உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் - உடுமலை வரலாற்று ஆய்வுக்குழு

 உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்  - உடுமலை வரலாற்று ஆய்வுக்குழு எனும் பெயரில் முனைவர் இந்திரசித்து அவர்களால்  கடந்த 2001 ல் பணிகள் தொடங்கப்பெற்றது. 2005 முதல் விருதுகள் வழங்கத் திட்டமிடப்பட்டாலும் 2013 முதலே நiமுறைப்படுத்தப்பட்டது. தமிழ்ச்சான்றோர் விருதுகள் எனும் பெயரில்  முனைவர் க.இந்திரசித்து, முனைவர் பொன்னரசரனார், ஓவியப்புலவர் அறவாழி ஆகியோருக்கு முதன் முதலாக தமிழ்ச்சான்றோர் விருதுகள் வழங்கப்பட்டது.  2014 ல்  புலவர் ஆறுமுகம் அவர்களுக்கு பாவேந்தப் பாக்குயில் எனும் பெயரில் விருது வழங்கப்பெற்றது. 2014 செப் 20 ல்  முனைவர் இந்திரசித்து எழுதிய தளி எத்தலப்ப மன்னர் அறிமுகம் எனும் நூல் வெளியிடப்பெற்றது.  2015 – சனவரி 15ல் சிறந்த ஆசிரியப்பெருமக்களை சிறப்பு செய்யும் வகையில்  பாரதியார் நூற்றாண்டு பெண்கள் பள்ளி ஆசிரியர் சிவகுமார், இராகல்பாவி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோருக்கும் வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.  தேசிய நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக திரு. கு.சி. மணி அவர்களுக்கும் சிறப்பு விருது திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் வழங்கப்பட்டது. 

புலவர் அரங்கநாதன், புலவர் மருதமுத்து ஆகியோருக்கும் 2016 ல் தமிழ்ச்சான்றோர் விருது வழங்கப்பெற்றது.  2017 ல்  புலவர் கடவுள்இல்லை அவர்களுக்கு தமிழ்ச்சான்றோர் விருது வழங்கப்பெற்றது.  2018 ல்  முனைவர் ம.மதியழகனால் எழுதப்பெற்ற தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும்  எத்தலப்பரின் வீர வரலாற்றையும், ஆண்ட்ரோ கேதீசு தூக்கிலிட்ட நிகழ்வினையும் விரிவாகப் பதிவு செய்து  மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மற்றும் கால்நடை துறை அமைச்சர்களால் வெளியீடு செய்யப்பெற்றது. 

கடந்த 2019 உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழாவிற்கு ரூபாய் 2 லட்சம் செலவில்  உடுமலை குட்டைத்திடலில் பிரமாண்ட மேடை அமைத்து உடுமலை 100 எனும் நூலும். புலவர்  புவியரசு அவர்களுக்கு தமிழ்;ச்சான்றோர் விருதும் வழங்கப்பெற்றது. கிராமியக் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பெற்றது.   கடந்த 2020  சனவரி 21 இல்  மரபுக்கவிஞர் பிறைசூடிப்பித்தன் அவர்களுக்கு தமிழ்ச்சான்றோர் விருது வழங்கப்பெற்றது.  2021 ல் உடுமலையில் வரலாற்றை ஆவணப்படுத்தி வெளியிடும் வகையில்  சன.9 ல் உடுமலை வரலாறு எனும் சமூகப்பெரு நூல் வெளியிடப்பட்டது. சூலூர் வரலாறு எழுதிய புலவர் கவுதமன் அவர்களுக்கு தமிழ்ச்சான்றோர் விருதும் வழங்கப்பட்டது. மொழியரசி பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 2021 மார்ச்  7 ல் அப்போதைய உடுமலை வருவாய் கோட்டாட்சியர் எழுத்தாளர் ஆண்டன்பெனிக்கு உடுமலை நாராயணகவி இலக்கிய விருது வழங்கப்பெற்றது.  ஏப்ரல் 11 ல் முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி அவர்களுக்கு தமிழ்ச்சான்றோர் விருது வழங்கப் பெற்றது. உடுமலை வரலாறு வெளியிட்டமைக்கு துணைவேந்தர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். 

2022  ஏப்ரல் 16 ல் உடுமலை மடத்துக்குளம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் உள்ள புராதனக்கல்வெட்டுகளைத் தொகுத்து  தென்கொங்கின் தொன்மங்கள் எனும் தொல்லியல் வரலாற்று நூல் வெளியிடப்பெற்றது. இதற்கு  உலகத்தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர் ஜெர்மனி சுபாஷினி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். முனைவர் சுபாஷினிக்கு – தமிழ்ச்சான்றோர் விருதும் வழங்கப்பட்டது. 

2022 ஆகஸ்ட் 15 ல் இந்திய விடுதலையின் 75 ஆவது பளள விழா ஆண்டினை  முன்னிட்டு தளி எத்தலப்பர் தூக்கிலிட்ட நிகழ்வினை அலங்கார ஊர்தியாக உடுமலை வீதிகளில் வலம் வரச்செய்து மக்களிடையே மிகு;நத வரவேற்பினைப் பெற்றது. மேலும், உடுமலை அரசு கலைக்கல்லூரியிலும், ஜிவிஜி மகளிர் கலைக்கல்லூரியிலும், உடுமலை நகராட்சி வளாக அலுவலகத்திலும் உடுமலை வரலாறு புகைப்படக்கண்காட்சியும் நிகழ்த்தப்பெற்றது. 

