பத்திரிகையாளர் செந்தில்ராம் அவர்களுக்கு நன்றிகள்
பத்திரிகையாளர் செந்தில்ராம் அவர்களுக்கு நன்றிகள்
கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
உடுமலைப்பேட்டை ,தளி ரோடு -குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் )
காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா .
செந்தில்ராம் அவர்கள் பேசும்பொழுது இங்கு கூடியிருக்கும் சொந்தங்களில் பெண்களே அதிகம் வந்துள்ளனர் .இதுவே கல்விக்கும் ,பொருளாதாரத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு ,எப்பொழுதுமே உடுமலை சார்ந்த பகுதி பன்முக மக்கள் சார்ந்த இடம் இங்கு அனைத்து துறைகளிலும் கலந்து மக்களுடன் கலந்து பழகுவதால் தனி மனித வளர்ச்சி வேகத்துடனும் ,விவேகத்துடனும் தனிப்பட்ட சொந்தங்களின் வளர்ச்சி கூடுதலாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது .உடுமலை பகுதி மற்ற பகுதிகளில் இருந்து வரும் சொந்தங்கள் இங்கு வாழ்வாதாரம் சார்ந்து துறைகளில் வளர்ச்சி பெற்றுவிடுகிறார்கள் .உடுமலை சுற்றி மற்ற மாவட்ட சொந்தங்களின் குடிபெயர்வு அதிகம் .இதை கண்கூடாகவே காணலாம் .
உடுமலைப்பேட்டை என்றாலே வீரத்திற்கும்,விவேகத்திற்கும் ,பண்பாட்டுக்கும் பெயர் பெற்ற மண் .. ..உடுமலைப்பேட்டையில் பிறந்தவர்கள் என்றும் வரலாறு படைத்தவர்கள் ...எந்த துறையாக இருந்தாலும் அதில் தன் அறிவாற்றலால் ,உழைக்கும் திறமை ,சேவை மனப்பான்மை ,கொண்டவர்களே அதிகம் ..உடுமலையில் வளர்ச்சிக்கு என்றும் பங்காற்றுவது செய்தித்தாள்கள் ..அதுவும் மண்ணின் மனம் மாறாமல் ..வரலாறுகள் ,சிறப்புமிக்க கோவில்கள் .அரசுத்துறை ,தனியார் துறை ,விவசாயம் ,தொழில் துறை ,அரசியல் ,சமூக அக்கறை ,எந்த பாகுபாடும் இல்லாமல் ..நடுநிலையோடு செய்திகளை வெளியிடும் தினமலர் ...அதுவும் உடுமலைப்பேட்டை இணைப்பு பகுதியில் வரும் செய்திகள்,மற்ற செய்திகள் என்றாலும் உடுமலை மக்களுக்கு சுவாரிஸ்யம் குறையாமல் அழகா செய்திகளை தொகுத்து வழங்கும் இனிய நண்பர் ....
வழிகாட்டுதல் மௌனம் ஒரு மகாசக்தி...
இந்த மௌனத்தை ..நம்ம மாப்பிள்ளை செந்தில்ராம் ..எனக்கு உணர்த்தியுள்ளார் ...வாரத்தில் எப்படியாவது மாப்பிள்ளையுடன் ..ஒரு தொழிலதிபர் ,துறை சார்ந்த அரசு அதிகாரி..விவசாய தொழில் புதிய தொழில் நுணுக்கங்கள் பற்றி அறிய சந்திக்கும் விவசாயி ...சந்திக்கும் செல்லும்போது அழைத்து செல்வார் ..எனக்கும் வியாபார தொடர்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..நம்ம மாப்பிளை நேர்முக உரையாடலில் அதிகம் பேசாமல் ..அவரை பேசவைப்பதற்கு சில கேள்விகள் மட்டும் அழகாக ..தனக்கு வேண்டிய செய்தியை உள்வாங்கிறார் ...நான் உன்னிப்பாக கவனிப்பேன் ..நேரம் போவது தெரியாது ..தகவல்கள் வந்துகொண்டே இருக்கும் ..மிக சுவாரிஸ்யமாக ..அதை அவரின் எழுத்தில் கொண்டுவந்து படிக்கும்போது ஆர்வம் அலாதியானது ..
இன்றைய விழாவில் தன் கடுமையான பணி சூலிலும் வந்து இளைய சொந்தங்களை சந்தித்து தனது சிறப்பான மதிப்பு மிக்க ஆலோசனைகளை வழங்கி சென்றார் .
மிக்க மகிழ்ச்சி. என் அன்பு மாப்பிள்ளைக்கு .வாழ்த்துக்களும் நன்றிகளும்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.



Comments
Post a Comment