கைபீது என்பது மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்ட விவரக் குறிப்பு..
கைபீது என்பது மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்ட விவரக் குறிப்பு..
கைபீது தான் பல வரலாறு அறிஞர்கள் வரலாறு எழுதும் போது குறிக்கப்படும் ஆதாரங்கள்..
கைபீதுகள் 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பாளையக்காரர்கள் கும்பினியார்களுக்கு தாங்கள் வழி வழியாக இந்த பாளையங்களை ஆட்சி செய்து உள்ளோம் அதனால் எங்களுக்கு தாருங்கள் என்று கூறி எழுதிய கடிதங்கள்..
பாளையக்காரர்கள் தங்களை பற்றி எழுதும் தகவல்களில் கால குறிப்புகளில் சில தவறுகள் இருந்தாலும் இருக்கலாம்..
ஆனால் தங்கள் சாதியை யாரும் மாற்ற மாட்டார்கள்..
உதாரணமாக கம்பளத்தார் வம்சாவளி குறிப்புகளில் யாதவ குலம், கோபால வம்சம், துவாரகையில் இருந்து வந்தவர்கள், கிருஷ்ணரின் வழியினர் என்பதை போன்று எழுதி இருப்பர்..
முத்தரையர் கள் பாளையக்காரர் குறிப்பில் தாங்கள் கண்ணப்ப நாயனார் வம்சாவளி, வேடுவ குடி என்று இருக்கும்..
மறவர்களின் நடுவக்குறிச்சி பாளையக்காரர் குறிப்பில் இருக்கும் குறிப்பில் தாங்கள் மறக் குலம்.. பாண்டியர்களின் சந்திர குலத்துக்கு பெண் தந்து பழக்கம் இல்லை என்பதை போன்ற செய்திகள் வரும்..
இது தங்கள் குலத்தவர்கள் பாண்டியர்கள் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது..
அதே போல வெள்ளாளர்கள் சில பாளைய குறிப்பில் தாங்கள் கங்கர்கள், வேளாள மரபினர் என்றே இருக்கும்..
மேலும் வன்னியர்கள் பாளையக்காரர்கள் வம்சாவளி யில் வேறு விதமாக கர்ண பரம்பரை கதைகள் இருக்கும்..
பாளையக்காரர்கள் இந்த சமூகம் இந்த குலம் என்பது வரை நாம் அறிந்து வைத்து இருப்போம்... அந்த சமூகத்தில் பிறந்தவர்கள் அவர்கள் கூறிய வம்சத்தில் தான் வந்து இருப்பர்.
பாளையக்காரர்கள், மன்னர்கள் அது எந்த சமூகமாக இருந்தாலும் சாதி விசயத்தில் மாற்றி எழுத வாய்ப்பே இல்லை..
கைபீது பற்றி கேட்ட நண்பருக்கு...













Comments
Post a Comment