மழைல, கவுந்தடிச்சுக்கிட்டு வீட்ல படுத்துக்கறது சுகம்தான். ஆனா, அந்த மழைல வண்டி எடுத்து, ரயில்ல ஏறி, ஸ்டேஷன்ல இறங்கி, ஆட்டோ பிடிச்சு, ஆபீஸ் வர்றது... பரமசுகம்! வேலைல இன்னும் கவனம் போகும். அப்படிப் போறதாலேயே அது இன்னும் சிறப்பா வந்துரும். அப்படிச் சிறப்பா வர்றது தெரியும் போது, ரெண்டு வேலை முடியற இடத்துல, நாலு வேலை முடியும். அப்படி வேலை பார்த்த நிம்மதியோட, மழைல நனைஞ்சுக்கிட்டே வீடு திரும்புவோம். மனசும் மலர்ந்து போயிருக்கும். நிம்மதியான தூக்கமும் நிச்சயம்!
மழையை மழைன்னும் சொல்லலாம். மழையை, அம்மா, காதலி, குழந்தை, உற்சாக டானிக், ரோல்மாடல்னும் சொல்லலாம்
Comments
Post a Comment