கரைவழி நாடும் நாகரீகமும் - உருவான விதம்
கரைவழி நாடும் நாகரீகமும் - உருவான விதம்
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
2022 ஏப்ரல் 16 க்குப் பிறகு மீண்டும் ஒரு மண்சார்ந்த பெருநூல் வெளியிட்டு விட்டோம். அனைத்தையும் ஆவணப்படுத்தும் நாம் இந்த கடந்த இரண்டாண்டு நிகழ்வுகளையும் கொஞ்சம் அசைபோடுவோம். நூலைப்பற்றியும், நல்ல மனிதர்களைப்பற்றியும் கணக்கு வரவு செலவுகளையும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். இது ஆறாவது ஆண்டு 2024 கரை வழி நாடும் நாகரீகமும்.
கடந்த 2022 செப்டம்பர் 5 ஆம் நாள் தலைவர் திரு. குமாரராஜா இல்லத்தில் சில கசப்பான நிகழ்வுகளுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தென்கொங்கின் தொன்மங்கள் எனது பெயரில் வரவேண்டும் மற்ற பெயரில் வரக்கூடாதெனவும் இறுதியாக உறுதி செய்ப்பட்டு பல்வேறு மன நெருக்கடிகளுக்குப் பிறகு நூல் வெளிவந்துவிட்டது.
அதற்கடுத்த சென்னை தொல்லியல் துறை அலுவலகத்தில் முதன்மைக் கண்காணிப்பாளராக திருமதி. மூர்த்தீஸ்வரி இருக்கும்போது அவர்தான் இந்த அமராவதி நதிக்கரையினைப் பற்றியும் இங்குள்ள கல்வெட்டுகள் குறித்தும், இந்த நதிக்கரையிலிருந்து உருவான நாகரீகத்தையும் எழுதச்சொன்னார். அன்று முதல் அந்த நினைவு இருந்தாலும் முழுமையாக கருத்துரு கிடைக்காததால் கொஞ்சம் காலம் தாழ்த்தி வந்தோம்.
சரி வழக்கம் போல் சிவாவுடன் களப்பயணம் மேற்கொண்டு நமது கொழுமத்து குறுமுனியிடம் இது போன்று கரைவழி என்றும் கரைவளி என்றும் சொல்லும் போது பாப்பானுக ஏராளமான நிலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தானுக, இப்ப நம்மாளுக கையிலெ கொஞ்சம் கிடைச்சிருக்க. கடந்த காலங்களில் கல்லாபுரம் முதல் கடத்தூர் பல்லாயிரம் நிலங்கள் பார்ப்பனர்கள் வசம் இருந்ததையும் இப்போது நம்மவர்கள் கையிலிருப்பதையும் அறிய முடிந்தது. லேசாக ஒரு கருத்துருவாக்கம் கிடைத்தது.
நமது ஆவணம் தொகுதியில் கண்ணாடிப்புத்தூர், கடத்தூர், கொமரலிங்கம் பகுதியைத் தேடிப்பார்த்த போது ஒரு சில கல்வெட்டுகளும் கிடைத்தது. முனைவர் சசிகலாவுடன் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டு இந்தியக் கல்வெட்டு தொகுதி எண் 26 ஐப் பெற்றுக்கொண்டேன். இதில்தான் கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கொழுமம், கடத்தூர் போன்ற கோயில்களின் கல்வெட்டுகள் கிடைத்தது ஒரு ஆறுதலைத் தந்தது. சரியான வழியில்தான் பயணிக்கிறோம். சான்றுகள் உள்ளது என்ற மன நிறைவோடு கண்ணாடிப்புத்தூர், கொழுமம், கடத்தூர் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்தோம்.
கடந்த 2021 சூலை 29 ல் கொழுமம் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் செய்தியினை நமது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார். அப்பொழுது இந்தக் கல்வெட்டுகளை மட்டும் தொகுத்து கோயில் நன்னீராட்டு விழாவில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வந்தது. 2022 ல் அக்டோபர், நவம்பர் அல்லது டிசம்பரில் குடமுழுக்கு நிகழ்வு நடக்கும் அதில் நமது நூலும் வெளியிடலாம் என்ற பெரு மகிழ்வுடன் பணிகள் விரைந்தோடியது.
முனைவர் சசிகலாவும் இதற்காக ஒரு நாள்முன்னமே வந்திருந்து தங்கி கல்லாபுரம் கடத்தூர் வரையிலான ராஜ வழியில் காரில் அமர வைத்து சென்றதையும் மகிழ்வுடன் நினைவு கூர்வோம். 2022 ஏப்ரல் 29 ல் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் தொல்லியல் சார்ந்த ஒரு கருத்தரங்கில் பேச வைத்து , மாலை கடத்தூர், காரத்தொழுவு வந்ததும் மறுநாள் சென்னைக்கு கிளம்பி சென்று விட்டு மீண்டும் கரை வழிக்கு ஆவணப்படுத்துவதாகச் சொல்லி சென்றவர் இன்றும் வரைக்கும் வரவில்லை என்ன செய்வதுஅவரின் வேலைப்பளு அந்தளவிற்கு இருக்கிறது. நிகழ்வுக்கு வருவதாகச் சொன்னார் அதற்கும் வர இயலவில்லை.
