திருப்பூர் இராமகிருஷ்ணன் அண்ணன், கம்பளத்தார் அரசியல் நம்பிக்கை நட்சத்திரம் ...
கம்பளத்தார் இல்ல
திருமண
விழா
......20.08.2023
எல்லா மக்கள்
நம்
மக்கள் என்ற கீர்த்தி வீரன்
எத்தலப்ப மன்னன் முழங்கிய மண்ணில்
நமது கம்பளத்தார் இன தலைவர் திருப்பூர் இராமகிருஷ்ணன் அண்ணன்,
கம்பளத்தார் அரசியல் நம்பிக்கை நட்சத்திரம் ...
கம்பளத்தார்களின் வழிகாட்டியாக திகழ்கின்ற, திருப்பூர்
மாவட்ட பனியன் தொழிற்சங்க தலைவரும் தொழிலதிபருமாகிய,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழகத்தின் பொதுசெயலாளர், (அகில் பேக்கேஜிங்) திரு இராமகிருஷ்ணன் அண்ணார் அவர்களின் இல்லத்திருமண விழா ,
மணமகன்:இரா .கலைவாணன் M .Sc (FDM )மணமகள்:கி .சோனா சின் M .Sc (FDM )
திருப்பூர் ,15 வேலம்பாளையம் ரிங்ரோடு ,சிறுபூழுவப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரா மஹாலில் அழகாக ,அற்புதமாக தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி.
உடுமலையில் இருந்து மாலை அன்பு தம்பி வங்கி மேலாளர் ஆனந்த் ,அருமை சிறு வாகனம் விற்பனை மேற்கொள்ளும் ராஜாவூர் ஈஸ்வரன் உடன் கிளம்பும் போதே இன்று தமிழகம் முழுக்க அனைத்து கம்பள சொந்தங்களை சந்திக்க இது அருமையான வாய்ப்பாக அமைந்தது எனக்கு அமைந்தது ..அண்ணாருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நன்றிகள் .
திருப்பூர் திருமண மண்டப நூழைவாயிலில் காலடி எடுத்துவைக்கும் போதே ..ஒரு அன்பு சொந்தம் ஆடி காரில் சிவா அண்ணா வணக்கம் என்றார் .வழியில் போக்குவரத்து நெரிசலில் நிற்கும்போது அழைத்ததால் சொந்தத்துடன் பேச இயலவில்லை .
சென்னையில் இருந்த வந்த சொந்தங்கள் சிறு அறிமுகம் செய்து பேசிக்கொண்டு ..திருமண மண்டபம் முன்னாள் நமது பொள்ளாச்சி மாப்பிள சோலார் தண்டபாணி மற்றும் கழக பொறுப்பில் இருக்கும் பெதப்பம்பட்டி ராமு மாப்பிளை குடும்பத்தார் ,மற்றும் இளைஞர் அணி அருமை அண்ணன் கருணாநிதி அவர்களுடன் பேசிவிட்டு புகைப்படம் எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தேன் .
வரவேற்பு நுழைவாயிலில் மணமகள் தந்தை அருமை மாமா இரா .கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ,தம்பி ஜல்லிபட்டி சரவணகுமார் .அருமை மாமா ஜல்லிபட்டி கோபால் வரவேற்றார்கள் ....மாமா இரா .கிருஷ்ணமூர்த்தி மாமா அவர்கள் அன்புடன் உரிமையோடு அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்...
மண்டபத்தில் நுழைந்து உடன் உடுமலை ஜெய்வந்த் காஸ் உரிமையாளர் விஜயகுமார் எனது மச்சினன் ஜல்லிபட்டியில் இருந்து நமது சொந்தங்கள் வந்துவிட்டார்கள் அவர்களையும் அழைத்துக்கொண்டு மேடைக்கு மணமக்களுக்கு வாழ்த்து சொல்ல போகலாம் என்று கூறிக்கொண்டு மேடையில் காத்திருந்தேன் .
அதற்குள் தெற்கு மாவட்ட பண்பாட்டு கழகத்தின் தலைவர்கள் சொந்தங்கள் என்னை பார்த்தவுடன் என்னிடம் நலம் விசாரித்துவிட்டு உங்களை வாட்சப் குழுவில் ,முகநூலில் பார்த்துஇருக்கிறோம் இன்று தான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறும்பொழுது அடடா ..இத்தனை வருடங்கள் பார்க்காமல் விட்டுவிட்டுமோ மனதில் சிறு வருத்தம் வந்துபோனது .
மேடையில் தளி ஜல்லிபட்டி சொந்தங்களுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் புகைப்படமும் எடுத்து கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கியது மனதில் நிலை இல்ல ஆனந்தம் வந்துபோனது.
பயண களைப்பில் இருந்ததால் பசி வேறு ..முதலில் இரவு உணவு அளவாக நாவிற்கு பிடித்த ஒரு இட்லி ,தோசை யுடன் முடித்து கொண்டேன் ...அதற்குள் திருப்பூர் திவான் மாப்பிள கார்த்திகேயன் மொபைலில் அழைத்துவிட்டார் ..மாமா எங்கு இருக்கிறீர்கள் என்று மாப்பிள டிபன் முடித்துவிட்டு வெளியே வந்து மண்டபத்தில் காபி அருந்துவதற்கு இடத்தை தேடிக்கொண்டே இருக்கும்பொழுதே நம்ம தளி பாளையப்பட்டு மாமா காந்தி அவர்கள் மாப்பிள இங்க வாங்க அழைத்து கொண்டு ..கரப்பாடி சொந்தங்கள் காப்பீடு முகவர் தம்பியை அறிமுகப்படுத்தினார் தம்பியின் மனைவி பல்லவன் கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிபுவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் .அருகே பொள்ளாச்சி சசிவர்மா அச்சகம் மாமாவிடம் சிறு மணித்துளிகள் பேசிவிட்டு நகர்ந்தது மகிழ்ச்சி .
அதற்குள் திருப்பூர் திவான் மாப்பிள்ளையும் ,அமித் மாப்பிள்ளையுடன் சந்தித்து சிறு உரையாடல் .
.திருமணவிழா பதிவுகள் ...நாளையும் தொடரும் .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681





Comments
Post a Comment