வாழ்க்கையை  தொலைத்து விட்டாய்  காசைத்தேடி....                            

இன்பத்தைத் தொலைத்து  விட்டு                                                               

பேராசையை கட்டிப்பிடித்துக் கொண்டாய்......                                

 சின்ன சின்ன சந்தோசங்களை புதைத்து விட்டு 

பெரிய பெரிய கற்பனைகளைத் தேடி 

உன்னை நீயே வலிக்கச் செய்து கொண்டாய்.....             

உன்னுள் இன்பத்தை வைத்துக் கொண்டு எங்கோ தேடி...                                      

அழகிய வாழ்வை  நீயே தொலைத்து விட்டாய்..........   


Comments