கடந்த 2022 தொடக்கம் முதலே களப்பணிகளில் ஈடுபட்டு கரைவழிக்குண்டான கருவினை வைத்துக்கொண்டு எவ்விடத்தில் தொடங்குவது எவ்விடத்தில் முடிப்பது என்ற எல்லையை உருவாக்கும் வகையில் கொழுமம், கடத்தூர், கணியூர் என்று சென்று வந்தோம். ஒரு ஆய்வாளர் தன்னுடைய எல்லைப்பரப்பை நிர்ணயித்து அதற்குள் பயணப்பட்டால் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் கரைவழி என்பதும் கரைவழி நாடு என்பதும் கண்ணாடிப்புத்தூர், கடத்தூர், காரத்தொழுவு பகுதிகளைக் குறிப்பாக இருந்தது. ஆனால் கொங்கு நாட்டில் இருபத்து நான்கு நாடுகளில் உள் நாடுகளாக கரை வழி நாடும், ராஜராஜவளநாடும் இருப்பதை எண்ணிப்பார்க்கும் போது எந்தப் பகுதி ராஜராஜ வளநாடு என்ற ஆய்வுக்கு உட்படுத்தும்போது, கொழுமம், கல்லாபுரம், கொமரலிங்கம் ஆகிய பகுதிகளே ராஜராஜவளநாடு எனவும் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்து களப்பணிகளைத் தொடங்கினோம்.
கல்லாபுரத்தில் சிவன் கோயில் இல்லாதது வியப்பில் ஆழ்த்தினாலும், சொக்கநாச்சியம்மன் கோயிலே பழங்கால சிவத்தலமாகக் கூறுகின்றனர். கரைவழியில் அனைத்து ஊர்களிலும் சிவத்தலங்கள் இருக்கும் போது கல்லாபுரத்தில் மட்டுமே வழிபாட்டில் சிவத்தலம் இல்லாதது இன்னமும் வியப்பில் ஆழ்த்துகிறது.
கல்லாபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகள் ஏழுரம்மன் கோயில், சொக்க நாச்சியம்மன் கோயில், அன்னகத்து மேடு, கோபால்சாமி கோயில், மலம்பிடாரியம்மன் வழிபாடு, பிராட்டி வழிபாடு, தாய்த் தெய்வ வழிபாடுகளை உள்ளடக்கியதாக பயணம் தொடங்கியது. தொடங்கும் போது கடந்த 2022 ல் இறுதியில் கரைவழி நாட்டுக் கொழுமம், கரைவழிநாட்டுக் கடத்தூர், கரைவளி நாட்டு நாகரீகம் எனும் மூன்று தலைப்புகளில் சுமார் 300 பக்கங்கள் கொண்டதாக புத்தகம் போடலாம் என்ற நினைப்பில் பணிகள் தொடங்கி கிட்டத்தட்ட 2024 சனவரி வரியிலும் இதே நிலை நிலவி வந்ததை போகப் போக தெரிந்து கொள்ளலாம். 2022 சூன், சூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் 6 ஆம் நாள் பவா செல்லதுரை பதிவு வரையிலும் புத்தகம் வெளியிட முயற்சி மேற்கொண்டு கடைசியில் இது இயலாதென்று நிறுத்திவிட்டு நிகழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டோம்.
2023 திருவள்ளுவர் நாள் விழா சனவரி 21 ல் திட்டமிட்டிருந்ததால் டிசம்பர் சனவரியில் வெறுமனே களப்பணியோடு நின்று விட்டு புத்தகம் தட்டச்சு பணிகளை நிறுத்தி வைத்தேன். சனவரி 21 நிகழ்வு முடிந்ததும் ஏற்கனவே 300 பக்கங்கள் தட்டச்சு செய்து வைத்திருந்தேன். கரைவளி நாகரீகத்தை அய்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் முழுமையாக இதை எழுதித் தருவதாகவும் விவசாயம் தமக்கு மிகவும் விருப்பமான பணி என்றும் எழுத ஆரம்பித்தார்;. முதலில் நெல்லை மட்டுமே எழுத ஆரம்பித்தவர் கடைசியில் கேழ்வரகு, பனை வரையிலும் கரைவளி வேளாண்மையை பதிவு செய்து கொடுத்தார்.
பிப் 2023 முதல் தட்டச்சு வேகமாக செய்து சூன் மாதத்தில் ஈரோடு சரவணன் என்பவரிடம் அனுப்பி ஆகஸ்ட் மாதத்தில் மூன்று புத்தகங்களுக்கான அச்சுப்பணிகளும் லே அவுட் பணிகளும் நிறைவு பெற்று வைத்திருந்த நிலையில் செப்டம்பர் 21 ஆம் நாள் நமது பாராளுமன்ற உறுப்பினரிடம் இது போன்று மூன்று புத்தகங்கள் போடுவதாகவும், அதற்குத் தங்களின் ஒத்துழைப்பு வேண்டுமென கேட்டபோது சுமார் ஒன்னே முக்கால் மணி நேரம் முழுமையாக செய்திகளைக் கேட்டறிந்தவர். மறுநாள் தொலைபேசியில் அழைத்து இது போன்று இந்த மூன்று புத்தகங்களையும் நான் அச்சாக்கித் தருகிறேன். அந்தப் பொறுப்பை உங்களுக்கான நான் செய்து தருகிறேன் மிகவும் உயரிய மனதோடு பேசியது நூலின் அச்சு நடவடிக்கை அடுத்த கட்டத்திற்குச் சென்றது.
