இருபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.
இருபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.
காளையர்களாக, கண்ணுக்குள் கண்ணாக
கைகள் தொட்டு கால்கள் பிணைந்து
சில நேரங்களில் மனமுருகி,
கல்லூரிக் காலங்களில்
பல நேரங்களில் பாழான விரக்தியில்
பசுமை நிறைந்த நினைவுகளாய்
பழக மறந்த எண்ணங்களாய்
குரங்குகள் போல் மனம் தாவி
இரவும் பகலும் இன்ப துன்பங்களை
செலவுகளே வரவுகளாய்
வாழ்க்கைப் பயணம் வெகுதூரமாய்
வியாபார மேலாண்மை படிப்பு
பழகத் தெரியாமல் பழகி அழத்தெரியாமல் அழுது
காதலே வாழ்க்கையாகி, வாழ்க்கையே காதலாகி
டவுன் பஸ்சில், டிக்கட் வாங்கியும் வாங்காமலும்,
சைக்கிளில் டபுள்சில் வந்ததும்,
டுவீலரில் டிரிப்ள்சாக வந்ததும்
பாவையர்களை பார்வைகளாக்கி
பூவைக்கும் முன்பே
வாழ்க்கைக் காலனைக் கால் தொட்டு
காணாமல் போன கல்லூரிக் கனவுகளை
கண்ணீரில் தொலைத்துவிட்டு
கானல்நீராய் கண்டுங்காணாமலும்
வாழ்க்கை நகர்வுகளை நகர்த்திக்கொண்டோம்
இருபத்தி எட்டு ஆண்டுகள்
எத்தனையோ மாற்றங்கள், ஏமாற்றங்கள்
உன்னிலும், என்னிலும்,
ஆனால் நம்மின் நட்பூ மட்டுமே
அப்படியே உள்ளது.
கடந்து போனவை போகட்டும்,
தொலைந்து போனது போகட்டும் . . .
இன்னும் இப்படியே தொடர்வோம். . . .
இனி இருபத்தெட்டு ஆண்டுகள் வேண்டாமே . . .
ஆண்டுக்கொரு நாள் . . . அன்றில் நிலவில் . ..
வருடத்திற்கொரு முறை . . . சந்திப்போம். . .
இனி நம் குடும்பங்களோடு . . . .
எனக்கு மட்டும் . . . விதி விலக்கு . . . .
சிவா எனும் வி.கே.சிவகுமார்.
Comments
Post a Comment