உடுமலை பொறியாளர் சரவணகுமார் -வென்சப்பட்டி
உடுமலை பொறியாளர் சரவணகுமார் -வென்சப்பட்டி
கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
உடுமலைப்பேட்டை ,தளி ரோடு -குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் )
காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா .
தம்பி பேசும்பொழுது சிறு வயது முதலே யாருடைய ஆலோசனை இல்லாமல் தன் சுய விருப்பத்தின் பேரில் ,தனக்கு தானே மனோ திடத்துடன் பள்ளிப்படிப்பையும் ,பொறியியல் கல்லூரியில் பயின்று பன்னாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்று தன் விடாமுயற்சியும் ,கல்வி அறிவை வளர்த்துக்கொண்டு ..தான் பயிலும்பொழுது யாரும் இது போன்று தற்பொழுது உள்ள அருமையான சொந்தங்கள் போல் வழிகாட்டல்கள் இல்லையென்றும் இருந்திருந்தால் மேலும் வேலைவாய்பிலும் ,கல்வியியலும் மேலும் மேன்மை அடைந்திருப்பேன் அழகாக கலந்துரையாடினர் .
நமது சமுதாய இளைஞர்கள் படித்து உள்ளூரில் இருக்கவே ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் ,வேலைவாய்ப்பு எங்கு இருக்கிறதோ அங்கு சென்று தனக்கான வேலைவாய்ப்பை பெற்று பணிபுரிந்து தன் திறமைகளை வளர்த்து 10 ஆண்டுகள் தன்னிறைவு பெற்று ..தன் சொந்த ஊரில் ,கிராமத்தில் தனக்கான வேலைவாய்ப்புகளை பெற்று நம் சமுதாய சொந்தங்களுக்கு வழிகாட்டவேண்டும் என்று தன்னுடைய ஆதங்கத்தை விருப்பத்தை வெளிப்படுத்தினார் ..
தான் 10 வருடகாலம்வெளி மாநிலத்தில் பணியாற்றிவிட்டு தற்பொழுது வீட்டில் இருந்தபடியே தன் பணிநேரத்தில் அலுவலக பணி செய்து .குடும்பத்தார்க்கு வேண்டிய பணிகள் செய்து வருகிறார் .இப்பொழுது எங்கு சென்று வேண்டுமானாலும் பணியாற்றி வேலைவாய்ப்பை பெற்று தன்னிறைவு பெற்று திகழமுடியும் என்று தன்னம்பிகையோடு வாழ்வில் நம் சொந்தங்களுக்கு தன் சிறுவயதில் முன்னோடியாக திகழ்கிறார் .
தற்பொழுது கல்வியில் இட ஒதுக்கீடு அரசு வேலைவாய்ப்பு பெற்று அதன் பலன்களை பெற்று பயனடைய வேண்டும் என வேண்டுகோளையும் தெரிவித்தார் அதற்கான வழிகாட்டுவதாகவும் தெரிவித்தார் ,மிக்க மகிழ்ச்சி. அன்பு தம்பிக்கு .வாழ்த்துக்களும் நன்றிகளும்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.


Comments
Post a Comment