செப்டம்பர் எம்.பி. பார்த்தது பெரிய திருப்பத்தைத் தந்தது. வழக்கமாக புத்தகம் போடுங்கள். ஏதேனும் உதவிசெய்கிறேன் என்று சொல்லுவார் என எதிர்பார்த்துத்தான் அவரிடம் சென்றோம். ஆனால் அவரோ, இது போன்று புத்தகம் எழுதுவது கடுமையான பணி, உங்களுக்குப் பெரியளவில் உதவி செய்ய வேண்டுமெனவும், அதுவும் பெரிய நிறுவனங்கள் உதவ வேண்டும் என்ற பெரிய ஆசையோடு பேசினார். அடுத்த நாள் ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று படிகள் எடுத்து அதைத் தனித்தனியாக பைண்டிங் செய்து கொடுக்கச்சொன்னார். நானும் அவ்வாறே சுமார் 1200 பக்கங்கள் கரை வழிநாட்டுக் கொழுமம், கரைவழி நாட்டுக்கடத்தூர், கரைவழி நாடுகளும் நாகரீகமும் எனும் மூன்று தலைப்புகளில் ஒரே வண்ணத்தில் 9 புத்தகங்கள் அச்செடுத்து அவரிடம் கொடுத்தேன். (ஒரே வண்ணத்தில்அட்டை போட்டுக் கொடுத்தது தவறெனப் பிற்பாடு தெரிந்தது)
மறுநாள் பொள்ளாச்சி சாலை சாயி பேக்கரி அருகில் மூன்று புத்தகங்களும் கொடுத்தேன். அதற்கு முந்தைய நாள் அவரது வீட்டிற்கு சென்று ஸ்பைரல் போட்டு கொடுத்ததையும் சேர்த்தினால் ஒவ்வொன்று நான்கு படிகள். சுமார் 4800 பக்கங்கள். அச்சும் நகலும் பைண்டிங்கும். முதலில் கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களிடமும், இரண்டாவது சுகுணா நிறுவனத்தாரிடமும், மூன்றாவது பொள்ளாச்சி என்.ஜி.எம். குழுமம் என்று சொன்னார். மூன்றில் ஏதாவது ஒரு நிறுவனத்தாரிடம் உதவி பெற்று மூன்று புத்தகங்களும் அச்சாக்கித் தருவதாகச் சொன்னார்.
நாங்களும் ஒரு பெரிய வேலை முடிந்தது அடுத்த வேலைக்குச் செல்வோம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது அடுத்த நாள் மாலை எம்.பி. அவர்கள் அழைத்து இது போன்று பொள்ளாச்சி மாணிக்கம் அய்யா அச்சு போட்டுத் தருவதாகவும் நீங்கள் சென்று செயலர் சி.ஆர் சந்தியுங்கள் அவர் உங்களுக்கு வழிகாட்டுதல் தருவார் என்று சொன்னார். அக்டோபர் 12 ஆம் தேதி பார்க்கும் போது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மொழி பெயர்ப்பு ஆய்வு மையத்தினர் சுணக்கம் காட்ட டிசம்பர் சனவரி புத்தகத்திருவிழா என காலமும் நேரமும் இறுதி வரை சுமார் சனவரி 28 வரை ஓடியும் மூன்று புத்தகங்கள் அச்சாக்க இயலாமல் இரண்டு புத்தகங்களை ஒரே புத்தகமாக அச்சாக்க அதுவும் பிப்ரவரி சனவரியில் இறுதி பெற்றது.
இதற்கு முன்பு அக்டோபரில் சிற்பி அவர்களை அவர்களது இல்லத்தில் புத்தகம் தொடர்பாக சந்திக்கும் போது கொழுமம் குறித்தான உரையாடல்களும், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், கடத்தூர் போன்ற ஊர்களுக்கு இவ்வளவு பெரிய புத்தகமா? எனக் கேள்வி கேட்டதையும் மறக்க இயலாது. மேலும், இலக்கியம், கவிதை, புதினம் குறித்தான அவரது விருப்பத்தையும், வரலாறு குறித்து அவருக்கு விருப்பம் குறைவாக இருந்ததையும் அவரது பேச்சின் வழி அறிய முடிந்தது.
முதலில் அலுவலகத்தில் பேசும் போது ஒரே தலைப்பில் இரண்டு புத்தகம் போடவேண்டும் எனவும். இரண்டு தலைப்புகளில் இரண்டு புத்தகம் போடக்கூடாதென கறாராகத் தெரிவித்து விட்டார் சிற்பி. இதனால் நாகரீகம் குறித்தும், கல்வெட்டு செய்திகள் குறித்தும் வௌ;வேறானவை எனத் தெரிவித்தும் அவர் இதை உள்வாங்க மறுத்து ஒரே தலைப்பில்தான் கட்டாயம் வரவேண்டும் தெரிவித்த பிறகு இது போன்ற கரைவழி நாட்டுக்கொழுமம், கரை வழி நாட்டுக் கடத்தூர், கரை வழி நாகரீகம் என இருப்பதை கரைவழி நாடுகளும், நாகரீகமும் என்ற ஒரே தலைப்பில் இரண்டு புத்தகங்களாக உருவாக்க ஒரு வழியாக இசைவு தெரிவித்தார்.
