மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு கஞ்சி ஊத்து-மதகடிப்புதூர் ,ஆண்டிபட்டி
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு கஞ்சி ஊத்து-மதகடிப்புதூர் ,ஆண்டிபட்டி
குமண வள்ளல் வாழ்ந்த பகுதி சஞ்சீவி மலை என்றும் கரடு என்றும் சொல்லக்கூடிய குன்றுகளில் இயற்கையாக நீரூற்று இருப்பது இயல்பு. அதுவும் வழிபாடு உள்ள இடங்களில் இருக்கும் நீருற்றுகளுக்கு சுணைகள் என்று இன்றும் மக்கள் வழக்கில் சொல்லி வருகின்றனர்.
இந்த நீர் உருவாகும் மரத்தின் வேரும், அந்த மண்ணுமே இந்த வெள்ளை நிற நீர் வரக்காரணமாக உள்ளது. அதே சமயம் அதற்கு மிக அருகாமையில் சுமார் ஒரு மீட்டர் தூரத்தில் உருவாகி ஓடிவரும் நீருற்றுகளின் வழியே மிகவும் சாதாரண ஊற்றாக வந்து கொண்டிருக்கின்றது.
இவ்வளவு பெரிய மலைத்தொடரில் சஞ்சீவி மலை என்று சொல்வதற்கு இது ஒன்றே சான்றாக அந்தப் பகுதி மக்கள் வட்டார வழக்கில் சொல்கின்றனர்.
ஓரு இடத்தில் மட்டுமே இது போன்ற வெண்மையான நிறத்தில் வழிந்தோடி வருகிறது. இதுவும் கீழே வரும்போதும், அடுத்த நீரோடையுடன் சேரும் போது செம்புலப்பெயல் நீர் போல அதன் வண்ணமும் தன்மையும் மாறி விடுகின்றது.




Comments
Post a Comment