கம்பளத்தார் இல்ல திருமண விழா ......20.08.2023
கம்பளத்தார் இல்ல திருமண விழா ......20.08.2023
எல்லா மக்கள் நம் மக்கள் என்ற கீர்த்தி வீரன் எத்தலப்ப மன்னன் முழங்கிய மண்ணில்
நமது கம்பளத்தார் இன தலைவர் திருப்பூர் இராமகிருஷ்ணன் அண்ணன், கம்பளத்தார் அரசியல் நம்பிக்கை நட்சத்திரம் ...
கம்பளத்தார்களின் வழிகாட்டியாக திகழ்கின்ற, திருப்பூர்
மாவட்ட பனியன் தொழிற்சங்க தலைவரும் தொழிலதிபருமாகிய,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழகத்தின் பொதுசெயலாளர், (அகில் பேக்கேஜிங்) திரு இராமகிருஷ்ணன் அண்ணார் அவர்களின் இல்லத்திருமண விழா ,
தேதி ;20-08-2023,நேரம் காலை :7.45 மணிக்குமேல் 9.00 மணிக்குள்
மணமகன்:இரா .கலைவாணன் M .Sc (FDM )மணமகள்:கி .சோனா சின் M .Sc (FDM )
திருப்பூர் ,15 வேலம்பாளையம் ரிங்ரோடு ,சிறுபூழுவப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரா மஹாலில் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் வேண்டுகிறோம் ,
மணமக்கள் இருவீட்டார் அழைப்பு ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
திருமண வாழ்வின் நம்பிக்கைகள் ....
வாழை மற்றும் தென்னங்கீற்று தோரணம் :
வாழை ,தென்னை அழியாத பயிர்கள் ,இவை எல்லா காலங்களிலும் வளரும்.அதன் எல்லா பாகங்களும் நமக்கு பயன்தரும்.அதுபோல மணமக்கள் நீடுழி வாழ வேண்டும் என்பதற்காக .
அம்மி மிதிப்பது :
அம்மியைப் போன்று மனவலிமை கிடைக்குமென்று ..
மெட்டி அணிவிப்பது :
வாழ்வின் பொறுப்புகளை சுட்டிக்காட்டும் கால்கட்டின் அடையாளம் ...
கெட்டிமேளம் கொட்டுவது :
அனைவரையும் திருமணம் பற்றி மட்டுமே சிந்திக்க வைக்க ...
மங்கள இசையினையே கேளும் வண்ணம் வாழ்வு அமைய ...
அரிசி தூவி வாழ்த்துவது :
உணவிற்கு பஞ்சமின்றி வாழ்வீர்கள் என்பதற்காக ...
மூன்று முடிச்சு :
அறம் ,பொருள் ,இன்பம் என்ற
உறுதிப் பொருளில் நிற்பதற்காக ...
மாலை மாற்றுதல் :
உள்ளத்தால் ஒன்றுபட மனமாற்றம் தேவை
அதை உணர்த்த மாலை ...

















Comments
Post a Comment