உடுமலைபேட்டையில் கம்பள சமுதாயத்தில் மின்னும் கல்வி என்னும் வைரக்கற்கள் .. ..
உடுமலைபேட்டையில் கம்பள சமுதாயத்தில் மின்னும் கல்வி என்னும் வைரக்கற்கள் .. ..
நமது கம்பள சமுதாயத்தின் இளைஞர்கள் ,பெண்குழந்தைகள் ..கல்வி வளர்ச்சிக்கு ஆர்வமும் கொண்டவர் .அண்ணன் பொறியாளர் அசோகன் அவர்கள் (பன்னாட்டு நிறுவனம் ).எனக்கு தெரிந்து 10 வருடங்களுக்கு மேல் நிதி உதவிகள் செய்துள்ளார்கள் ..இதை கூட அவர் சொல்லவில்லை ..அவரால் பயனடைந்தவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் ..இவரை முதன் முதலாக நான் சந்தித்தது திருப்பூரில்.. எத்தலப்ப மகாஜன சங்கம் நடத்திய நம் சமுதாய குழந்தை செல்வங்களுக்கு கல்வி ஊக்க தொகை அளித்து தனது சமுதாய உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் ...தற்பொழுதும் தொடர்கிறது ..
முதன் முதலில் ஆரம்பித்த 6 ஐந்து வருடங்களுக்கு முன் கம்பள விருட்சம் அறக்கட்டளை ஆரம்பிக்கும் பொழுது ...முதல் மனிதராக வந்து அறக்கட்டளை உறுப்பினராக சேர்ந்து நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தார்.கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் முத்தான ஆலோசகர் ....நமது திருப்பூர் மாப்பிள்ளை கார்த்திகேயன் அவர்களின் மூலம் இந்த நன்கொடை அளித்தார் ..இப்பொழுதும் நம் கம்பள குழந்தை செல்வங்களுக்கு நமது அறக்கட்டளை மூலம் கல்வி நிதிஉதவி அளித்துக்கொண்டுள்ளார் ...
கடந்த ஞாயிறு அன்று உடுமலைபேட்டையில் நமது கம்பள இளைய சொந்தங்களுக்கு கல்வித்தொகையும் ,அவர்களின் அரசு தேர்வுகளுக்கு பொதுஅறிவை மேம்படுத்த விலை மதிப்புள்ள புத்தகங்களை அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ,வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் அவரது நினைவுகள் முழுவதும் ..நம் கம்பள சமுதாய குழந்தை செல்வங்கள் கல்வி வளர்ச்சியின் மீது இருக்கும் ..மாதம் ஒருமுறை என்னிடம் அறக்கட்டளையின் செயல்பாடுகளை கேட்டு அறிந்துகொள்வார்..
நமது கம்பள சொந்தங்கள் ..என் அருமை மாப்பிளை பெருமாள்சாமி (பன்னாட்டு நிறுவனம் ) பேசும்பொழுது போட்டி தேர்வுகளுக்கு உடுமலையில் நூலகம் அமைக்கவேண்டும் என்று தனது நீண்ட நாள் கனவை தெரிவித்தார் ..
என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய என் மாப்பிளை ஆசிரியர் தளி மாரிமுத்து தனது உரையில் கல்வி தொகை இன்னும் அடுத்தவருடம் அதிகம் தரப்படவேண்டும் தனது வேண்டுகோளை தெரிவித்தார் .
என் அருமை தம்பி மாசித்துரை (கனரக வாகன உரிமையாளர் ) பேசும்பொழுது தற்பொழுது இன்றய வளரும் தலைமுறையினர் கல்வியில் சரியான வழிகாட்டியாக நம் படித்த சொந்தங்களை அறிந்துகொண்டு அவர்களின் மூலம் நம் சமுதாயத்தில் முன்னேறிவருவது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்தார் .
என் அருமை மாப்பிள்ளை திருப்பூர் கார்த்திகேயன் (திருப்பூர் பின்னலாடை கலைஞர் ) பேசும் பொழுது கடந்த இரண்டு வருடங்களாக பணித்தொய்வு இருந்த காலங்களில் இருந்து மீண்டுவந்து கல்வி பணிகளில் நம் சொந்தங்கள் ஒன்று கூடுவது வளர்ச்சிக்கான அறிகுறியை தெரிவித்தார் .
தற்பொழுது சங்கங்கள் ,அறக்கட்டளைகள் என்றில்லமால் அனைத்து நமது கம்பள சொந்தங்களான இளைய தலைமுறையினருக்கு உதவிகள் செய்வது வரும் தலைமுறையில் கல்வி .வேலைவாய்ப்பு ,பொருளாதாரம் மூன்றிலும் மின்னுவார்கள் என்று அவரின் தன்னம்பிக்கையை பாராட்டுவோம் .வாழ்த்துவோம் ..குறிப்பாக இந்த உதவிகளுக்கு பெரும் துணையாக இருக்கும் எங்கள் அக்கா பேபி அசோகன் அவர்களுக்கு நம் கம்பள சமுதாயம் சார்பாக வாழ்த்தி வணங்குவோம் ..நன்றி ..





Comments
Post a Comment