உறுமி மேளக்காரன்
சிற்பத்தின் பெயர் - உறுமி மேளக்காரன்
சிற்பத்தின் அமைவிடம் - கரூர் அருங்காட்சியகம்
ஊர் - கரூர்
மாவட்டம் - கரூர்
அமைவிடத்தின் பெயர் - கரூர் அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை - வாழ்வியல் சிற்பம்
விளக்கம் -
தனிச் சிற்பமாக அமைந்துள்ள இந்த இசைக்கலைஞன் உறுமி மேளக்காரன் ஆவான். வல மார்பின் குறுக்கே செல்லக்கூடிய தோற்பட்டையில் கட்டப்பட்டுள்ள உறுமி மேளத்தை இரு கைகளாலும் இசைக்கிறான்.
இரு கைகளிலும் உறுமியை வாசிக்கும் இரு குச்சிகளைக் கொண்டுள்ளான். இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர். முறுக்கிய மீசையுடன், பீடத்தின் மீது நின்றவாறு மேளம் இசைக்கும் இக்கலைஞன் வீரன் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறான்.
ஆக்கப் பொருள் - கல்
காலம் / ஆட்சியாளர் - கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு, நாயக்கர் காலம்
உறுமி காரனுக்கு சிலை அமைத்து அழகு பார்த்த நாயக்கர்கள்.
Comments
Post a Comment