கரை வழி நாட்டுக் கல்லாபுரத்திற்கு முந்தைய பெயர்
கரை வழி நாட்டுக் கல்லாபுரத்திற்கு முந்தைய பெயர் விக்கிரம சோழ நல்லூர். இதை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் கல்லாபுரம் பெருமாள்புதூருக்கும் இடையில் உள்ள பொன்னி காட்டுத் துறைக்கு செல்லும் வழியில் உள்ளது கொம்மே கவுண்டன் துறை எனும் குமணன் துறை. இந்த குமணன் துறையே வழக்காற்றுச் சொல்லில் கொமணான் துறை என்று மருவி மாறி விட்டது.
இந்த குமணன் துறைக்கு அருகில் உள்ள ராசவாய்க்காலில் உள்ள எட்டு அடி நீளமும். இரண்டு அடி அகலமும் படுக்கை வாய்ப்பில் உள்ள கல்வெட்டில் ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரம சோழ தெவற்கு என்று தொடங்கி இருபத்தி இரண்டு வரிகளில் கரை வழி நாடு எனவும் விக்கிர சோழ தெவற்கு எழுதிய எழுத்து எனவும் முடிகிறது.
இதில் பல எழுத்துக்கள் சிதைவடைந்திருந்தாலும், நில தானத்தையும், விக்கிரம சோழனின் பெயரையும் ஆண்டையும் தெளிவாக தெரிவிக்கிறது.
இந்த கல்வெட்டில் விக்கிரமசோழன் என்பது 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்கிரம சோழனைக் குறிப்பதாகவும், கல்லாபுரத்தின் முந்தைய பெயரான விக்கிரம சோழ நல்லூர் என்பதை அடையாளப்படுத்துவதுமாக இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இக்கல்வெட்டு போரின் சேதத்தைக் குறிப்பிடுவதாகவும் அதற்கு நிவர்த்தி செய்வதாகவும் கரைவழிநாட்டின் ஊரின் பெயர்களையும், திருக்கோயிலுக்கு விடப்பட்ட நிலதானங்களிலிருந்து வரும் வரியினங்கள் சார்ந்த வருவாய்களையும் குடிமக்கள் குறித்தும். கூறுகிறது.
வீரசோழன் காலத்தைய கல்வெட்டு. கண்டராதித்த செட்டி, கண்டிய தேவன், நெல் தானம் செய்தது குறித்தும், நிலங்களின் இருப்பிடம் குறித்தும் அதன் சுற்றப்புற எல்லைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.
வீரசோழநல்லூர் கல்லாபுரம் பகுதியில் கந்தன், அடியன், வளவினன் எனும் உடையானுக்கு நிலதானம் செய்தது குறித்தும், அந்த நிலத்தை அடையாளப்படுத்தும் வகையில் சுற்றுப்புற நிலங்களின் பெயர்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.
கரை வழிநாடு குறித்தும் கரை வழி நாட்டின் கல்வெட்டுகள், பாரம்பரியம், விவசாயம் குறித்தும் தொடர்ந்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரின் களப்பணி வாயிலாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் உடுமலை ஜிவிஜி பெண்கள் கல்லூரி வரலாற்றுத் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ச.க.அறிவரசி இந்தக்கல்வெட்டினை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தினார

Comments
Post a Comment