கழுத்தருத்தான்பாளையம்
தாத்தையன் கோவில் தீர்த்தம்
இந்த கோவில் உள்ள இடத்தில்தான் விருப்பாச்சி போரில் வெற்றிபெற்ற நட்டித்தாத்தையன் பல்லடம் ஜல்லிபட்டிக்கு திரும்பி வரும்போது தண்ணீர் தாகம் எடுக்கவே தனது குதிரையை விட்டு இறங்கி நீர் அருந்தும் சமையம் அவரை பின்தொடர்ந்து வந்த எதிகளாள் பின்புறமாக இருந்து கழுத்தருத்து கொள்ளப்பட்டார். நட்டத்தான்தனின் உடலினை அவரது குதிரை வங்கப்பாளையம் கொண்டுள்ளது சேர்த்தது. நட்டிதாத்தனின் தலையை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடம் தீ பற்றி எறியவே எதிரிகள் பயந்துவிட்டனர். பின்பு ஒரு தங்கபேளையில் நட்டித்தாத்தனின் தலை வைக்கப்பட்டு பல்லடம் ஜல்லிபட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நட்டிதாத்தனின் தலையோடு அவரது மனைவி அக்கினி குண்டத்தில் இறங்கிவிட்டார் . அந்தகுண்டம்.உருவாக்கியவர்களும்.வழிபடவே..அதன்அருகிலேயே
கருப்பண்ணசாமி கோவில் கட்டப்பட்டது. தற்போது மண்டபம்வேலைகள் நடைபெறுகிறது. அக்கினி குண்டத்திக்கு கொள்ளி வைத்து நெருப்பினை உண்டாக்கியது பல்லடம் ஜல்லிபட்டியில் வாழ்ந்த கவுண்டர் சமுதாயத்தினர். கழுத்தரத்தான்பாளைத்தில் வாழும் நம் இன மக்கள் முன்வர வேண்டும்.
தாத்தையன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ஆகி உள்ளது நம் இன மக்கள் பத்து குடும்பம் உள்ளது நமது ஒத்துழைப்பும் இதில் இருந்தால் தாத்தையன் கோவிலை சீரும் சிறப்புமாக எடுத்துச் செல்லலாம்
நன்றி பதிவர்கள். : சுரேஷ் ,செல்வராணி (குஜ்ஜபொம்மு குலங்கள்)
Comments
Post a Comment