கடந்த 2023 சனவரி 21 ல்; கதைசொல்லி பவா செல்லதுரை அவர்களை உடுமலை வரவழைத்து  குட்டைத்திடலில் நிகழ்வு நடத்தப்பெற்று தமிழ்ச்சான்றோர் விருது வழங்கப்பெற்றது.

இது மட்டுமல்லாமல்  பெரியகோட்டை ஊராட்சி அய்யலு மீனாட்சி நகரில் திருவள்ளுவர் கற்சிலையினை கடந்த 2002 ல் அமைக்கப்பட்டது. தென்சேரிமலை முத்துசிவராமசாமி அவர்களால்  சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.  2013 முதல் தமிழ்ச்சான்றோர் விருது வழங்குவது போல் 2015 முதல் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதிகளில் உள்ள பத்தாம் வகுப்பு  12 ஆம் வகுப்பில்  தமிழ் மொழிப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவச்செல்வங்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் அரசுபள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலையினையும் வழங்கி வருகிறது. இதுவரை 32 சிலைகள் வழங்கப்பட்டுள்ளது.  350 க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாமல் திருவள்ளுவர் திருக்கோட்டத்தினை சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்  செயல்திட்ட அறிக்கை எனும் பெயரில் ஒருஆய்வேடாக தயார் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினை  உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முனைவர் ம.மதியழகன் வழிகாட்டுதலில் சௌமியா எனும் முதுகலை அரசியல் அறிவியல் மாணவி 100 பக்க அளவில் ஆய்வேடாகத் தயாரித்து பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு சமர்பித்து சிறப்புப்பரிசினையும் பெற்றுள்ளார்.

இது மட்டுமல்லாமல்  தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் நூலினை பாரதியார் பல்கலைக்கழகம் வரலாற்றுத்துறை தம் பல்கலைக்கழக ஆய்வாக தமிழக ஆளுநர் திரு. ரவி அவர்களின் சிறப்பு ஒப்புதல் பெறப்பட்டு சிறப்பு ஆய்வாக நடைபெற்று வருகிறது.

மேலும், உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எனும் பெயரில் வழக்கறிஞர் அருள்மொழி. எழுத்தாளர் முத்துநாகு,  எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா,  மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குநர் லெனின்பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், அரண்மனை சுப்பு ஆகியோருக்கும். யாத்திசை எனும் வரலாற்றுத் திரைப்படத்தின்  இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் கலைஞர்களுக்கும்  உடுமலை நாராயணகவி இலக்கிய விருது வழங்கப்பெற்றது. 

மேலும் கடந்த 2016 ல்  உடுமலை நாராயண கவி பிறந்த நாளில் இலக்கியப்போட்டிகள் இதுவரைக்கும் 150 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வு நடுவம் அறக்கட்டளையாகவும், சங்கமாகவும் பதிவு செய்யப்பட்டது. 

மேலும் இதுமட்டுமல்லாமல் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில்  உள்ள 175 க்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களை ஆவணப்படுத்தி அதை முறையாக தொல்லியல் துறைக்கும், தினசரி செ;யதித்தாள்களுக்கும் அனுப்பி பதிவு செய்தும், பொதுமக்களுக்கும் அரசு துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். 

2023 நவம்பர் 24 ஆம்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க கொழுமம் வீரசோழீஸ்வரர் திருக்கோயில் உள்ள கல்வெட்டுகளை ஆவணப்படுத்தித் திருக்குட நன்னீராட்டு விழாவில் கோவை கௌமார மடாலய சீர்வளர்திரு  குமரகுருபர சுவாமிகள் வெளியிட கற்பகம் பல்கலைக்கழகங்களின் வேந்தர் முனைவர் சிவனருட்செல்வர் இராச. வசந்தகுமார், உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோயில் அறங்காவலர் திரு.யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், உடுமலை மக்கள் பேரவையின் தலைவர் திரு. யு.கே.பி.முத்துக்குமாரசாமி. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு கு.சண்முகசுந்தரம் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். 

இதன் தலைவராக திரு. தி. குமாரராஜா அவர்களும், கௌரவத் தலைவராக  திரு.யு.கே.பி.முத்துக்குமாரசாமி, திரு.கு.சண்முகசுந்தரம் பி.ஈ.(பாராளுமான்ற உறுப்பினர்) அவர்களும்,  செயலாளராக வி.கே.சிவகுமார், பொருளாளர் இல.அ.அருட்செல்வன், துணைத்தலைவர் வி.கே.செல்வராஜ், சி.ராஜசுந்தரம், துணைச்செயலாளர்கள் செ.ராபின், ப.அருள்கணேசன்,  மதிப்பியல் தலைவர்களாக முனைவர் ம.மதியழகன், முனைவர். வை. விஜயலட்சுமி, முனைவர். த.ஹேனாஷெர்லி, முனைவர். சுப.முனியப்பன், திரு. க.கிருஷ்ணமூர்த்தி, திரு.ப.மு.அகமது (ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்,பணி நிறைவு) வழக்கறிஞர் மு.சத்தியவாணி ஆகியோரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். சட்ட ஆலோசகர்களாக வழக்கறிஞர் முருகராஜ், வழக்கறிஞர் செ.சரவணன் ஆகியோரும் உள்ளனர். கல்வெட்டுகளை படித்து ஆவணப்படுத்த  தமிழ்நாடு சுவடிகள் துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சசிகலா உடனிருக்கின்றார்.

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