பொள்ளாச்சி பொறியாளர் எஸ் .அசோகன் அவர்கள் (வெளிநாட்டு வாழ் இந்தியர் ) .....🥰🙏📒🖋️📡🎙️🏠📚✈️✈️🚉🚉
பொள்ளாச்சி பொறியாளர் எஸ் .அசோகன் அவர்கள் (வெளிநாட்டு வாழ் இந்தியர் ) .....🥰🙏📒🖋️📡🎙️🏠📚✈️✈️🚉🚉
நமது கம்பள சமுதாயத்தின் இளைஞர்கள் ,பெண்குழந்தைகள் ..கல்வி வளர்ச்சிக்கு ஆர்வமும் கொண்டவர் .அண்ணன் பொறியாளர் அசோகன் அவர்கள் (பன்னாட்டு நிறுவனம் ).எனக்கு தெரிந்து 13 வருடங்களுக்கு மேல் நிதி உதவிகள் செய்துள்ளார்கள் ..இதை கூட அவர் சொல்லவில்லை ..அவரால் பயனடைந்தவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் ..இவரை முதன் முதலாக நான் சந்தித்தது திருப்பூரில்.. எத்தலப்ப மகாஜன சங்கம் நடத்திய நம் சமுதாய குழந்தை செல்வங்களுக்கு கல்வி ஊக்க தொகை அளித்து தனது சமுதாய உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் ...அண்ணன் அவர்கள் பல வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களில் பல நாடுகளில் பணியாற்றி கொண்டு வருபவர் ..இப்பொழுதும் பணியாற்றி கொண்டிருக்கிறார் தற்பொழுதும் பணி தொடர்கிறது ..உழைப்பதற்கு ஏது வயது என்றும் இளைஞரை போல் பணியாற்றுவது வெகு சிலரே ..நானும் இவரை பின்தொடர்கிறேன் ...
முதன் முதலில் ஆரம்பித்த 7 வருடங்களுக்கு முன் கம்பள விருட்சம் அறக்கட்டளை ஆரம்பிக்கும் பொழுது ...முதல் மனிதராக வந்து அறக்கட்டளை உறுப்பினராக சேர்ந்து நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தார்.கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் முத்தான ஆலோசகர் ....நமது திருப்பூர் மாப்பிள்ளை கார்த்திகேயன் அவர்களின் மூலம் இந்த நன்கொடை அளித்தார் ..இப்பொழுதும் நம் கம்பள குழந்தை செல்வங்களுக்கு அறக்கட்டளை மூலம் கல்வி நிதிஉதவி அளித்துக்கொண்டுள்ளார் ...
கடந்த ஞாயிறு அன்று உடுமலைபேட்டையில் நமது கம்பள இளைய சொந்தங்களுக்கு கல்வித்தொகையும் ,அவர்களின் அரசு தேர்வுகளுக்கு பொதுஅறிவை மேம்படுத்த விலை மதிப்புள்ள புத்தகங்களை அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ,வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் அவரது நினைவுகள் முழுவதும் ..நம் கம்பள சமுதாய குழந்தை செல்வங்கள் கல்வி வளர்ச்சியின் மீது இருக்கும் ..மாதம் ஒருமுறை என்னிடம் சங்ககங்கள் ,அறக்கட்டளையின் செயல்பாடுகளை கேட்டு அறிந்துகொள்வார்..
தற்பொழுது கம்பள சமுதாயத்தில் பல சங்கங்கள் ,பல அறக்கட்டளைகள் வந்து செயல்பட்டு கொண்டு உள்ளதால் ..பல அமைப்பகளை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து அதிகம் பேருக்கு கல்வி ஊக்கத்தொகை ,ஆலோசனைகள் பன்மடங்கு மூலம் இன்றைய குழந்தை செல்வங்களுக்கு பரிசளிக்க முடிகிறது ..
உண்மையான நோக்கம் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பொருளாதாரத்தில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாமல் உள்ள குழந்தைச்செல்வங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி கட்டணம் கட்டுவதற்கு சிரமப்படும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி கட்டணத்தை பல நல்ல உள்ளங்கள் கொடைவள்ளல் உள்ள சொந்தங்களின் துணையோடு அவர்களுக்கு உதவுதான் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று இந்த கல்வி பரிசு ,மேற்படிப்பு ஆலோசனைகள் என விழா நடத்தப்படுகிறது .
இதில் பலதரப்பட்ட சொந்தங்கள் பல துறைகளில் உள்ள பணியாற்றி கொண்டிருக்கிற சொந்தங்களை ஒருங்கிணைத்து அவர்களின் மூலம் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சி .இது நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது ..இது மேலும் தொடரும் ...
தற்பொழுது சங்கங்கள் ,அறக்கட்டளைகள் என்றில்லமால் அனைத்து நமது கம்பள சொந்தங்களான இளைய தலைமுறையினருக்கு உதவிகள் செய்வது வரும் தலைமுறையில் கல்வி .வேலைவாய்ப்பு ,பொருளாதாரம் மூன்றிலும் மின்னுவார்கள் என்று அவரின் தன்னம்பிக்கையை பாராட்டுவோம் .வாழ்த்துவோம் .
..குறிப்பாக இந்த உதவிகளுக்கு பெரும் துணையாக இருக்கும் எங்கள் அக்கா வேதா அசோகன் (பேபி ) அவர்களுக்கு நம் கம்பள சமுதாயம் சார்பாக வாழ்த்தி வணங்குவோம் ..நம் சமுதாயத்தில் அவ்வளுவு சீக்கிரம் பெண்கள் பொது தளத்திற்கு வரமாட்டார்கள் ,படித்த இக்காலத்திலும் வெகு அரிதாகவே விழாக்களில் கலந்து கொள்வார்கள் .தற்பொழுது தான் வெகு சில கூட்டங்களுக்கு மட்டும் விழாவில் பங்கு எடுத்து வருபது மிக்க மகிழ்ச்சி .நன்றியும் வாழ்த்துக்களும் .
🥰✒️📒🎙️📡💦🌨️🌳🌱🌴🙏
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.🥰🙏📚✒️📗📡🎙️









Comments
Post a Comment