விடுதலைப்போரில் வீரத்தலைமகன் - தளி எத்தலப்ப மன்னர்

விடுதலைப்போரில்  வீரத்தலைமகன் - தளி எத்தலப்ப மன்னர்

தோற்றுவாய் 

தளி என்ற ஊர் கோயம்புத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ளது. இவ்வூர் 72 பாளையங்களில் ஒன்றாகும். எத்தலப்ப வம்சத்தினர் இவ்வூரில்  கோட்டைகள் கட்டி ஆண்டு வந்தனர். இவர்களைப்பற்றிய குறிப்புகள்  பின்வருமாறு: 

ஆதி முதல் பெனுகொண்ட விலிருந்து அதி வீரக்கம்பளம்  சோதி எனும் கயிலைகிரி வல்லக்கொண்ட சாமி பதம்  அனுதினமும் தொழுது போற்றி, மாதம் மும்மாரி பெய்து விளைவே பொங்க மகிழ்ச்சி உடனே விளங்கி வளரும் யோக நீதி முறை தவறாதபேர் என்னும் நிலைமை பெரும் கம்பளத்து நிபுணர்தானே! 

தளி  எத்தலப்பரின் எல்லைகளாக நாட்டுப்புற வழக்காறுகளில் கதைப்பாடல்களாகக் கூறப்படுகிறது. இதனை, 

நல்லாறு அக்கா தங்கச்சி மலைக்கு மேற்கு,

குடமுருட்டி சீத்தக்கல்லுக்கும் கிழக்கு

தாளவாய்பேட்டை கரைக்கும் தெற்கு 

முதுவார் சீமை எல்லைக்கும் வடக்கு

இந்தப் பகுதிகளுக்குட்பட்ட கிழமேல் பத்து நாளிகைகளிலும், தென் வடல் நாலு காத வழிகளையும் அளவுகளாகக் கொண்டு நான்கு பங்கு பூமிக்கும் பாளையக்காரராக நியமிக்கப்பட்டார். 

தளி  எத்தலப்பனின் முன்னோர்கள்  வல்லவர்களாகவும், எதிராளிகளைத் திணறடிக்கும்   வித்தைகளில் சிறந்தவர்களாகவும் எப்பேர்ப்பட்டவர்களையும் அடக்குவதில் தீரர்களாகவும் விளங்கினர்.  இவ் வம்சத்தில் கடைசியாக ஆட்சி செய்த மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பன் மற்றும் அவரது சகோதரர் குமராண்டி வெங்கிடுபதி எத்தலப்பன் ஆகியோர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். எத்தலப்பனை ஆங்கில வரலாற்று ஏடுகளில் 'யாதுல்' நாயக்கர்  எனவும் 'எட்டி' நாயக்கர்  எனவும் குறிப்பிடப்படுகிறது. 

இவர்கள் தெய்வ  பக்தி உடையவர்கள். சக்கதேவி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், கோட்டைப்பெருமாள் கோவில் முதலான கோவில்களை அமைத்து மராமரத்துப் பணிகளைச் செய்தனர். இவர்கள் எதிரிகளுக்கு முன்னால் ஆயிரம் பேர் நிற்பது போலத்தோற்றம் ஏற்படுத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்வர். துப்பாக்கிக் குண்டுகள்  தங்களின் மீது படாமல் செய்து குண்டுகளை வெடிக்கச் செய்வதில் வல்லவர்கள் எனவும் கூறுவர். 

இவர்கள் அனைத்து சமுதாய மக்கள் மதிக்கும் வண்ணம் இறைவனுக்கு பூசை வழிபாடுகள் நடந்தேற நிலங்களை மானியமாக வழங்கியுள்ளனர். திருமூர்த்தி நகரில் வீரமாத்தியம்மன் கோயிலுக்கு அருகில் 'குளத்துக்காடு' என்ற குளத்தைத் தங்களின்  உபயோகத்திற்கு வைத்திருந்தனர்.

தளி  எத்தலப்பரின் குடும்பம் 

எத்தலப்பன் தகப்பனார் பெயர் மலையாண்டி வெங்கிடபதி  குலசேகர எத்தலப்பன். தாயார் பெயர் கமலத்தாய். மனைவி பெயர் வீரகாட்டம்மாள்.தளி பெரிய பாளையமாதலால் சிறிய பாளையங்கள் தளிக்கு வரிகள் செலுத்தி வந்தன.