மேலும், நாம் கொடுத்த மூன்று புத்தகங்களில் இரண்டு புத்தகங்கள் கரைவழி நாகரீகம் மட்டும் அவர் கைக்கு போய் சேர்;ந்தது நம் மீது அவர் காட்டிய அளவீடும் குறைவாகவே இருந்தது. ஒரே புத்தகத்தை எதற்கு இரண்டு எண்ணிக்கையில் கொடுத்தீர்கள் என்ற கேள்வி இறுதி வரையிலும் எதிரொலித்தது. இந்த செயல் நம் செயல்பாடுகளின் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் குறைவு ஏற்பட்டது என்பதில் மிகையில்லை. அதுவும், மொழி பெயர்ப்பு மையத்தில் பணியாற்றும் பாலு என்பவர் சில தர்ம சங்கடமான உரையாடல்களும் சங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும் டிசம்பர் இறுதியில் எம்.பி. வீட்டில் உட்கார்ந்து கொண்டு அவரிடம் ஸ்பீக்கர் போனில் பேசியதும் அதற்கு அவர் ஒருமை பன்மை பிழை ஏராளமாக இருப்பதாகவும், தம்முடைய நிறுவனத்தின் மதிப்பு குறைந்து விடுவதும் என்பதையும் மீண்டும் மீண்டும் பேசியது மறக்கவியலாதது.
மீண்டும் பொள்ளாச்சி சென்று செயலரைப் பார்த்தும், அச்சுக்கான பணிகள் தொடங்கி இறுதியில் இரண்டு புத்தகம் இயலாதெனவும், ஒரு புத்தகம் மட்டுமே முடியும் எனவும், ஏற்கனவே மூன்று புத்தகங்களாக இருப்பதை இரண்டு புத்தகங்களாக வெளிவருவதால் மீண்டும் இன்னொரு புத்தகத்தையும் போட்டுத்தர எவ்வளவோ வலியுறுத்தியும் இறுதியில் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது.
சிற்பி அய்யா கொழுமம் எனும் ஊரை கழுமலம் என்று எழுதியிருப்பது தவறெனவும், இது இவ்வாறு அழைக்கக்கூடாதெனக் கூறியதும், ஏற்கனவே கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் கழுமலம் குறித்தான போர் நடைபெற்றதையும் உதாரணத்துடன் கூறிய போது சரிங்க துணைநூற்பட்டியல் எழுதும்போது இவ்வாறு தற்போது சீர்காழி எனும் ஊரையும் கழுமலம் என்ற பெயர் இருப்பதை வலியுறுத்தி பதிவு செய்யச் சொன்னார்.
ஊர் சார்ந்த வரலாற்றை எழுதுவதற்கு இவ்வளவு சிரமப்படவேண்டாம் எனவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியது அவர் வரலாற்று புரிதலையும் அறிவையும் நமக்குத் தெரியப் படுத்தியது. இந்த நூல் அச்சாக்கத்திற்காக அலுவலகத்திற்கு இரண்டு முறையும் வீட்டிற்கு இரண்டு முறையும் சென்றது அவரது சமூக அக்கறையும், அவரது சிந்தனையும் கொஞ்சம் தெரிய வைத்தது.
ஆகஸ்ட் 30 பாரதியார் பல்கலைக்கழகம் சென்று பதிவாளரைப் பார்த்து அணிந்துரை கேட்டது. அவர் ஏதேனும் அரசு நிதி உதவி கிடைக்குமா என்று கேட்டுவிட்டு இரண்டு முறை அலையவிட்டு கடைசி வரை அணிந்துரை தரவேயில்லை. முனீசின் செயல்பாடு அவ்வளவுதான். இரண்டு முறை பெட்ரால் ரூ. 3000 தண்டம்.
அப்படியே நவம்பர் 3 , 4 ல் திவ்யாவின் நீதிபதி தேர்வுக்காக சென்னை சென்று வந்ததும், அதற்கு அடுத்த வாரமே கலந்தாய்வுக்கூட்டம் போட்டதை சரியாக செய்ததாக நினைவு கொள்ளலாம். நவம்பர் 9 ல் முதல் கலந்தாய்வுக் கூட்டமும், டிசம்பரில் இரண்டாவது கூட்டமும், சனவரியில் ஒரு கூட்டமும், பிப்ரவரியில் ஒரு கூட்டம் மீண்டும் மார்ச் ஒரு கூட்டம் என தொடர்ந்து ஆறு கூட்டங்கள் நடத்தப்பட்டும் நிகழ்வுக்கான ஒத்துழைப்பு, நிகழ்வுக்கான ஒழுங்கமைவு என்பது மிகவும் குறைவாகவே இருந்தது.
அக்டோ 2 ல் பெரம்பலூர் சென்று வந்தது. நவம்பர் இறதியில் கொடுத்து அக்டோபர் முதல் வாரத்தில் கொடுத்து 13 ல் ரவி சாரிடம் அணிந்துரை பெறப்பட்டது. இதுவரைக்கும் மூன்று புத்தகங்கள் என்ற நிலைப்பாட்டிலும் மன நிலையிலும் ஒடிக்கொண்டிருந்தது. ஈரோடு சரவணனிடம் மூன்று புத்தகங்கள் லே அவுட் போடப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்தாலும், நமது பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசனையால் லே அவுட் செலவு மட்டுமே கையிலிருந்து செய்யப்பட்டுவிட்டது. இதுவரையிலும் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் செய்திகள் மீளவருவதாகவும், மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்கும் எனவும் சொல்லிக்கொண்டிருந்தார். என்ன செய்வது கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையிலான கல்வெட்டுகளில் உள்ள செய்திகள் அவ்வாறு இருப்பதால் சற்று மனச்சோர்வு ஏற்படத்தான் செய்தது.
முனிசுடன் திருத்தம் பார்க்க பிரிண்ட் எடுத்துக்கொடுத்தும் சரியாகப்பார்க்கவில்லை. அய்யா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெரும்பாலான பக்கங்கள் பார்த்திருந்தாலும் செய்திகள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வருவது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இது மதியழகன் கொடுத்த செய்திகளோடு நானும் களப்பணி அனுபவங்களும் சேரும்போது மீண்டும்மீண்டும் ஒரே செய்திகள் வருவதாக அமைந்துவிட்டது.
முனைவர் மதியழகன் கடந்த 2022 ல் கொழுமம் கோயில் செய்திகள் கொடுத்தாலும் தட்டச்சு குடமுழுக்கு நிகழ்வு தொடக்க நிகழ்வுகள் 2002 இறுதியில் தொடங்கியது. அன்றே முனைவர் வசந்தகுமாரும், நமது எம்.பி.யும். இதைத்தானே வெளியீட்றீங்க , படம் எடுத்துக்கோங்க என்று சொன்னது முதல் பிப்ரவரி 2024 ல் இறுதியாக வசந்தகுமாரைப் பார்க்க கற்பகம் பல்கலைக்கழகம் சென்று வந்தது வரை ஒரு ஆண்டிற்கும் மேலான அவரது தொடர் நிகழ்வை தனியாக எழுத வேண்டும். சிவனடியாராக இருக்கும் வசந்தகுமார் அவர்கள் தமது அலுவலகத்திற்கு வரவழைத்து விட்டு மூன்று மணிநேரத்திற்கும் மேலாகக் காக்க வைத்து திருப்பி அனுப்பியதும் நல்ல செயலே.
மூன்னூற்று ஐம்பது பக்கங்கள் மிகாமல் மூன்று புத்தகங்கள் தயார் செய்வது என்ற நினைப்புடன் மூன்றாவது மற்றும் நான்காவது முறையாக திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் திருத்தம் பார்த்து அனுப்பப்பட்டது. இடையில் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி அவர்களிடம் கொடுத்து முழுமையாக மாற்றி அமைக்க அவரது இல்லம் சென்று திருத்தம் செய்து கொடுத்ததையும் மறக்க இயலாது.
2023ஆகஸ்ட் மாதம் வரைக்கும் தொடர்ந்து தட்டச்சு செய்யப்பட்டு வந்தது. அதற்கு மேலும் இனிமேலும் செய்திகள் வேண்டாமென்று நிறுத்தப்பட்டது. இதில் கொங்கப்போர், அமெரிக்க கணேசனின் ஓலை முறி எச்சரிக்கை விடுபட்டுவிட்டது. இது நமது பகுதியில் 16- 17 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற பாளையத்துக்காரர்களுக்கும், வணிகர்களுக்கும் நடைபெற்ற மிகப்பெரிய போர். இன்று வாளையாறு பக்கம் சித்தூரில் அந்த மண் சார்ந்த நிகழ்வு ஒரு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கணேசன் சொல்லியும் இதனைச் சேர்க்க இயலவில்லை.
கரைவழி நாட்டுக் கடத்தூர், கரை வழி நாட்டுக் கழுமலம் என்றிருப்பதை துணைவேந்தர் அவர்கள் கழுமலம் வேண்டாம் கொழுமம் என்றே எழுதச்சொன்னார். புத்தகம் நன்றாக இருப்பதாகவும் எழுத்து நடை ஒரே போன்று இருப்பதையும் நாகரீகப்புத்தகத்தில் எழுத்து நடை மாறியிருப்பதையும் குறிப்பிட்டுச் சொன்னார். அதில் உரைநடை கொஞ்சம் என்னுடையதெனவும் கொங்கு வழக்காறு நடையில் கிருஷ்ணமூர்த்தி எழுதியிருப்பதையும் குறிப்பிட்டுச்சொன்னார். ஆடிப்பெருந்திருவிழாவைத் தனிப்புத்தகமாக எழுதினால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார்.
