சூலை 15 , 16 ஓசூர் தொல்லியல் கருத்தரங்கு சென்று வந்த பயணக்கட்டுரை...15-07-2023
சூலை 15 , 16 ஓசூர் தொல்லியல் கருத்தரங்கு சென்று வந்த பயணக்கட்டுரை
தொல்லியல் கழகத்தில் 2019 ஆம் ஆண்டு கோவை பி.எஸ். ஜி.கலந்து கொண்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனப் பேசிக்கொண்டிருந்தோம். 2020 மற்றும் 2021 ல் கொரோனாவால் நிகழ்வு நடத்தப்படவில்லை. 2022 ல் சூலை 15 புதுக்கோட்டையில் நிகழ்வு அதற்கு இதே போல் நானும் பாப்பா, சிவா மூன்று பேர் மட்டுமே சென்று வந்தோம்.
இந்த ஆண்டு யாரேனும் இருவரை அழைத்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தபோது இறுதி வரை யாரும் ஒத்துவரவில்லை. சரி நாமே செல்வோம் என்று சிவாவுடன் பேசி முடிவு செய்தோம்.
அதிலும் மலையாண்டிபட்டணம் கல்விப்பரிசளிப்பு விழா இதற்காக காலையில் வைத்து அதற்கெனப் பாராளுமன்ற உறுப்பினரை பார்த்து நேரில் அழைத்து அவரும்வருவதாகச் சொல்லி மிகச்சரியாக காலை 8.28 க்கு வந்து பேசிவிட்டு பரிசளித்துவிட்டுச் செல்ல மணியோ 10.40 ஆகிவிட்டது.
சரியென்று வீட்டுக்கு வந்தால் அப்பொழுதுதான் அறிவு எலுமிச்சை சாப்பாடு தாளித்துக்கொண்டிருந்தார். கோபத்தோடு சத்தம் போட காலை 7.20 க்கு வந்துவிட்ட நிகழ்வு முடிந்து வந்து வாகனத்தை வெளியில் எடுத்து துடைத்து தயாராகிவிட்டார். அவளுடன் கத்திக்கொண்டிருந்த நான் எதுவும் எடுக்காமல் முந்தைய நாள் இரவு ஒரு பையில் எடுத்து வைத்திருந்த துணிகளோடு பையை எடுத்துவர முக்கியமான உள்ளாடைகளை பிரஷ் பேஸ்ட் எடுக்க மறந்துவிட்டேன். சத்தம் போட்டு வெளியே வர சிவா சரியாக வாகனம் தயாராக நிற்க நானும் அடுத்தது கவனிக்காமல் வண்டியில் முன் சீட்டின் ஏறி அமர்ந்துவிட்டேன். வண்டி கிளம்பி ஊரைத் தாண்டிய பிறகுதான் தெரிந்தது தண்ணீர் பாட்டல் எடுக்கவில்லை. தண்ணீர் பிடிக்கவில்லை. என்ன செய்ய? சரி சமாளிப்போம் என்று வாகனம் உடுமலை வந்துவிட்டது.
சிவா சார் எல்லாம் எடுத்தாச்சா எனக்கேட்க அவரும் அவருக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டவர் ஓ . . எல்லா எடுத்தாச்சு என்று சொன்னவர். நானும் என்னோடதையும் சேர்த்து எடுத்துக்கொண்டதாக நினைத்து சரி போலாம் என்று பேசிக்கொண்டிருக்கு எலையமுத்தூர் பிரிவு வந்து உடுமலைக்குள் வாகனம் நுழைந்தது.
யூனியன் ஆபிஸ் அருகில் வரும்போது மேடத்தையும் அழைத்துச்செல்லலாம் ஆனால் பள்ளி இருக்கே, அல்லது ஷெர்லி மேடத்தை அழைத்துச் செல்லலாம் அவர்களுக்கும் பள்ளி இருக்கே என்ன செய்ய? பெட்ரோல் செலவானாலும் பரவாயில்லை. மனச் சங்கடமில்லாமல் சென்று வரலாம். உடன் பாப்பா மட்டுமே சரி உடுமலை தாண்டி திருப்பூர் சாலையில் வாகனம் சென்று கொண்டிருக்கிறது.
சிவா' ஏன் தோழர் இங்கேயே பெட்ரோல் போட்டுக்கலாம்' ஒரு ரெண்டாயிரத்துக்கு என்று சொல்லிக்கொண்டே வாகனம் பெட்ரோல் பங்கில் சென்று நின்றது. மணி 11.20 ஆம். காலை 9.மணிக்கு கிளம்ப வேண்டியது கல்விப்பரிசு நிகழ்வால் காலம் தாழ்ந்து இப்பொழுதுதான் கிளம்பினோம்.
