திப்பு சுல்தானை எதிர்த்து வரி கொடுக்க மறுத்த தளி பாளையம் :
திப்பு சுல்தானை எதிர்த்து வரி கொடுக்க மறுத்த தளி பாளையம் :
......................~
#தளி_பாளையக்காரர்
#வெங்கடபதியெத்தலப்பநாயக்கர்
_
தளி பாளையக்காரர் ஆவணம்
................~
"...இப்படியிருக்கும் நாளையில் கோயமுத்தூர் கோட்டைக்கு சர்வாதிகாரத்தில் வந்த திம்மியக்கவுண்டர் என்கிறவர் பாளையப்பட்டுகள் யெல்லாம் சப்திபண்ணிக் கொள்ளவேணுமென்று நினைத்து பாளையக்காரர்களையெல்லாம் தம்முடைய பேட்டிக்கு வரச்சொல்லி உத்திரவு வந்தபடியினாலே அந்த சமயத்தில் வெங்கிடபதி யெத்துல நாயக்கர் அவருடைய பேட்டிக்கு போகாமலிருந்து அரண்மனைக்கு மெத்த பரிபந்தவறாயிருந்தபடியினாலே திம்மியக் கவுண்டனென்கிறவர் தளி பாளையக்காரனை கைபிடியாகி பிடிக்கவேணுமென்று திப்புசுல்தானவர்களுக்கு அர்ஜி... ஜெனத்தை தருவிச்சுக் கொண்டு திம்மியக் கவுண்டர் சயிதுமகம்மது சுயைதார் நாலாயிரம் குதிரை, பதினாயிரம் ஐனத்துடனே தளியின் பேரிலே வந்துயிரங்கினபடியினாலே வெங்கிடபதி யெத்துல நாயக்கர் அரண்மனையில் நாம் குமாரவர்க்கமானபடியினாலே அரண்மனையின் பேரிலே நாம் யெதிர்க்கலாகாதென்று நினைத்து தோறாய தம்முடைய குஞ்சுகுழந்தைகளை ஜெனத்துடனே புறப்பட்டு ஆனைமலைச் சாரலிலே கண்ணூரிலேயிருந்த சமயத்தில் யெற்றப்பனென்கிற பாளையக்காரர் (இராமபட்டிணம் பாளையக்காரர்) கண்டுபிடிச்சு திம்மைய கவுண்டனிடத்தில் ஒப்புவிச்சு போட்டார்.
தளியிலேயிருக்கப்பட்ட குதிரைகள் முதலான ஆதாரசாதாரமங்கள் யெல்லாம் திம்மைய கவுண்டனும் யெடுத்து திப்புசுல்தான் அவர்களுக்கு கொடுத்து சீர்மை சப்திபண்ணிக் கொண்டார்கள்.
பதினாறாம் பட்டம் குமாறாண்டி யெத்துலப்ப நாயக்கரும் அவர் பாட்டியார் ஆண்டிச்சியம்மாளும் தப்பிப்பிழைத்து தங்கள் ஸ்வஜசனுமாயிருபது ஜெனத்துடனே புறப்பட்டு திரிச்சிராப்பள்ளி தஞ்சாவூர் வரைக்கும் மகாராசஸ்ரீ கும்பினி துரையவர்களை பேட்டி பண்ணிக்கொள்ளவேணுமென்று போன சமயத்தில் மகாஸ்ரீ செனல் கமடிச் துரையவர்கள் தண்டுடனே சவாறி வந்தபடியினாலே துரைகள் பேட்டி பண்ணிக்கொள்ள வேணுமென்று கோயமுத்தூரு வரைக்கும் வந்து பேட்டி பண்ணிக்கொண்டபடியினாலே துரைகள் கடாக்ஷம் செய்து கனுவு பண்ணிக் கொண்டு வர்த்தமானங்களையெல்லாம் கொடுத்து குதிரை, கைவளை, சறம், வஸ்தாரபூசணங்கள் முதலான வெகுமதிகளும் பண்ணி குமாரவர்க்கமென்று சொல்லி முன் நிகுதி பிரகாரம் ஸ்ரீகர-விறுயடை உதருளபு பொன் நிகுதி செய்து பாளையப்பட்டிலே போயிருக்கச் சொல்லி உத்தரவு செய்தார்கள்."
.
செய்தி :
....~
மைசூர் அரசை உடையார் மன்னர்களிடமிருந்து அபகரித்துக்கொண்டு ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தனர்.