தளி யாதுல நாயக்கர், ஆங்கிலேயரை எதிர்ப்போரை தனது நண்பர்களாகக் கொண்டிருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, திப்பு சுல்தான், மைசூர் கிருஷ்ணப்ப  நாயக்கர், விருப்பாச்சி கோபால  நாயக்கர்,  மணப்பாறை இலட்சுமி நாயக்கர் கேரள வர்மன், துண்டாஜி வாக் முதலானோருடன்  நேரடி தொடர்பு வைத்திருந்தார்.

சான்று பகரும் ஆவணம் 

யாதுல  நாயக்கரும் விருப்பாட்சி  கோபால நாயக்கரும் கன்னட நாட்டுடன் நெருங்கிய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டனர். இதைப்பின்வரும் ஆங்கிலேய ஆவணம் உறுதிப் படுத்துகிறது. 

லுயனரட யேலயம ழக னுநடாi றாi றயள யடடநைன றiவா புழியட யேலயம கழபநன றiவா வாந iளெiபாவள ழக மயnயெனய யெனர.

1797 ல் தளி யாதுல நாயக்கரும் மணப்பாறை இலட்சுமிநாயக்கரும் தங்களுக்குள் நெருக்கமான இணைப்பை ஏற்படுத்திக்கொண்டனர். இதுவே திண்டுக்கல் கூட்டணிக்குக் கருவாக அமைந்தது. 

ஐn 1797 hந நளவயடிடiளாநன ய உடழளந யடடயைnஉந றiவா டயமளாஅi யெலயம ழக ஆயnயியசயi யனெ லுயனரட யேலயம ழக னுநடாi. வுhளை கழசஅநன வாந ரெஉடநரள ழக னiனெரபரட டநரபரந. (ஐடினை ஆயசஉh 1797இ Pசழஉநநனiபௌ ஏழட.223.P.2844)

திண்டுக்கல் கூட்டணி

திண்டுக்கல் கூட்டணித்தலைவர் கோபால் நாயக்கர் தனது பிரதிநிதி சோமநாத பிள்ளையைத் தளிக்கு அனுப்பி வைத்து ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிடுவது சம்பந்தமாக சில முக்கியமான தகவல்களைத் தெரிவித்தார். மங்கலம் பாளையக்காரர் தளிக்கு வந்து இவர்களுடன் கூட்டணியில் இணைந்தார். திண்டுக்கல் கூட்டணியில் தேவதானப்பட்டி பூசாரிநாயக்கர், தாராபுரம், காங்கேயம், கொழுமம், சங்ககிரி, கரூர், கன்னிவாடி, ரத்தினகிரி, நத்தம், மணப்பாறை, கடவூர், இடையகோட்டை, இராமகிரி, பெரியபட்டி, மெட்ராத்தி, மைவாடி, துங்காவி, தொண்டாமுத்தூர், தணிகைவாடி,அயோத்திபட்டி, வேதம்பட்டி, சோமன்துரை பாளையக்காரர்களும் இணைந்தனர். 

இவர்கள் மைசூர் மன்னர் திப்புசுல்தானைச் சந்தித்து இராணுவ  உதவி பெறவும், ஆங்கிலேயரை எதிர்க்கவும் ஆலோசனை செய்தனர். கோபால் நாயக்கர் பிரிட்டிசாருக்கு எதிராகப்போராட்ட ஏற்பாடுகளைச் செய்தார். சுதந்திர தாகம் கொண்ட குடிகளும், மற்ற தலைவர்களுக்கும் இது நம்பிக்கையை ஏற்படுத்தியது என சென்னை வருவாய் வாரியக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றது. 

தீபகற்பக் கூட்டணி

விருப்பாட்சி கோபால நாயக்கர்,  மணப்பாறை லட்சுமி நாயக்கர்,  தீரன் சின்னமலை, தளி எத்தலப்பர் மற்றும் முன்னணித் தலைவர்களுடன் தீபகற்பக் கூட்டணி அமைக்கப்பட்டது. இது 1801 சூன் 3 கோவைப் புரட்சியை அடிப்படையாகக்கொண்டது. இதற்கு   தளி எத்தலப்பரே முன்னிலை வகித்தார்.  இது தளிஞ்சிக் காடுகளில்  ஒத்திகையும் மேற்கொள்ளப் பட்டது.  வடக்கிருந்து துண்டாஜி வாக்கின் வருகை தாமதமானதால் புரட்சித்திட்டம் தோல்வி யடைந்தது.  இதனை மறு முனையில்  வெற்றிகரமாக இயக்க வைத்த பெருமை தளி எத்தலப்பரையே சாரும்.

முன்னணி படைவீரர்கள் அனைவரும் ஆங்கிலேயக் கும்பெனி வசம் சிக்கிக்கொண்ட நிலையில் தளி எத்தலப்பர் மட்டும் இறுதிவரையில் ஆங்கிலேயர் கைகளில் சிக்காமல்  மறைவு வாழ்க்கையே மேற்கொண்டார்.  1801 ஏப்ரல்  23 ஆம் நாள் ஆண்ட்ரோ கேதீசு எனும் ஆங்கிலேய அதிகாரி தூக்கிலிட்ட பிறகும் கூட அவர் வெளியே வரவில்லை.

செயல்படுத்துதல் மற்றும் செயல்பாடுகளிலும் தன் தீவிரத்தைச் சிறிதும் குறையாமல் குறைக்காமல் இறுதி வரைக்கும் எதிர்த்தே வாழ்ந்து மறைந்தார் தளி எத்தலப்பர்.

தளியில், கோபால் நாயக்கர் தகவல்  தொடர்புகளுக்காக தனது பிரதிநிதியாக சோமநாத பிள்ளையை நியமனம் செய்தார். மற்ற பகுதிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்ற பொதுவான நோக்கத்திற்காகத் திரண்டனர். இவர்கள் தங்களின் பிரதிநிதிகளாகத் தங்களின் வக்கீல்களை நியமனம் செய்தனர். இவர்கள் விருப்பாட்சியில் தங்கியிருந்து தகவல்களைப் பெற்று தங்கள் தலைவர்களுக்குத் தெரிவித்தனர்.  ஒன்றிணைந்த தலைவர்களின் பிரதிநிதியாக ஆறுமுகம் சேர்வைக்காரர் விருப்பாட்சி, கடவூர் இடையகோட்டைக்குச் சென்று தகவல்களைத் தெரிவித்தார். பாளையத் தலைவர்கள் ஒருவரையொருவர்  சந்தித்துக் கொண்டதுடன் இலட்சுமி நாயக்கருடன் ஆலோசனை செய்தனர். 

பாளையக்காரர்களின் செய்திகளைக்கூறவும் இராணுவ உதவிகளைப் பெறவும், திப்பு சுல்தானிடம் மணப்பாறை இலட்சுமி நாயக்கர் தூதராகச் சென்றார். 1799 ஏப்ரல்  4ல் திப்பு சுல்தானைச் சந்தித்துப்  பரிசுப்பொருட்களுடன் திரும்பினார். 

யாதுல (எட்டி) நாயக்கர் இந்த தீபகற்பக்கூட்டணி பலமான இயக்கமாக ஆகப்பாடுபட்டார். இவர் கன்னடப்போராளிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். மருதுபாண்டியரும். கோபால் நாயக்கரும் தங்களின் புரட்சிக்குழுக்களை ஒரு பொதுவான அமைப்பில்  இணைத்துக் கொண்டனர். 

தமிழ்நாட்டில்  புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக்கு இந்த முக்கியமான நடவடிக்கை  போராளிகளின் ஒருங்கிணைப்பை அதிகரிக்கச் செய்தது.  ஆங்கிலேயர் 1799 அக்டோபர் 16 ல் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்டதை அறிந்த தளி யாதுல நாயக்கர் மிகவும் வருத்தப்பட்டார். இதற்குப் பழி தீர்க்க வேண்டுமெனத் தீர்மானித்தார். பாளையங்கோட்டையில் சிறை வைக்கப்பட்டுள்ள ஊமைத்துரையையும், செவத்தையாவையும் விடுதலை செய்ய விருப்பாட்சி கோபால் நாயக்கருடன் ஆலோசனைசெய்தார். இவர்கள் பாஞ்சாலங் குறிச்சிப் போராளிளுக்கு ஊமைத்துரையை விடுதலை  செய்ய ஆதரவு அளித்தனர்.

திட்டமிடுதலும் செயல்படுதலும் 

ஊமைத்துரை விடுதலை ஆன பிறகும், அவன் பாஞ்சாலங் குறிச்சியில் நடத்திய போருக்கு தளி யாதுல நாயக்கர் படை வீரர்களை அனுப்பி ஊமைத்துரைக்கு ஆதரவு அளித்தார். அதன் பிறகு தளி பகுதியில்  போர்  தொடருவதற்கான சூழ்நிலை  ஏற்பட்டது.  தளி அரண்மனைக்கு வந்து வரி கட்டவேண்டும் என்று ஆணவத்துடன் கேட்ட ஆங்கிலேய  அதிகாரியைக் கைது செய்து தூக்கிலிடுமாறு ஆணையிட்டார். 

ஆங்கிலேயப்படை தளபதி இன்னிஸ்  துரை பாய்ச்சலூரில்  இருந்த புரட்சியாளர்களை விரட்டினார். இன்னிஸ் 1801 ஏப்ரல் 8 ல் விருப்பாட்சி திரும்பினான். இன்னிஸ் விருப்பாட்சி அருகில் உள்ள மலைகளில் புரட்சியாளர்கள் இருப்பதை அறிந்து கொண்டார். லெப்டிணென்ட் 'பிரைத்' என்பவனை பொள்ளாச்சிக்குப் படையுடன் அனுப்பி வைத்தான்.  அவன் அங்கிருந்த ஆனைமலை கோட்டை மற்றும் தளி கோட்டைக்கு மேல்புறம் உள்ள குன்றுப் பகுதிகளுக்குச் செல்லுமாறு படை வீரர்களுக்கு உத்தரவிட்டு  தப்பிச் சென்றவர்களில்   வழிகளைத் துண்டிக்குமாறு  கூறினான். 

ஆங்கிலேயனின் உத்தரவு 

இதன் பிறகு 1801 ஏப்ரல் 9 ல் யாதுல நாயக்கர் தன்னை வந்து பார்க்குமாறு  இன்னஸ் கூறினார்.  ஆனால் புரட்சித்தலைவனான யாதுல  நாயக்கர் மறுத்துவிட்டார்.  அதன் பிறகு இன்னஸ்  துரை கீழ்க்காணும் எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பினார்.

'கீழ்ப்படிதல்  மூலமாக  உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் அழிவிலிருந்தும் அவமானத்திலிருந்தும் காப்பாற்றிக்கொள்ளலாம், இன்னும் காலமிருக்கிறது.  கீழ் படிய மறுத்தால் பேரழிவு ஏற்படும். உன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் நன்கு யோசி. விழக்கூடிய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் உன் தலையிலேயே விழும்' என்றார். 

உறுதியாக புரட்சியாளரான யாதுல நாயக்கர் சரணடைய மறுத்துவிட்டார்.

'லுழர hயஎந ளவடைட வiஅந வழ ளயஎந லழரசளநடக யனெ கயஅடைல கசழஅ சரiளெ யனெ னளைபசயஉந டில ழடிநனநைnஉந. டீரவ டில ழடிநனநைnஉந நஎநசல அளைகழசவரநெ றடைட யவவநனெ லழர. ஊழளெனைநச றநடட டிநகழசந லழர அயமந உhழiஉந. நுஎநசல னசழி ழக டிடழழன வாயவ கயடடள றடைட டிந  ழn லழரச hநயன.' யு னநவநசஅiநென சநடிநட யள hந றயள லுயனரட யேலயம  சநஅiநென  ளவநயன கயளவ வழ வாந உழகெநனநசயவந உயரளந.

உறுதியாக நம்பிக்கையுடன் புரட்சியாளரான யாதுல நாயக்கர் ஆங்கிலேயரை எதிர்த்து விரட்டியடிக்க  வேண்டும் என்ற பொதுவான  லட்சியத்தில்   உறுதியாக நின்றார்.  1801 ஏப்ரல்   12 ஆம் நாள்  மாலையில்  தளிப்போர் நடைபெற்றுள்ளது. தளிக்கோட்டை தகர்த்து நொறுக்கப்பட்டது. ஆனைமலைக் கோட்டைப் பகுதியில் இருந்த பிரைத் தலைமையில்  போர் நடைபெற்றது. ஏப்ரல் 13  ல் புரட்சியாளர்கள் தங்கியிருந்த குன்றின் பகுதிகளைக் கண்டறிந்து அதன் அடிவாரத்தை அடைந்தான். யாதுல நாயக்கர் தலைமையில்  ஆன புரட்சிப்படை எதிரிகளைத் தாக்கியது.  பித்தளையால் ஆன 3 பவுண்டு பீரங்கிகளுடன்  புரட்சியாளர்கள் தாக்கினர். இருப்பினும் யாதுல் நாயக்கரில் முயற்சிகள் ஆங்கிலேயர் முன் பயனற்றுப்  போயின.  அதன் பின்னர் நடந்த மோதல்களில்  ஏற்பட்ட கடுமையான இழப்புகளுக்குப் பிறகு போராளிகள் காடுகளுக்குள் பின் வாங்கிச் சென்றனர். அதன்பின்னர் ஆங்கிலேயர் ஜல்லிபட்டி (மஞ்சநாயக்கன்பட்டி), தொண்டாமுத்தூரைத் தாக்கிக் கைப்பற்றினர். போரில்  தோற்றவர்கள் சிதறுண்டு போனார்கள். மலையில் தங்கி பிரிட்டிசாரை எதிர்த்த யாதுல் நாயக்கர் ஆண்டியம்மா, பெரியபட்டி நாகம நாயக்கர் ஆகியோர் உட்பட பலர் மலைக்காய்ச்சல் தாக்கப்பட்டு மலையிலேயே இறந்தனர். 

எத்தலப்பன் குடும்பம்

  ஃ

மலையாண்டி வெங்கிடபதி (குணசேகர எத்தலப்பன் பூபதி (கணவன்)

கமலத்தாயி  (மனைவி)

    ஃ                               ஃ

மலையாண்டி வெங்கிடபதி குமராண்டி வெங்கிடபதி

    எத்தலப்பன் (முதல் மகன்)         எத்தலப்பன் (இரண்டாவது மகன்)

வீரகட்டம்மாள்  (மருமகள்) குழந்தையம்மாள் (மருமகள்)

தளி எத்தலப்பன் பிறங்கடையினர் (வாரிசுகள்) 17பேர் தளிப் பாளையத்தை ஆட்சிசெய்து வந்துள்ளனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

1. எத்துல முத்தப்ப நாயக்கர்

2. காட்டாண்டி எத்தலப்ப நாயக்கர்

3. குறிச்சி ஆண்டி எத்தலப்ப நாயக்கர்

4. குண்டாண்டி எத்தலப்ப நாயக்கர்

5. பெரிய மலையாண்டி எத்தலப்ப நாயக்கர்

6. குமராண்டி எத்தலப்ப நாயக்கர்

7. ஆவி (ஆயன்) எத்தலப்ப நாயக்கர்

8. வெங்கிடபதி எத்தலப்ப நாயக்கர்

9. சின்ன வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கர்

10. முத்து மலையாண்டி எத்தலப்ப நாயக்கர்

11. மலையாண்டி வெங்கிடபதி எத்தலப்ப நாயக்கர்

12. பொன்னு மலையாண்டி எத்தலப்ப நாயக்கர்

13. மலையாண்டி எத்தலப்ப நாயக்கர்

14. கணக்கா மலையாண்டி எத்தலப்ப நாயக்கர்

15. கமலாண்டி எத்தலப்ப நாயக்கர்

16. மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கர்

17. மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கர்

தம்பி குமராண்டி வெங்கிடுபதி  எத்தலப்ப நாயக்கர்

தளி எத்தலப்ப மன்னரின் தந்தை ஆண்டுவந்த சல்லிப்பட்டிப் பாளையத்தில் பின்வரும் இருபத்தொரு தலைமுறையினர் ஆண்டுவந்தனர்.

