எனக்கு தெரிந்து கோவையில் வங்கிப்பணியில் இருக்கும்பொழுது என் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் உள்ளனர் .. வாடகை வீடுகளில் எதிர் வீடு பக்கத்து வீடு என பழக்கம். பொதுவா நாம கொஞ்சம் பணம் வந்தாலே இடம் வாங்குவோம் அப்புறம் நகை நட்டு லாம் வைச்சி கடன் வாங்கி வீடு கட்டுவோம் நம்ம இப்படி தானே. ஆனா அவங்க பணத்தை வைச்சிட்டு நகை அடகு கொடுத்து பணம் சம்பாரிப்பாங்க திரும்ப திரும்ப அந்த பணம் பணத்தை சம்பாரிக்கும் அதிக வருடம் கழித்து தான் ஒரே இடத்துல கடை வீடு னு கட்டிப்பாங்க தூர ஊருக்கு போனாலும் முக்கிய இடத்துல இடம் வாங்குவாங்க .எல்லாத்துக்கும் கணக்கு இருக்கும். கணக்குபதிவு இல்லாம ஒரு பிஸ்கட் ஐஸ்க்ரீம் கூட வாங்க மாட்டாங்க.
ஆனா விருந்தாளிகளை நல்லா கவனிப்பாங்க இன்னிக்கு அடகு கடைல இருந்து மாறி டெக்ஸ்டைல்ஸ் எலக்ட்ரிகல்ஸ் மாறினாலும் அவங்க குணம் அப்படியே இருக்கு .அவங்க வீட்டு பெண்கள் கடைல முக்கியத்துவம் பெற்றிருப்பாங்க. நமக்கு வெளில இருந்து பார்க்க தெரியாது.ஆனா பழகினா தெரியும்.அவங்களுக்கு என்ன வருது போகுதுனு கரெக்டா தெரியும்.
அவங்க குடும்பங்கள்ல குழந்தைகள் பிறந்த பிறகு வியாபாரத்திற்கு முதலாக ஒரு கணிசமான தொகையை பெண் வீட்டில் தருகிறார்கள்.பெரும்பாலும் அதை கடனாகவே தருகிறார்கள் வட்டி இல்லாமலும் வருட வட்டியிலும் அதை வியாபாரம் செய்து அந்த மாப்பிள்ளை திரும்ப அடைக்கிறார்.இதையும் பார்த்து உள்ளேன்.
அவர்கள் சமூகத்தில் யாரையும் விட்டு கொடுப்பதில்லை.பணத்தை கொடுத்து தாங்குகிறார்கள்.நாணயத்தை செலுத்தினால் அவர்களுக்கு அதிக உதவிகள் கிடைக்கும்.எனக்கு ஓரளவு இந்தி தெரியும் என்பதால் என் வாடிக்கையாளர்கள் அருமையாக பேசுவார்கள் .என்னிடம் அழகான தமிழ் பேசி தமிழ்யையும் தமிழ் கற்றுக்கொண்டார்கள் 😇👍
நன்றி ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681....
Comments
Post a Comment