எழுத்தாளர் முனைவர் நாகரத்தினத்திற்கு நூல்கள் பரிசளிப்பு
எழுத்தாளர் முனைவர் நாகரத்தினத்திற்கு நூல்கள் பரிசளிப்பு
முனைவர் நாகரத்தினம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் உள்ளவர். உடுமலை நாராயணகவி பன்முக ஆளுமை கருத்தரங்கில் கட்டுரை வாசித்தவர். முனைவர் இந்திரசித்துவின் ஏற்பாட்டில் நடைபெறும் அனைத்துக் கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு கட்டுரை வாசித்த பேராளுமை.
2017 க்குப் பிறகு உடுமலையில் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் உள்ளுர் மட்டும் கோவை நிகழ்வுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி வருகிறார்.
உடுமலை வரலாற்று நூலினையும், தென்கொங்கின் தொன்மங்கள் நூலினையும் அஞ்சலில் பெற்றிருந்தார். இருப்பினும் நேரில் சந்திக்க வேண்டும் என்ற வேணாவாவின் அடிப்படையில் அவர் இல்லம் சென்று முனைவர் சசிகலாவின் திருச்சென்னம்பூண்டி கோயில் கட்டிடக்கலை நூலினை வழங்கி மகிழ்ந்தோம்.
முனைவர் இந்திரசித்துவோடு கலந்து கொண்டு நிகழ்வுகளையும், கடந்த கால இலக்கிய நிகழ்வுகளையும் கூறி மகிழ்ந்தார்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பணிகள் மிகவும் சிறப்பாகச் செயல்படுவது முனைவர் இந்திரசித்துவுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்றுவகை எய்தினார்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு சந்தித்தாலும் உடுமலை குறித்தும் சுற்று வட்டாரப் பகுதிகள் குறித்தும் மறவாமல் இருப்பதாகவும் கூறினார். உடுமலை வரலாற்றின் ஆய்வுப்பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தென்கொங்கின் தொன்மங்கள் நூலில் வெள்ளலூர் குறித்து நிறைய தரவுகளைப் பதிவு செய்ததை மறவாமல் தெரிவித்தார். தாம் இருக்கும் பகுதியில் தமக்கே தெரியாத தரவுகளை புத்தகத்தில் உள்ளது என்றும் கூறினார். மேலும், வெள்ளலூர் வரலாற்றினை எழுத முற்படுவதாகவும் கூறினார்.
பேராசிரியர் முனைவர் வெ.நாகரத்தினம் அவர்களது எழுத்துப்பணியும் கருத்துப்பணியும் தொடர உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வோம்.
உடுமலை வரலாறு 01.09.2023

Comments
Post a Comment