மீண்டும் வந்து திருத்தம் பார்த்து இரண்டு புத்தகத்தை ஒரு புத்தகமாக மாற்றுவதென்பது சற்று கடினமான செயல் என்று அப்படியே விட்டு வைத்தோம். மொழி பெயர்ப்பு ஆய்வு நிறுவனத்திலிருந்து சென்னை புத்தகக்கண்காட்சி சென்று வரும் வரை என்ன செய்வது, இனி கூட்டம் நடப்பதற்கான பணிகளைச் செய்வோம் என்ற அடிப்படையில் சில பல பணிகள் தொடங்கப்பட்டது.
எம்.பி. யிடம் பேசும் போது பிப்ரவரி 24 ல் நூல் வெளியீட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு எனக்கும் தேர்தல் வேலை வந்துவிடும் என்றார். அதற்குள் பொள்ளாச்சியிலிருந்து நூல்கள் வாங்கிவிடுங்கள் என்றும் யோசனை சொன்னார்.
பிப்ரவரி 24 க்கான திருவள்ளுவர் திருக்கோட்டத்தின் சார்பில் வழங்கப்பெறும் தமிழில் முதல் மதிப்பெண் சீல்டுகள் தயாரிக்கும் பணியினை அருள்கணேசனும் முனிசும் பார்க்கச் சொல்லி கடைசி வரை பார்க்காமல் விட்டு மார்ச் முதல் வாரம் வரை அகரன் தொகை அனுப்பியும் அச்செடுத்து தராமல் இழுத்தடிக்க மீண்டும் தொகை கேட்டு நச்சரிக்க தொகை கொடுத்து வாங்கி லேமினேசன் போட்டு வர மார்ச் 6,7 ஆகிவிட்டது.
உடுமலை குடிமங்கலம் மடத்துக்குளம் பள்ளிகளில் சுமார் 70 முதல் 80 பேர் வரை வர வாய்ப்புகள் இருந்தும் 12 பேர் மட்டுமே வந்து பரிசுகள் பெற்றுச்சென்றதும் மீதி உள்ளவற்றை பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதும் மீண்டும் வேலைப்பளுதான்.
கடந்த ஏப்ரல் 2023 முதல் தொடங்கிய புத்தகத்தின் பணிகள் சனவரி 29, 30 களில்தான் நிறைவுக்கு வந்தது. கரைவளி நாடுகளும் நாகரீகமும் எனுந் தலைப்பு கரைவழி நாடும் நாகரீகமும் என்றாகியது. மீண்டும் கரைவளி என்றும் எழுதப்பட்டது. கரைவழி,கரைவளி இதைப்பற்றி பேச வேண்டிய நம்மிடம் பேசாமல் ஒரு சிலர் அறிவுஜீவிகளாக வெளியில் சென்று பரப்புரை மேற்கொண்டதையும் அதையும் எதிர்கொண்டதையும் மறக்க இயலாது. வெளி நபர்கள் தவிர்த்து நம்மில் சிலரே இதற்கான அடிப்படை தரவுகளைக் கூடத் தெரியாமல் பயணிப்பது வியப்புதான்.
இதற்கிடையில் வழக்கம் போல் சனவரி 16 ஆம் நாள் தை 2 ல் திருவள்ளுவர் திருநாள் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் நடைபெறும். அதே போன்று இந்த ஆண்டும் நடத்தத் திட்டமிடப்பட்டு தலைமையாக துணைத்தலைவர் ராஜசுந்தரம் பெயர் போட்டு துண்டறிக்கை அச்சடித்து கொடுக்கப்பட்டது. சுமார் 10 முதல் 20 பேர் எதிர்பார்த்து 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் வந்தது மிகவும் மகிழ்வான செயல்.
திருக்குறள் வகுப்பு எடுக்கும் ராஜேஸ்வரிக்கும், வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது உடுமலை மக்கள் பேரவை தலைவர், உடுமலை தொழில் வர்த்தக சபையின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நமது வரலாற்று ஆய்வு நடுவ தலைவர் என நால்வர் கையெழுத்திட்டு வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு அய்யா யு.கே.பி.முத்துக்குமாரசாமி அவர்கள் பெருவிருப்புடன் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு. இத்தனை ஆண்டுகளில் திருவள்ளுவர் சிலை இங்கிருப்பதையும் அதற்காக தாம் வந்ததை மிகவும் உவகையுடன் கூறினார் அய்யா முத்துக்குமாரசாமி.
வழக்கமாக திருவள்ளுவர் சிலை புத்தக வெளியீட்டு அரங்கில் வைத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்த போது நம்ம அருள்கணேசன் அப்ற எதுக்கு சிலை கொண்டு வரச்சொன்னீங்க எனக் கடிந்து கொள்ள உடனடியாக முன்பே சொல்லியிருந்த மானுப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு வழங்க அதை ஷெர்லி மேடம் பெற்றுக்கொண்டார். கணேசனுக்கு கோபம் வந்துவிட்டது.
சனவரி 2 ஆம் நாள் நிகழ்வு வழக்கமான வரவு செலவுடன் நிறைவு பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு மூன்று தினங்களில் சனவரி 22 ல் ராமர் கோயிலுக்காக பதிவு ஒன்று போட அது பெரும் பிரச்சினையாக சனவரி 26 ஆம் நாள் கலந்தாய்வுக் கூட்டம் இதற்காக நடைபெற்றது போலிருந்தது. இறுதியில் மனசு பாதிக்கும் பதிவுகள் போடக்கூடாதெனச் சொல்லியும் வழக்கறிஞரை மார்ச் 9 க்கு பிறகு நடவடிக்கை எடுத்து நீக்கவும் பேசப்பட்டது.
