உங்களிடம் உள்ள எந்தவொரு பழக்கம், 22 வயது இளைஞரான எனக்கு உதவும் என நினைக்கிறீர்கள்?
இப்போது நினைத்து ஆச்சரியமடைகிறேன்.!'
சிந்தனை, கிளர்ச்சி, ஆசை என்னுள் ஏன் இல்லை..?
நான் துறவி இல்லை.. பெரிய லட்சியவாதி இல்லை , நின்று நிதானித்து எண்ணி காலடி எடுத்து நடக்கும் பொறுமைசாலி இல்லை.. பெரிதினில் பெரிது கேட்கும் பேரறிவாளன் இல்லை ..
கோடு கிழித்து கூட்டுக்குள் வாழும் கொள்கையாளன் இல்லை ..!"
நான் யார்.? ..எங்கே போகிறேன்..? பயணம் எது..? .. பாதை எது .?.எதுவும் தெரியாது.!!. 25 வயது வரை..!!! ..
எது தடுத்தது …
அது தெரியவில்லை ..
வளர்ந்தது பட்டிக்காடு, காடு மேடு. கண்மாய் , ஆறு குளம் அருவி மலை என இளவட்ட வயதில் விளையாட்டு நண்பர்களோடு சுற்றி இருக்கிறேன் ..
அதில்,
கெட்டுப் போய்.. பட்டுப் போனவர்களும் உண்டு… பக்குவப்பட்டவர்களும் உண்டு …
கட்டுப்பாடு அதிகம் இல்லாத கல்லூரி விடுதியில் தங்கி படித்திருக்கிறேன் ..
கண்காணிப்பு இல்லாத தொலை தூரத்தில் .. நண்பர்களுடன், தனி அறையில், தங்கி, சமைத்து உண்டு,உறங்கி ,ஒரு வருடம் கழி(ளி)த்து இருக்கிறேன் .. .
வியாபார சந்திப்பு.. விருதுகளில், சங்க கூட்டங்களில், சுற்றுலா சென்ற இடங்களில் ..
அரங்குகளில், விருந்துகளில் ஆறாக மது ஓட.. ..திரைப்படக் காட்சியில் கண்டது போல், மது உண்டு , மயங்கி பலர் தள்ளாட, உடன் வந்தவரும் சேர்ந்து கூத்தாட ,
வன்மமும், வார்த்தைகளும் தறி கெட்டு, தரங்கெட்டு ஓட, பார்த்திருக்கிறேன் ..
செல்வா,
பழகலாம் , விட்டு விடலாம் தவறில்லை ..
உடம்பைக் கெடுக்காது,ஒன்றும் ஆகாது …
கல்லூரியில்,வாழ்க்கையில், வந்த இடத்தில், நண்பர்கள் கூட்டத்தில் இது .. சகஜம் கற்று மற..
ஒல்லி உடம்புக்கு ஏற்ற மருந்து , அடித்தால் தெரியும் அப்போது நீ கில்லி ..!'
ஒரு நாள் தானே தெரியாது ..!'
சூடு தணியும், சொர்க்கம் தெரியும் ..
தூக்கம் வரும், துக்கம் போகும்..
இடத்துக்கு ஏற்ப இணங்கி வாழ்..
ஒத்துப்போ, ஒதுங்காதே..
இன்று ஒரு நாள் மட்டும் ..!'
சொல்லிப் பார்த்தனர் ..
போடா சாம்பாரு.. அரை வேக்காடு.. போதி மரத்துபுத்தரு.. புகைஞ்சு தீஞ்சு போன குக்கரு.. புடவை கட்டும் பொண்டுலு.. .. ஒத்தையில குத்தவச்ச குரங்கு ..!' *
எள்ளி, ஏளனம் பேசி,திட்டி .. ஏதேதோ செய்தனர். ..
ஏனோ ஏற்கவில்லை .. எப்படி வந்தது எனக்கு புரியவில்லை ..
இது மட்டுமல்ல,
கள்ளை, சாராயத்தை, சிகரெட் புகையை, புகையிலையை, காசு விளையாடும் சூதை, சிந்தையாலும் தொட்டதில்லை..
மனைவி தவிர மற்றவரின் கண் அசைவில் விழுந்ததில்லை …
யார் விதைத்தார்..யார் வளர்த்தார் எப்படி வளர்ந்தது ..தெரியாது ..
இப்போது நினைத்துப் பார்க்கிறேன் ..!'
அவருக்கு பிடிக்காது ..!"
பத்த வச்ச பீடியை அணைத்து ஒளித்து தள்ளி நின்று பேசுபவர்கள் பலர் ..!'
நான் போகலை ..நீ போய் வாங்கி வா.. நான் போனா கண்டுபிடிச்சிடுவாரு..
போதை ஆசாமி .. வேறு ஒருவரை சரக்கு வாங்க அனுப்பியதை பார்த்திருக்கிறேன்….!!'
அன்பு, அக்கறை, ஆலோசனை, கடிதம், கை வைத்தியம், சிறு சிறு உதவி..
ஒழுக்கம், நேர்மை, கல்வி, தொழில், நம்பிக்கை ..!'
தேசபக்தி, தெய்வ பக்தி..!"
தனக்கான பாதையை சரியாக வகுத்துக் கொண்ட மனிதர்களிடம் இயல்பான மரியாதை நிச்சயம் கிடைக்கிறது …
அதை அருகில் இருந்து உள்வாங்கி இருக்கிறேன் ..!"
அந்த விதை என்னை அறியாமலேயே, எனக்குள் விழுந்து இருக்கிறது ..!"
எப்படியோ முளைத்திருக்கிறது ..!'
அப்பாவுக்கு நன்றி ..!'
நன்றி.🍀
Comments
Post a Comment