கேள்வி : சொந்தமாக ஒரு வீடு அல்லது கட்டிடம் கட்டும் நடுத்தர வர்க்கத்தினர், செய்யும் மிகப்பெரிய தவறு என்ன?
கேள்வி : சொந்தமாக ஒரு வீடு அல்லது கட்டிடம் கட்டும் நடுத்தர வர்க்கத்தினர், செய்யும் மிகப்பெரிய தவறு என்ன?
· பதில் :
·
·
வீடு கட்டுவதில் அனேகம் பேர் செய்யும் தவறு, வீடு கட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டடி மனை வாங்குவது.
·
·
வீடு கட்டுவதில் பெரும்பாலோர் செய்யும் தவறு, கட்டிட வரைபட அனுமதி இல்லாமல் வீடு கட்டுவது.
·
·
வீடு கட்டுவதில் அதே பெரும்பாலோர் செய்யும் இன்னொரு தவறு, அனுமதி பெற்ற வரைபடத்துக்கு ஏற்ப அப்படியே வீடு கட்டாமல் கொஞ்சமாவது மாற்றி கட்டுவது.
·
·
வீடு கட்டுவதில் ஏறத்தாழ எல்லோருமே செய்யும் தவறு, கட்டிய அளவுக்கு சொத்து வரி கணக்கிட்டு கட்டாமல் குறைத்து கணக்கிட்டு கட்ட நினைப்பது.
·
சரி, இதனாலெல்லாம்
என்ன பெரிதாய் ஆகி விட போகிறது என்று நினைப்பவர்களுக்காக,
·
அங்கீகாரம் இல்லாத வீட்டடி மனை வாங்கினால் வீதிக்காக ஒரு பகுதி நிலத்தை விட்டு கொடுக்க வேண்டும். பொது கட்டமைப்பு வசதிகளான சாக்கடை வசதி, மழைநீர் கால்வாய், ரோடு, தெருவிளக்கு - இதெல்லாம் எளிதில் கிடைக்காது. இந்த வசதிகள் வர, அந்த பகுதிவாசிகள்
எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து தலைகீழாய் குட்டிக்கரணம்
போடனும். அதற்கு மனை அங்கீகாரம் பெற வேண்டும். அதற்காக தண்டத்தொகை கட்டனும். இந்த தண்டத்தொகை, வீதிக்காக இழக்கும் நிலப்பகுதி இரண்டையும் கணக்கிட்டால், அங்கீகாரம் பெற்ற வீட்டடி மனையின் விலையை விட கூடும்.
·
·
அடுத்து, வரைபட அனுமதி வாங்காமல் கட்டும் கட்டிடத்தை அரசு நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம்.(சமூக விரோதிகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு யோகி இடிப்பது, இந்த மாதிரி கட்டிட வரைபட அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளைத் தான். நம்மூரிலும், வழிக்கு வராத ஒரு சிலர் வீடுகள் முன்பு இடிக்கப்பட்டன,
இப்போது சீல் வைக்கப்படுகிறது.) சிக்கல் என்றால், நீதிமன்றங்கள், வரைபட அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு இரக்கம் காட்டுவதில்லை என்பதுதான் இன்றைய நிதர்சனம்.
·
·
வரைபட அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டிடங்களும்
மேற் சொன்ன சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சட்ட போராட்டங்களுக்கு
பின், compounded offence என்கிற அளவில் நீதிமன்றம் 10 சதவீத அளவிற்குள் அனுமதிக்கு மாறாக மாற்றி கட்டியிருந்தால்
அனுமதிக்க வாய்ப்பு இருக்கிறது.
·
·
அதேபோல் சொத்து வரி மதிப்பிடும் போது, காய்கறி வாங்கும் போது விலை குறைப்பது போல், குறைத்து போட வைப்பது. அப்படி குறைத்து போட்ட பகுதிகள் எதேனும் விவகாரம் என்றால் அனாமதேயமாக கட்டப்பட்ட பகுதிகளாகி விடும். அது நியாயமாக கட்டப்பட்ட பகுதி தான் என்பதற்கு ஆதாரம் ஏதுமின்றி போய் விடும்.
·
இவயேதும் மிகச் சரியாக இல்லாமல் தான் 90% கட்டிடங்கள் உள்ளன. எல்லாம் நல்லபடியாக போகும்வரை பிரச்சனை இல்லை. ஆனால் பிரச்சனை என்று வந்தால் மேற்சொன்னவைகள்தான் கட்டிடத்தை காப்பாற்றும்.
இவை தவிர ஏனைய எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அவையெல்லாம் லாப, நஷ்ட கணக்கில் வரும். கட்டிடம் கட்டுவதில் உள்ள லாப, நஷ்டத்தை சரி செய்ய அவைகள் உதவும். ஆனால் நான் சொன்ன இந்த விஷயங்கள் தலைமுறை தலைமுறை கட்டிடத்தை காப்பாற்றி, அதில் வசிப்போர் மன அமைதியை தொலைக்காட்சி நிம்மதியாக வாழ வைக்கும். நன்றி வாழ்த்துக்கள் ..உங்கள் கனவு இல்லம் நிறைவேற ..
சிவக்குமார் V K
Comments
Post a Comment