அப்போது தளி பாளையக்காரர்களுக்கும் மைசூர் அரசுக்கும் சுமுகமான உறவு இருக்கவில்லை எனவே தளி பாளையம் அப்போதிலிருந்து மைசூருக்கு சரிவர கப்பம் கட்டாமல் இருந்துவந்தது. பிறகு #திப்புசுல்தான் காலத்தில் கோயம்புத்தூர் கோட்டை சர்வாதிகாரிகளாக #திம்மயகவுண்டர் அவர்கள் இருந்தபோது பாளையங்களை ஜப்தி செய்ய முடிவெடுத்து தளி பாளையக்காரரை பேட்டிக்கு (சந்திப்பு) அழைத்தார் ஆனால் அப்போதைய தளி பாளைய மன்னரான #வெங்கடபதியெத்துலப்பநாயக்கரவர்கள் திம்மய கவுண்டர் சந்திப்பை புறக்கணித்துவிட்டு கோட்டையிலேயே இருந்துவிட்டார் இதனால் கோபமடைந்த திம்மக் கவுண்டர் திப்பு சுல்தானுடைய ஒப்புதலை பெற்றுக்கொண்டு தளபதி சையது முகமது தலைமையில் நாலாயிரம் குதிரைப்பபடை மற்றும் பத்தாயிரம் காலாட்படை வீரர்களுடன் படையெடுத்து வந்து தளி கோட்டையை முற்றுகையிட்டார்.
இத்தகு பெரிய படையை தளி என்னும் ஒரே ஒரு பாளையத்தால் மட்டும் வீழ்த்துவது என்பது முடியாத காரியம் என்பதை உணர்ந்த வெங்கடபதி யெத்துலப்ப நாயக்கரவர்கள் தனது குழந்தைகள் மற்றும் சனங்களுடன் தளி கோட்டையை விட்டு வெளியேறி #ஆனைமலை சரிவில் கண்ணூரில் தங்கியிருந்தார்கள். அப்போது மைசூர் அரசின் வற்புறுத்தலின் பேரில் தம் இனத்தாரை தாமே கைது செய்யவேண்டிய சங்கடமான நிலைக்கு #இராமபட்டணம்பாளையக்காரர்கள் தள்ளப்பட்டு திம்மக் கவுண்டர் அவர்களின் மகன் #எர்ரப்பகவுண்டரவர்கள் வெங்கடபதி யெத்துலப்ப நாயக்கரவர்களையும் அவரது சனங்களையும் கண்டுபிடித்து கைது செய்து மைசூர் அரசிடம் ஒப்படைத்துவிட்டார்.
பிறகு தளிபாளையத்தில் இருந்த குதிரைகள் ஆயுதங்கள் முதலானவைகளை திம்மய கவுண்டர் கைபற்றி திப்பு சுல்தானுக்கு அனுப்பிவைத்துவிட்டு தளி பாளையத்தை முழுமையாக ஜப்தி செய்துவிட்டார்.
பிற்காலங்களில் திப்புசுல்தான் ஆங்கிலேயர்களால் வீழ்த்தி கொல்லப்பட்டு மைசூர் அரசு ஆங்கிலேயர் வசமான பிறகு தளி பாளையக்காரர் வம்சத்தில் தப்பிய #குமாறாண்டியெத்துலப்பநாயக்கரும் அவர் பாட்டியார் #ஆண்டிச்சியம்மாளும் திருச்சி தஞ்சை ஆங்கிலேயதுரை ஸ்ரீசெனல் கமடிச் அவர்களை கோயம்பத்தூரில் சந்தித்து பேட்டிக் கண்டு பல்லக்கு, குதிரை, வஸ்திர பூசணங்கள் முதலான சகல மரியாதைகளுடன் தங்களுடைய தளி பாளையத்தை மீண்டும் மீட்டெடுத்தனர்.
_______________
#தளி_பாளையக்காரர்கள் சுதந்திர விரும்பிகள் வீரம்மிக்க இனத்தவர், இம்மண்ணிற்கு சம்மந்தமில்லாத அந்நியர்களின் கீழ் ஆட்சி செய்ய அவர்கள் விரும்பியதில்லை எனவே தான் திப்பு சுல்தானை எதிர்த்து நின்று வீழ்ந்தெழுந்த சிறுது காலத்திலேயே மீண்டும் ஆங்கிலேய #கும்பினியர்களையும் எதிர்த்து நின்று சக பாளையக்காரர்களை ஒன்றிணைத்து மீண்டும் கிளர்ச்சி செய்து ஆங்கிலேய அதிகாரியை தூக்கிலிட்டனர். இந்தியாவிலேயே முதன்முதலாக ஆங்கிலேயர்களையே தூக்கிலிட்ட பாளையம் என்னும் பெருமை தளி பாளையத்திற்கே உரியதாகும்...
#Thali_Palayapattu #Venkatapathi_Ethalappa_Nayakkar #Tippu_Sultan #Mysore #Ramapattinam #Yerrappa_Goundar
Comments
Post a Comment