P .விஜயகுமார் -ஜெய்வந்த் HP ஏஜென்சிஸ் .உடுமலைப்பேட்டை
P .விஜயகுமார் -ஜெய்வந்த் HP ஏஜென்சிஸ் .உடுமலைப்பேட்டை
கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா .
விஜயகுமார் அவர்கள் நமது சமுதாயத்தில் வளர்ந்துவரும் இளம் தொழிலதிபர் ,தனது பெண்குழந்தை செல்வம் மருத்துவ கல்வி நுழைவு தேர்வு பயற்சி படிப்புக்கு வார இறுதியில் கோவை சென்றதால் கல்வி விழாவிற்கு வர இயலவில்லை . தான் நிகழ்வுக்கு வர இயலவில்லையென்றாலும் விழாவிற்கான ஏற்பாடுகளை ஒரு மாதம் முதலே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளை தினம் தோறும் தனது பணிகளுக்கு இடையிலும் கேட்டு அறிந்து அனைவரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உதவிகளை செய்து தந்தார் .
விஜயகுமார் அவர்களை சிறுவயது முதல் அறிந்துள்ளேன் ..அவரின் பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் வரையும் கல்வி,விளையாட்டு சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் ஈடுபாடு மிக்கவர் .அவரின் பணிக்காலங்களில் கோவையில் 1990 காலங்களில் புதிதாக ஆரம்பித்த பன்னாட்டு மொபைல் நிறுவனத்தில் (BPL ,AIRCEL ,AIRTEL ) விற்பனை பிரதிநிதி யாக தனது பணியை ஆரம்பித்து DGM -TAMILNADU என்ற உயர்பதவி வரை பணியாற்றினார் .இவர் கோவையில் பன்முகத்தன்மை கொண்ட சிறு வியாபாரிகள் முதல் பன்னாட்டு நிறுவன தொழில் அதிபர்கள் வரை சந்தித்து தனது பணியை சிறப்பாக செய்தார் .பன்னாட்டு நிறுவனத்தின் பணியை முடித்துக்கொண்டு தனது சொந்த நிறுவனம் உடுமலையில் ஜெய்வந்த் HP GAS விநியோகாஸ்தாரக ஆரம்பிப்பதற்காக உடுமலை வந்து சுற்றுவட்டார பகுதியில் பணியை செய்துகொண்டு உள்ளார் .
நமது சமுதாய விழா எந்த நிகழ்வாக இருந்தாலும் அழைப்பை ஏற்று தனது பங்களிப்பை கேட்பதற்கு முன்னாலே இவரின் பங்களிப்பை அளித்துவிடுவார் .உடுமலையில் அரசு மற்றும் தனியார் துறை என்று பன்முகத்தன்மை கொண்ட நண்பர்களின் மத்தியில் நன்கு அறிமுகமானவர் .உடுமலையில் ஆன்மீக விழா ,பொருளாதாரம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் இவரின் பங்களிப்பு இருக்கும் .நமது சமுதாயத்தில் வளரும் குழந்தை செல்வங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிககளை ஏற்பாடு செய்து கம்பள சமுதாய வளர்ச்சிக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெற மிக உறுதுணையாக உள்ளார் .இவரை போன்ற உதவும் நல்உள்ளங்களை பயன்படுத்திக்கொண்டு சமுதாயத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லவேண்டும் .
மிக்க மகிழ்ச்சி. அன்பு P .விஜயகுமார் அவர்களுக்கு .வாழ்த்துக்களும் நன்றிகளும்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.













Comments
Post a Comment