ஆசிரியர் தினத்தில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு வாழ்த்துகள்
ஆசிரியர் தினத்தில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு வாழ்த்துகள்
ஆசிரியப்பணி அறப்பணி அதற்கே தங்களை அர்ப்பணி என்று ஆசிரியப்பணியோடு வரலாற்றுப்பணிகளையும் சமூகப்பணிகளையும் இடையறாது பாடாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு
வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் ஐந்தாம் நாள் ஆசிரியர் திருநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பணியில் இருக்கும் ஆசிரியப்பெருமக்களில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் மாநில நல்லாசிரியர் பெயரில் விருதுகளும்
வழங்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவின்
முதன் முதலில் ஆசிரியராக இருந்து ஏழை எளிய மக்களுக்கு ஆசிரியப்பணியாற்றியவர் மகாத்மா பூலே, சாவித்ரி பாய் பூலே இவர்களே முதன் முதலில் ஆசிரியப் பெருமக்களாக இருந்து சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கிய ஆசிரியப்பெருமக்கள்.
ஒரு சமயம் சாவித்ரி பூலே வின் முகத்தில் மனித மலத்தை வீசி அசிங்கப்படுத்திய போதிலும் மனந்தளராது, மனமுடையாது தொடர்ந்து எராளமான மாணவச்செல்வங்களுக்கு கல்விப்பணியாற்றிய பெருந்தகைதான் சாவித்ரி பாய் பூலே, மகாத்மா பூலே இவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், தற்போது இன்றைய நாளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் மாநில நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியப் பெருமக்களுக்கும்,
உடுமலைவரலாற்று ஆய்வு நடுவத்தின் பேராசிரியப்பெருமக்களாக இருக்கும்,
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முதல்வர் தமிழ்த்தேனி
முனைவர் வ.கிருஷ்ணன் அவர்களுக்கும்
முனைவர் மதியழகன் அவர்களுக்கும்,
மொழியரசி மூத்த சகோதரி முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களுக்கும்,
தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் கோ. சசிகலா அவர்களுக்கும்,
பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் முனைவர் சமூகச்செயற்பாட்டாளர், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி வை. விஜயலட்சுமி
அவர்களுக்கும்,
ஜெ.கிருஷ்ணாபுரம்
அரசு மேநிலைப்பள்ளி
வரலாற்றுப் பேராசிரியராகப்
பணியாற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் இணைச்செயலாளர் திரு. ராபின் அவர்களுக்கும்,
தளவாய்ப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும்
இணைச்செயலாளர் திரு.ப.அருள்கணேன் அவர்களுக்கும்
மானுப்பட்டி ஊராடசி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும்
முனைவர் ஹேனா ஷெர்லி ஆகியோருக்கும்
அரசு கல்லூரி தமிழ்த்துறை முனைவர் முனியப்பன் அவர்களுக்கும்,
ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம். 1958 கால கட்டத்தில் பொள்ளாச்சிஅ னுப்பர்பாளையத்தில் ஓராசிரியர் பள்ளியில் ஒரே ஆசிரியராகப் பணியாற்றி பிற்பாடு சென்னை தலைமைச் செயலகத்தில் கருவூலப்பிரிவில் பணியாற்றி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சார்நிலைக் கருவூலராகப் பணியாற்றி பழனி தண்டாயுதபாணி கோயில் நிதி ஆலோசகராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்ற எங்களது வரலாற்று ஆய்வு நடுவத்தின் தகைசால் பெருந்தகை தலைவர் எங்களது வரலாற்றுக்குடும்பத்தின் தந்தை திரு. குமாரராஜா அவர்களுக்கும்
அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆசிரியர் தின வாழ்த்துகள்
உடுமலைவரலாறு 05.09.2023

Comments
Post a Comment