திருமதி.சிவரஞ்சனி சரவணகுமார் -வழக்கறிஞர் -கோவை-பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை
கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...
திருமதி.சிவரஞ்சனி சரவணகுமார் -வழக்கறிஞர் -கோவை-பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை
கல்வியில் முதுகலை மற்றும் வழக்கறிஞர் படிப்பு ..நம் சமுதாயத்தின் வளரும் வழக்கறிஞர் ..இவரிடம் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வளர்ந்து வருபவர் ..தன் தந்தையின் கனவை நிறைவேற்றியவர் ..தன் சிறு வயது கனவு நிறைவேறும்போது ..அருகில் தந்தை இல்லை ..அவரின் ஆத்ம ,ஆசியும் எங்களின் ஆசியும் அவர்களுக்கு எப்பொழுதும் உண்டு .
கல்வி வளர்ச்சி குழுவில் பேசும்பொழுது நம் சமூக மக்களுக்கு தேவையான மேற்கல்வி குறித்தும் ,பெண்கள் கல்வி குறித்தும் ,வழக்கறிஞர் கல்விக்கு தேவையான உதவிகளை எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு கேட்கலாம் என்று கூறியுள்ளார் .சட்டப்பணிகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செவ்வனே பணி செய்பவர் .
பொறுப்பாக தன் பணியை செவ்வனே செய்து வருபவர் .இவரின் அரசியல் குரு ..வைகோ அவர்கள் ..ம தி மு கா ..கோவை வழக்கறிஞர் பெண்கள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளது எங்களுக்கு பெருமையே..
தற்பொழுது சங்கங்கள் ,அறக்கட்டளைகள் என்றில்லமால் அனைத்து நமது கம்பள சொந்தங்களான இளைய தலைமுறையினருக்கு உதவிகள் செய்வது வரும் தலைமுறையில் கல்வி .வேலைவாய்ப்பு ,பொருளாதாரம் மூன்றிலும் மின்னுவார்கள் என்று அவரின் தன்னம்பிக்கையை பாராட்டுவோம் .வாழ்த்துவோம்


Comments
Post a Comment