமாரின் பதிவுகள் பண்பாடு,கலாசார குழுவில் பதிவிடலாம்.
திருமதி உமா மகேஸ்வரி ராமசாமி அவர்கள் ..சாப்டூர்
நம்ம சொந்தங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் பார்ப்பதற்கும் அவர்களின் கருத்துகளை தெரிந்து கொள்வதற்கும் நல்ல தளத்தை உருவாக்கியதற்கு நன்றிகள்,படிப்பு சம்பந்தமான பதிவுகள் நிறைய பகிருங்கள்.
திரு .பெருமாள்சாமி ,மின்சாரவாரிய பொறியாளர் ..கோவை
O5.10.2015-05.10.2024, 10 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் கீர்த்தி வீரர் எத்தலப்பர் (KVE) வாட்ஸ்ஆப் குழுவிற்கு, உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து இக்குழுவில் பதிவுகளை பார்த்துவருகிறேன். ஆரம்பத்தில் இக்குழு சிறப்பாக இயங்கியது. இயக்கியவர்கள் அனைவரும் இளைஞர்கள். அதில் நல்ல நோக்கமும் இருந்ததது. களத்திலும் சிறப்பாக இயங்கினார்கள். கழகங்கள்/கட்சிகளை சார்ந்தவர்களை இக்குழுவில் இணைத்த பின்பு அவர்கள் தமது சித்தாந்தம் சார்ந்த பதிவுகளை பதிவிட தொடங்கினர். தொடர் பதிவுகள் பல நேரங்களில் அயர்ச்சியை ஏற்படுத்தியது. குழுவின் நோக்கத்திற்கு எதிர்மாறான திசையில் பயணம் தொடர்கிறது. யாருக்கும் பயனில்லாத திண்னைப் பேச்சு அரங்கமாகஹ இக்குழு மாற கூடாது. சமுதாய முன்னேற்றம் சார்ந்த பதிவுகள் மட்டுமே இக்குழுவை மேம்படுத்தும். பதிவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பதிவிட்டால் நலம். அடுத்தாக கம்பள விருட்சம் அறக்கட்டளை ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறது. உறுப்பினர் ஒன்று கூடி அதை சிறப்பாக நடத்தவேண்டும். பல பணிகளுக்கிடையிலும், சிறப்பாக வழி நடத்துகிற உங்களுக்கும், குழு நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட வாழ்த்துகளும் நன்றியும்💐🙏
Comments
Post a Comment