சனவரி இறுதியில் நிகழ்வுகள் கொஞ்சம் வேகமாக நடந்தது. பிப்ரவரி 2 ஆம் நாள் எம்.பி. அவர்களை பார்த்த போது உறுதியான மூன்றையும் சேர்த்து இரண்டு அச்சாக்கித் தருவதாக உறுதி அளித்தார். ஆனால் மீண்டும், மீண்டும் கேட்க சங்கடமாக இருப்பதால் ஒரு புத்தகத்தை நீங்களே செய்து கொள்ளுங்கள் என்று சொன்ன போது சரிதான் ஏற்கனவே எதிர்பார்த்தது போல நடந்துவிட்டது. அதற்குப் பின்பு எவ்வளவோ முயற்சி செய்தும் என்.ஜ,ஏ.விலிருந்து அச்சாக்கித் தரவில்லை.
பிப்ரவரி 2 ஆம் தேதி எதிர்பார்த்த திருப்பு முனையாக இருந்தாலும் இதெல்லாம் வரும் என முதலில் எதிர்பார்த்திருந்ததால் வருத்தம் இல்லை. விரைவாக லே அவுட் செய்து அச்சாக்கி பிப்ரவரி 24 சனிக்கிழமை புத்தகம் பொள்ளாச்சியிலிருந்து எடுக்கப்பட்டது. அதற்கு முன்பே சென்னையிலிருந்தும் மாதிரி புத்தகங்களாக 12, 12 எண்ணிக்கையில் அய்யா ஸ்ரீதரிடம் பிப்ரவரி 8 ஆம் தேதியே காட்ட, அதற்கு முன்பே அவர் நடிகர் சிவகுமாரிடம் பேசியிருந்ததால் அவரும் தேதி கேட்டு ஒப்புதல் கொடுத்துவிட்டார். பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மார்ச் 3,4, 9,10 என நான்கு தேதிகளைச் சொல்லி அவரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இடையில் அழைப்பிதழும் செஞ்சுடரில் தயார் செய்து அதையும் சிவகுமார் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. அனைத்தையும் பர்த்தே சரி என்று சொன்னார்.
அதே போல் சனவரி 26 ஆம் கலந்தாய்ககூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செலவு கணக்கை ஏற்றுக்கொள்வது எனப் பேசி முடித்து அனைவரும் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஒப்புதல் அளித்த பிறகு கடைசியில் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களும், மூர்த்தீஸ்வரி ஆகிய இருவர் மட்டுமே தாம் ஒப்புக்கொண்ட தொகையைக் கொடுத்தனர். மேலும் கிருஷ்ணமூர்த்தி புத்தகத்தில் முதலில் பெயர் போட வேண்டாம் என்று சொன்னவர் ஒரு கட்டத்தில் பெயர் போடுங்கள் தொகை தந்து விடுகிறேன் என்று சொன்னார். மீண்டும் என்னுடைய பெயர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். புத்தகம் அச்சுக்குப் போனபிறகு மாற்ற இயலாது என பெயர் அப்படியே போட்டுவிட்டோம்.
பிப்ரவரி முடிந்து மார்ச் முதல் வாரத்தில் அழைப்பிழும் வந்துவிட்டது. கூட்டத்திற்கான அடுத்த கட்டப்பணிகள் அனைத்தும் மிக வேகமாக நடந்து கொண்டிருந்தது. பிளக்ஸ் வடிவமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் காரைக்குடியில் மார்ச் 2 ஆம் தேதி நடந்த நிகழ்வில் கைதவறி துண்டு கீழே விழ சிவகுமார் உடனே உணர்வு வயப்பட்டு உடுமலை நிகழ்ச்சி உள்பட இனிமேல் ஓராண்டுகளுக்கு எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை என்று சொன்னது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
அன்று பிப்ரவரி 5 காலை ஸ்ரீதர் அய்யா மாலை வாருங்கள் சென்னை சென்று அழைப்பிதழ் கொடுத்து விட்டு வர பேசி சொல்கிறேன் என்று சொன்னவர் மாலை 5 மணிக்கு முன்பே அழைத்து இவ்வாறு சொன்னது அவருக்குள்ளேயே ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. அதுவரைக்கும் செய்த செலவுகள் அழைப்பிதழுக்கு 18, ஆயிரம் அய்யா குமாரராஜா ஏற்பட்ட மன உளைச்சல், இந்த ஒரூ மூன்று மாத காலமாக சிவகுமார், சிவகுமார் என்று பாடிக்கொண்டிருந்தமைக்கு விழுந்த அடி சொல்லி மாளாது. கடந்த டிசம்பரில் தமிழிசைச் சங்க நிகழ்வில்தான் ஸ்ரீதர்அய்யாவிடம் இந்தப் புத்தகம் குறித்தும் சிவகுமார் குறித்தும் பேசியபோது கட்டாயம் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். முதலில் புத்தகத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்டுங்க, அப்புறம் பேசலாம் என்று சொன்னவர். அவ்வாறே அவரும் செய்து கொடுத்தார்.
