இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
நீண்ட ஆயுளோடும்.!
நிலைத்த மகிழ்வோடும்!
மனம் நிறைந்த மகிழ்வோடும்!
மாசற்ற அன்போடும் . .
எண்பத்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து எண்பத்தி ஏழாம் ஆண்டில்(87) அடியெடுத்து வைக்கும் எங்கள்
வரலாற்று ஆய்வு நடுவத்தின் வழிகாட்டி
உடுமலை வரலாறு, தென்கொங்கின் தொன்மங்கள் அடுத்து வரும் கரை வழி நாடு நூல் உருவாகக் காரணமாக இருந்து, ஒவ்வொரு நாளும் வரலாற்றுச் செய்திகளைக் கேட்டறிந்து ஒழுங்கு படுத்தும் பேராளுமை.
திருவள்ளுவர் திருக்கோட்டத்தின் பணிகளையும் திருத்தி வழங்கும் பண்பாளுமை
தினந்தோறும் இரு முறை தொலைபேசியில் அனைவரின் அன்பு நலத்தையும் கேட்டருளும் அன்பாளுமை
மாதந் தவறாமல் தனது சந்தாத் தொகையினை கொடுத்து அனைவரையும் கொடுக்க வைக்கும் சான்றாண்மை
எழுத்தாளர்களையும், படைப்பாளர்களையும் பன்முகத்தோடு கேட்டுப் பழகும் எழுத்தாளுமை
அனைவரையும் அன்றாடம் நெறிப்படுத்தும் நெறியாளுமை
இன்று எங்களது தலைவர் குமாரராஜா அய்யா அவர்களுக்கு பிறந்த நாள்,
வரலாற்று ஆய்வு நடுவத்தினரை வரலாற்றுக்குடும்பமாக மாற்றி அன்பால், பண்பால், பாசத்தால் கட்டிப்போடும் குடும்பத் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
உடுமலை வரலாறு 06.07.2023
Comments
Post a Comment