போட்டோ ராஜேந்திரன் -வென்சப்பட்டி உடுமலைப்பேட்டை
போட்டோ ராஜேந்திரன் -வென்சப்பட்டி உடுமலைப்பேட்டை
கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
உடுமலைப்பேட்டை ,தளி ரோடு -குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் )
காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா .
நம்ம தம்பி டிஜிட்டல் போட்டோ ராஜேந்திரன் அவர்கள் அவர் நம் சமுதாய வளர்ச்சிகான பணிகள் எங்கு நடந்தாலும் [பாகுபாடு இல்லாமல் அவரின் பங்களிப்பு கேட்காமலே தேடி வந்து நன்கொடை அளிப்பார் ..இன்று நேற்று அல்ல .எனக்கு தெரிந்து 15 வருடங்களாக ...அவரின் சமுதாய பணி இருக்கும் ..ஏன் என்றால் பொதுத்தளத்தில் பணிபுரிபவர்கள் எல்லாம் .தனித்துவம் பெற்று மிளிர்வார்கள் ,தம்பி எந்த கூட்டத்திற்கு சென்றாலும் கலகலுப்புக்கு பஞ்சம் இருக்காது .என்றும் புன்னையுடன் வலம்வருவார் ,தம்பி எந்த நிகழ்வு சென்றாலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பொறுப்பை ஒப்படைத்து விடுவார்கள் .நிகழ்ச்சி நிரல் ஆரம்பிக்க ஒரு சில நிமிடங்களுக்கு முன் பொறுப்பை ஒப்படைத்தால் கூட ..அங்கு இருக்கும் நபர்களை பார்த்தவுடன் அவர்களின் செயல்பாடுகளை பார்த்து கற்பூரம் மாதிரி மேடையில் அவர்களை பற்றி கூறி மேடை ஏற்றி அமரச்செய்வார் ..ஒரு சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி பற்றி தெரிவித்தால் கூடுதலாக தரவுகளைக்கொண்டு நிகழ்ச்சியை அருமையாக நடத்தி முடித்துக்கொடுப்பார் ..அது போன்று இந்த கல்வி ஊக்க திருவிழாவை ,வேலைவாய்ப்பு ஆலோசனை விழாவை சிறப்பாக முடித்த கொடுத்துள்ளார் .
நம் சமுதாய சொந்தத்தில் .இன்றய இளைய சொந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தொழில்முனைவராக வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி ..பொது தளத்தில் சொந்தங்கள் எல்லாரும் வளர்ச்சியுடன் ,நம் சமுதாய பற்றோடு ..பணியாற்றுவது ...மதிப்பும் ,மரியாதையுடன் பங்கேற்றுவருவது மிக்க மகிழ்ச்சி.
அன்பு தம்பி புகைப்பட கலைஞர் ராஜேந்திரன் அவர்களுக்கு .வாழ்த்துக்களும் நன்றிகளும்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.










.





Comments
Post a Comment