உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் நூல் வெளியீட்டு நிகழ்வு
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் நூல் வெளியீட்டு நிகழ்வு
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஏற்கனவே உடுமலை வரலாறு, தென்கொங்கின் தொன்மங்கள், தென்கொங்கு நாட்டின் முதல்விடுதலைப்போர் என உடுமலை மண் சார்ந்து, மக்களின் வாழ்நிலை சார்ந்து கடந்த பெருமைகளையும் புராதனச்சின்னங்களையும் ஆய்வு செய்து புத்தகமாக்கி வெளியிடும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.அந்த வகையில் மார்ச் 9 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஜிவிஜி கலையரங்கில் கரைவழி நாடும் நாகரீகமும் எனும் தலைப்பில் இரண்டு தொகுதிகளாக நூல் வெளியிடுகின்றனர்.மற்றும் கரைவழியில் வேளாண்மை செய்திகளைத் தொகுத்து கரைவளி நாடும் நாகரீகமும் என்றும் இரண்டு நூல்களை வெளியிடுகின்றனர். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. கு.சண்முகசுந்தரம் தலைமை தாங்குகிறார்.
அதே போல் கடந்த 2018ல் வெளியிடப்பெற்ற தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் நூலின் இரண்டாம் பதிப்பினையும் வெளியிடுகின்றனர். உடுமலை பகுதியில் இரண்டு மணி மண்டபங்கள் ஒன்று நாராயணகவி மணி மண்டபம் இன்னொன்று தளி எத்தலப்பர் சமூக அரங்கம் எனும் 2.கோடியே 62 லட்சத்தில் திருமூர்த்திமலை பயணியர் விடுதிக்குப்பின்புறம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மணி மண்டபம் அமைவதற்கும் காரணமாக இருந்தது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் வெளியிடப்பெற்ற தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் நூலாகும். அந்த நூலின் மீண்டும் சில பகுதிகளை சேர்த்தும இந்த நிகழ்வில் இரண்டாம் பதிப்பாக வெளியிடுகின்றனர்.
கரை வழி என்பது கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையிலான பகுதியைக் குறிக்கும் அந்த பகுதியில் உள்ள கோயில்களின் பழங்காலக் கல்வெட்டுகள், கல்வெட்டுகளில் கூறப்பட்ட செய்திகள் என அனைத்தையும் தொகுத்து நூலாக்கி வெளியிடுகின்றனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின் அயலக வாரியத் தலைவர் திரு.கார்த்திகேய சிவசேனாபதி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் சி. சண்முகவேலு, ஜெயராமகிருஷ்ணன், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், கல்வியாளர் ஆர்.கே.ராமசாமி, உடுமலை நகர மன்றத்தலைவர் மத்தீன், குடிமங்கலம் விண்ட் கேர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி சே.அந்தோணி, உடுமலை மக்கள் பேரவை தலைவர் யு.கே.பி.முத்துக்குமாரசாமி மற்றும் உடுமலை லோகநாதன், உடுமலை தொழில் வர்த்தக சபையின் தலைவர் அருண்கார்த்திக் என உடுமலையின் முக்கியப்பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.
நூல் அறிமுக உரை முனைவர் மூர்த்தீஸ்வரி பேச நிகழ்வு ஏற்பாடுகளை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் விரிவாக செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment