கேள்வி : சுய தொழில் செய்வது எவ்வளவு ஆபத்தானது?
சுய தொழில் என்பது, என்னை பொருத்தவரை அதுவொரு கடவுளால் கொடுக்கப்பட்ட
''பரிசு'' என்று சொல்வேன். 30 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட தொழில்கள்,
இன்றும் நடக்கிறது என்று சொன்னால், அந்த தொழில் மக்களால் நன்கு அறியப்பட்டு, வேறு மாற்று இல்லாமல் தொடர்ந்து இயங்குகிறது
என்று புரிந்து கொள்ளலாம். காலத்திற்கு தகுந்தபடி அது தன்னை புதுப்பித்துக்
கொள்கிறது என்றும் அர்த்தம்.
ஒரு தொழிலுக்கு மாற்று தொழில் இருக்க கூடாது. அது இயங்க அருகே எந்தவித தடையும் இருக்க கூடாது. அந்த பகுதி மக்கள் எளிதில் வந்து போகும்படி இருக்க வேண்டும். அந்த தொழில் மிக அவசியமானதாக இருக்க வேண்டும். இப்படி அமைந்துவிட்டால்,
தொழிலுக்கு எவ்வித ஆபத்தும் இருக்காது, தொடர்ந்து இயங்கும்!
நான் கடை வைத்திருந்த போது, எனக்கு இடதுபுறம் பிராந்தி கடை, வலதுபுறம் செல்போன் ரிப்பேர் கடை. ஓரளவு கடை இயங்கியது. செல்போன் கடை காலியானதும், வலதுபுறம் ''பார்'' ஆரம்பமானது. இடதுபுறம் பிராந்தி கடை, வலதுபுறம் குடிக்கும் பார்! எப்படி கடை நடக்கும்? மக்களுக்கு நன்கு அறிமுகமாகி தொழில் சூடு பிடிக்கும் போது, இப்படி தொல்லைகள் உண்டானால் எப்படி சரி செய்ய முடியும்? கடையை காலி செய்ததும், பிராந்தி கடைகளுக்கு கட்டுபாடுகள்
வந்து காலி செய்யப்பட்டது! இந்த கட்டுப்பாடுகள்
முதலிலேயே வந்தால் நான் பிழைத்திருப்பேன் இல்லையா?
காய்கறி ஆரம்பித்த போது, தள்ளு வண்டிகள் வியாபாரத்தால் நஷ்டம்! மக்கள் இலவசம் என்று சொன்னால், அது பினாயிலாக இருந்தாலும்
குடிக்க தயங்க மாட்டார்கள். நேர்மை என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்கும் அளவுக்கு போய்விட்டது.
என் மனைவி பாத்திர கடைக்கு போய், பாத்திரம் வைக்கும் எவர்சில்வர்
ஸ்டேண்டு விலையை கேட்க, அதன் விலை 2500ரூ என்பதால் திரும்பி வந்துவிட்டாள். அடுத்த ஒரு வாரத்திலேயே, அந்த ஸ்டேண்டு என் வீடு தேடி வந்துவிட்டது. விலை 1000ரூ! ஆன்லைன் வர்த்தகம் மக்களால் நன்றாக எளிதாக பழகிவிட்டார்கள்.
இப்படி இருக்கும் போது புதிதாக பாத்திர கடை வைத்து என்ன ஆக போகிறது?
ஆன்-லைன் வர்த்தகங்களே போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தற்சமயம் புதிதாக கடை வாடகைக்கு பிடித்து தொழில் தொடங்குவதைவிட, ஆன்-லைன் வியாபாரம் செய்வது எப்படி? என்று முயற்ச்சிக்கலாம்!

Comments
Post a Comment