பெரியகோட்டை .கருணாநிதி - உடுமலைப்பேட்டை
பெரியகோட்டை .கருணாநிதி - உடுமலைப்பேட்டை
கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா .
நமது அண்ணன் கருணாநிதி அவர்கள் நிகழ்ச்சி நிரல் அன்று பணி சம்பந்தமாக வெளியூர் சென்று இருந்ததால் அவரால் வர இயலவில்லை .அவர் வராவிட்டாலும் நம் சமுதாயத்தில் கல்வி ,வேலைவாய்ப்பு பற்றி நிகழ்வு என்றால் தவறாமல் கலந்துகொண்டு அவரின் விழாவிற்கான பங்களிப்பை நிறைவேற்றி விடுவார் .
எனக்கு தெரிந்து அவரின் பள்ளிக்காலத்தில் இருந்து அவருடைய நட்பு இன்று வரை தொடர்கிறது .ஏன் என்றால் என் தந்தையும் ,அண்ணன் அவர்களின் சிறுவயது நண்பர்கள் ,சொந்தங்கள் அதனால் தான் இருவரின் தந்தைகள் மறைந்தாலும் அவர்களின் நினைவாக என் நட்பு வட்டம் ,சொந்தங்களின் நட்புவட்டம் இன்று வரை தொடர்கிறது .அண்ணன் அவர்களின் எந்த செயல்பாட்டு நிகழ்வு என்றாலும் அவருடைய சுறு சுறுப்பான வேகமான செயல்பாடுகள் பார்ப்பவர்களை தொற்றிக்கொள்ளும் ..
தனது இளம்வயதிலேயே வழக்கறிஞரிடம் பணிபுரிந்ததால் ,அரசு அலுவலகங்கள் ,காவல்துறை தொடர்பு ,என பலதரப்பட்ட துறை சார்ந்த மக்களின் தொடர்புகளை ,சட்ட நுணுக்கங்கள் பற்றி இவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் .
அண்ணன் அவர்கள் ஊர்க்காவல் படையில் தன் இளம் வயதில் சேர்ந்து ,காவல்துறை பணிகளுக்கும் உற்ற துணையாக ,அரணாக பொதுமக்களின் பணிகளை செவ்வனே பணிகளை மேற்கொள்ளவார் ,நமது சமுதாய மக்கள் காவல் துறை சார்ந்த பணி ,அரசியல் ,பண்பாடு ,ஆன்மீக திருவிழா ,என்றால் முதலில் இவரின் பெயரும் ,முகமும் தான் நினைவுக்கு வரும் ..அந்த அளவுக்கு இவரின் செயல்பாடுகள் மன நிறைவாக இருக்கும் .நம் சமுதாய சொந்தங்களின் புள்ளி விவரங்கள் விரல் நுனியில் வைத்திருப்பார் அந்த அளவுக்கு பன்முக தன்மை செயல்பாடுகளோடு இருப்பார் .
அண்ணன் அவர்களை பாராட்டி திருப்பூர் மாவட்ட குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியமைக்கு ஊர்க்காவல் படையைச் சேர்ந்த திரு K கருணாநிதி அவர்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் இன்று 26.01.2022 ல் நற்பணி சான்றிதழ் வழங்கப்பட்டது. இது போன்று பொதுமக்கள் ,நம் சமுதாய மக்களின் நலன் சார்ந்த பணிகள் சிறப்பாக அமைந்து உள்ளது .
மிக்க மகிழ்ச்சி. அன்பு அண்ணன் கருணாநிதி அவர்களுக்கு .வாழ்த்துக்களும் நன்றிகளும் 










என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.












Comments
Post a Comment