1. எரம நாயக்கன்

2. சம்பாள நாயக்கன்

3. சக சம்பாள நாயக்கன்

4. மயிலப்பன நாயக்கன்

5. குறிச்சி நாயக்கன்

6. கதிர் நாயக்கன்

7. கணக்காண்டி நாயக்கன்

8. இரண வீராண்டி நாயக்கன்

9. அமணாண்டி நாயக்கன்

10. சல்லிவீரப்ப நாயக்கன்

11. கும்ம நாயக்கன்

12. பெரிய மலையாண்டி நாயக்கன்

13. இராமலிங்க மலையாண்டி நாயக்கன்

14. சின்ன மலையாண்டி நாயக்கன்

15. அமணலிங்கம நாயக்கன்

16. இலிங்காண்டி நாயக்கன்

17. நல்லமுத்து நாயக்கன்

18. அமணான்டி நாயக்கன்

19. வேங்கடபதி நாயக்கன்

20. இரங்கப்ப நாயக்கன்

21. பெரிய நல்லமுத்து நாயக்கன்

தளிபாளையம்அவருடைய மூதாதையர்கள் 1400 க்குப் பிறகு தளிபாளையப்பட்டுபகுதிஎத்தலப்பரின் முன்னோர் கட்டுப்பாட்டில் இருந்தது.   இந்த வம்சாவழியில் வந்தமன்னர் கடைசிமன்னர்தான் தளி எத்தலப்பமன்னர். தளிஎத்தலப்பமன்னர் இவர் திப்புசுல்தானின் ஆலோசனையின் பேரில் ஆங்கிலேயரையும் ஆங்கிலேயப்படைகளையும எதிர்க்கப் பட்டியலின தாழ்த்தப்பட்ட குடிகளோடு இசுலாமிய படை வீரர்களையும் சேர்த்துக் கொண்டு ஆங்கிலக்கிழக்கிந்திய நிர்வாகத்தை எதிர்க்க வீரம் சார்ந்த மக்கள் படையையும் அறிவுசார்ந்த புரட்சிப்படையையும் உருவாக்கி உள்ளார். ஆங்கிலேயர்கள் தங்களது நாட்குறிப்பில் யாதுலநாயக்கர்,எட்டிநாயக்கர் என்றும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

எத்தலப்பன்  தகப்பனார் மலையாண்டிவெங்கிடுபதிகுணசேகரஎத்தலப்பன்,தாயார் பெயர் கமலத்தாய்,மனைவிபெயர் ஆண்டம்மாள். இவர் 1763 பிப்ரவரி 12ல் பிறந்தார். 1801 மே மாதத்தில் தழிஞ்சி அரண்மனையில் தங்கியிருந்தபோது ஆங்கிலேயரின் கடுமையானதாக்குதலாலும் கடுமையான காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். 

மணி மண்டபம் எனும் சமூக அரங்கு

கடந்த  2021 செப்டம்பர் மாதம்  தமிழக அரசால் இரண்டு கோடியே அறுபத்தி இரண்டு லட்சத்திற்கு மணி மண்டபம் அறிவிக்கப்பட்டு  உடுமலை நகராட்சியில் தளி எத்தலப்பர் சிலையும், திருமூர்த்தி மலை  பயணியர் விடுதிக்குப்பின்புறம்  தளி எத்தலப்பர் சமூக அரங்கமும் அமைக்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

விடுதலை வேள்வியில்  தென் கொங்கு நாட்டில் முதல் விடுதலைப்போருக்கு வித்திட்ட மாவீரன் தளி எத்தலப்ப மன்னர். அதே போன்று   தீப கற்பக் கூட்டணிக்கு ஆதாரமாக விளங்கிய தளபதியும் தளி எத்தலப்பரே.

இந்திய விடுதலையில் 220 ஆண்டுகளுக்கு முன்பே ஆண்ட்ரோ கேதீசு எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்டு வீரத்தைப் பறைசாற்றிய தளி எத்தலப்ப மன்னரை விடுதலை நாளில் நினைவு கூர்வோம்.

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