கால்நடைகளுக்கான சிறப்பு வழிபாடு
கால்நடைகளுக்கான சிறப்பு வழிபாடு
திருமூர்த்தி மலை மற்றும் கல்லாபுரம் மலைப்பகுதிகளில் கால்நடைகளான மாடுகளை மேய்த்து வருவது வழக்கமாகி வருகிறது. இந்தப்பழக்கம் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகின்றது. நிலத்தில் சமவெளியில் இருக்கும் விவசாயிகள் தொடர்ந்து மேய்ச்சல் நிலங்கள் அருகி குறைந்து வருவதாலும், தம் விவசாயப் பணிகளில் கால்நடைகளைத் தொடர்ந்து கண்காணிக்க முடியாததால் கடந்த காலங்களில் மலைப்பகுதிகளில் அங்கு வசிக்கும் மலசர், பழயர் எனும் மலைவாழ் பழங்குடி மக்கள் கால்நடைகளை மேய்ப்பதைத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
இவ்வாறு இவர்கள் மாடுகளை தம் மலை வாழ் நிலங்களில் மேய்ப்பதற்கு ஈடாக அல்லது அதற்கு கூலியாகக்கடந்த காலங்களில் வயல்களில் விளையும் நெல் மூட்டைகளை வழங்கி வந்தனர். அதற்குப்பிறகு மாடுகள் ஈனும் கன்றுகளை அவர்கள் வைத்துக்கொண்டு பராமரிப்பது என ஒப்புக்கொண்டு கால்நடைகள் மேய்க்கும் வழக்கமும் இருந்து வருகிறது. தற்போது காலவோட்டத்தில் பொங்கலுக்கும், தீபாவளிக்கும் பணமாகப் பெற்றுக்கொண்டு இவ்வாறான கால்நடைகளை தம் மலைப்பகுதிகளில் மேய்த்து வருகின்றனர். இதனையே கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வாய்ச்சொல்லுக்குக் கட்டுப்பட்டு மாடுகள் அந்த காடுகளுக்குள் மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்தது. அவ்வாறான தீவனங்கள் உட்கொள்ளும் மாடுகள், வேறு நிலங்களுக்குச் சென்று தீவனம் உட்கொள்ளாது அல்லது மேயாது. இது உடுமலைக்கருகில் போளரப்பட்டி எனும் கிராமத்தில் இந்த கால்நடைகளுக்கான தெலுங்கு மொழி கல்வெட்டு ( வட்டார வழக்கில் மந்தரக்கல்வெட்டு) இருப்பதையும் நாம் இதனோடு பொருத்திப் பதிவு செய்யவேண்டும்.
கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக இவ்வாறாக வாழ்ந்த வந்த மக்கள் இந்த கால்நடைகளுக்காக வாழ்ந்த போடி தாத்தையன் வழிபாடு எனும் கால்நடை மேய்ப்பர் வழிபாட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இந்த வழிபாடு நடைபெறுகிறது.
இந்த ஆண்டும் இந்தவழிபாடு ஜல்லிபட்டிக்கு கொங்குரார் குட்டைக்கும் மேல் உள்ள போடி தாத்தையன் கோயில் வழிபாடு நடைபெற்றது.














.jpg)





Comments
Post a Comment