அதற்கு முன்பு ஸ்ரீதர் அய்யாவும் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். தனியாக நான்கைந்து முறை அழைத்துப்பேசி இப்படியே செய்ய வேண்டும், அதை அப்படி செய்ய வேண்டும் என்று ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை அழைத்து சிவகுமார் அண்ணன் இப்படிச்சொன்னார்,மேடையில் எல்.இ.டி. ஸ்கிரீன் வைக்கவேண்டும். அவர்; மேடையில் உட்கார்ந்த பிறகு யாரும் குறுக்கு குறுக்கே நடக்கக்கூடாதெனவும், அவருக்கு முன்பு இருவரையும் அவர் பேசிய பிறகு நன்றி உரை மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் எனவும் ஒவ்வொன்றையும் சொல்லிச் சொல்லி செய்தார்.
சிவகுமாரே ஒரு சமயத்தில் எல்.இ.டி. ஸ்கீரின் கோவையிலிருந்து அனுப்பட்டுமா? எனவும், மேடையில் எத்தனை பேர் உட்காருவது என்பதும் ஜிவிஜி கலையரங்கில் நிகழ்வு நடைபெறவேண்டும் எனவும், வேறிடத்தில் வைக்கக்கூடாதெனவும், கறாராகப் பேசினார். தலைவர் குமாரராஜா அவர்களிடமும், ஸ்ரீதர் அவர்களிடமும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மாறி மாறி பேசி நிகழ்வுக்கான பணிகளை கேட்டுக்கொண்டிருந்ததையும் நினைவு கூறவேண்டும். மார்ச் 5 ஆம் தேதி மாலை வரைக்கும் இருந்த மன நிலை முற்றாக மாறிவிட்டது. ஏதோ நிகழ்வு நடந்தால்போதும் என்றாகிவிட்டது. சிவகுமார் வரக்கூடாது. வராவிட்டால் பரவாயில்லை என்று ஏராளமானோர் நினைத்துள்ளனர். அதிலும் நம்மளில் சிலர் நினைத்தது பிறகுதான் தெரிந்தது. ஒரு சிலருக்கு அல்ல, பல சிலருக்கு மகிழ்ச்சி.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஸ்ரீதருக்கும், அய்யாவிற்கும் மிகுந்த மனநெருக்கடி. அதுவும் சிவன்ராத்திரிக்கு மறுநாள் காலை 10 மணிக்குக் கட்டாயம் கூட்டம் வராது. அதிலும், 250 பேர் வந்துவிட்டால் பெரிய நிகழ்வுதான் என்ற மன ஓட்டத்தோடு நிகழ்வுக்கான அழைப்பிதழ்கள் ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கப்பட்டது. ஒரு ஏ3 க்கு 10 டிக்கர் ஒரு முறை பிரிண்ட் எடுத்தால் 50 ரூபாய். அதை ஒட்டுவதற்கு செந்திலுக்கும் காசு. சுமார் 750 அழைப்பிதழ்கள் ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கப்பட்டது. வேலா புக்ஸ், சூர்யா புக்ஸ் லாக்இன் என விளம்பர நிறுவனங்களுக்கும் 50, 50 அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டது. சிவகுமார் வரவில்லை என்பதால் பெரிதாக ஒரு வரவேற்பும் இல்லை.
இடையே பொள்ளாச்சியிலிருந்து கொண்டு வந்த புத்தகத்தில் விலை இல்லாமல் இருந்தது அதற்கும் 450 விலை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அனைவருக்கும் நிகழ்வு சிறப்பாக நடத்தவேண்டும் என்ற மனநிலையிலிருந்து ஏதோ நடக்கிறது என்ற எண்ணமும் எப்படியோ நடந்து முடிந்தால் போதும் என்ற சங்கடமான நிலைக்கு மனம் மாறிவந்தது ஒவ்வொருவரின் பேச்சிலும் நடத்தையிலும் தெரிய வந்தது.
மார்ச் 5 க்குப் பிறகு நன்கொடை வசூல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அழைப்பிதழில் பெயர் போட்டிருந்த பெருமக்கள் தொகை கொடுத்தாலே மிச்சம் என்ற நிலைக்கு வரவேண்டியதாகிவிட்டது. வழக்கமாக கொடுக்கும் அருண் கார்த்திக், அந்தோணி ஆகியோர் கொடுத்தும்; இந்த முறை பேப்பர் மில்லில் எதிர்பார்த்த தொகை இல்லை. நிகழ்வு நடக்கும் மார்ச் 8 வரையிலும் கொடுமையிலும் கொடுமை. மார்ச் 9 நிகழ்வு நாளன்று மட்டும் சண்முகவேலு 5 மத்தீன் 5 ராதாகிருஷ்ணன் 10 மகேந்திரன் 5 என தொகை கொடுத்தது மிகப்பெரும் உதவியாக இருந்தது. அதுவம் ராஜ்சுந்தரம் வசூல் செய்து கொடுத்தது மிகவும் சிறப்பு.
Comments
Post a Comment