18 ஆவது ஆண்டுகல்விப்பரிசளிப்பு விழா நிகழ்வுகளோடு பயணம் செய்வோம். கடந்த 2006-2007 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒரு பொங்கல் நாளில் அப்போதைய அமைச்சர் திரு.சண்முகவேலு அவர்களின் தலைமையில் இந்த பணி தொடங்கியது. 2010 வரை 1000, 750,500 கொடுத்துக்கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு 2000, 1500, 1000 என தொகை உயர்த்தப்பட்டு தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. இது 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுத்து வருவது ஒரு சிலருக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தத்தான் செய்யும் அதையும் கடந்துதான் இந்தப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
நினைத்துக்கொண்டே இருக்கு 'ஏங்க எத்தனை ரூபாய்க்கு பெட்ரோல் போடணும் என்று ஊழியர் கேட்க, ரெண்டாயிரத்து ஐநூறு கார்டு போடணும் என்று சொல்லி பெட்ரோல் போட்டனர். நினைவில் மீண்டும் பள்ளிக்;குச்சென்று வருவதற்கும், பெட்ரோல் போட்டு முடிவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
பெட்ரோல் போட்டுக்கொண்டு டயர்களில் காற்று பிடிக்க வேண்டும் காற்றுபிடிக்கப் போகும்போது பெயர்ப்பலகையில் இருக்கும் எழுத்துகள் சரிவர தெரியவில்லை. உடனே, சிவா, நான் சின்னப்பயைனா இருக்கும் போது கண்ணு நல்லாத் தெரிஞ்சது இப்போ கண்ணாடி போட்டாலும் தெரியவில்லை என்று பேசிக்கொண்டே பாப்பா நீ பாரு நெக்ஸா என்ன பெட்ரோல் அளவுன்னு பாருங்க 'ன்னு சொல்ல காத்து பிடித்துக்கொண்டு வாகனம் கிளம்பியது.
திருப்பூர் சாலையில் சின்னவீர்ம்பட்டி செல்லும்போது விஜயலட்சுமி மேடம் முதல் அழைப்பு. என்னங்க சார் எங்கீருக்கீங்க, மேடம், நாங்க கிளம்பிட்டோம் மேடம் நிகழ்வு முடிந்து வந்துட்டோம் மேடம் என்று பேசவே மீண்டும் ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்ல, காலையில் சாப்பிட்லலேனு சொன்னீங்க, வாங்க சாப்பிட்டுட்டுப் போலாம்னு கூப்பிட்டேன்னு சொன்னார்.
உண்மையில் உணவு குறித்தும் உடல்நலம் குறித்தும் மிகுந்த அக்கறையோடு எப்பொழுதும் விசாரித்து சரிப்படுத்தும் ஒரு நல்ல உடன்பிறப்பாகவே இருந்து வருகிறார். மீண்டும் கல்விப்பரிசு குறித்தும், நிகழ்வு குறித்தும் ஒரு சில உரையாடல்களோடு பயணம் தொடங்கியது. தொலைபேசியும் பேசி முடித்தேன். மணி 11. 50 இருக்கும் குடிமங்கலம் பகுதியை வாகனம் தாண்டிக்கொண்டிருக்க, அடுத்த தொலைபேசி லட்சுமிபதியிடம், காலையில் இட்லி தோசை வாங்கியது வந்து எடுத்து செல்லுங்கள். என்று பேசிக்கொண்டிருக்க அவரும் பேசிக்கொண்டே வீட்டுக்கு வந்து, இட்லியும் தோசையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவரும் பள்ளி நிகழ்வு குறித்தும், பணம் ரெண்டாயிரம் காணாமற் போனது குறித்தும் மிகவும் விளக்கமாகவும் பேசிக்கொண்டு மீண்டும் பேசுவதாக சொல்லி போனை நிறுத்திவிட்டார்.
மீண்டும் மளிகை செல்வம் தொலைபேசி எம்.பி. க்கு நோட்ஸ் போட்டுக்கொடுத்தது சதீஷ் சொல்லித்தான் தான் கொடுத்ததாக செல்வம் சொல்கிறார். எனவே, மீண்டும் அதையே மீண்டும் சொல்லி சொல்லி பேசினார்.
வாகனத்தில் பாப்பாவிடம் சண்டை சச்சரவுகளுடன் பயணம் தொடர்கிறது. மணி 12.30 பல்லடம் அருகில் சென்றுவிட்டோம். அவினாசி வரை சென்று மேம்பாலத்தில் மேலே ஏறினால் அவ்வளவுதான் ஓசூர் வரை கீழே இறங்கவேண்டியதில்லை என்றுபேசிக்கொண்டிருக்க மீ;ண்டும் லட்சுமி பதி தொலைபேசி. எப்படி இரண்டாயிரம் பணம் காணாமல் போனது என்பது பற்றி பேசிக்கொண்டிருக்க, மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் தொலைபேசிக்கு வந்து மீண்டும் நிகழ்வு குறித்து பேசினார். செல்வம் குறித்துக் கேட்டறிந்தார். யாரவர் குறைந்தளவு கூட மேனர்ஸ் இல்லாமல் இது போன்று பேசும்போது எனக்கே சீட் தருகிறார் என்று கடிந்துகொண்டதையும் கூறிவிட்டு பணம் எப்படி காணாமல் போனது என்ற மனவோட்டத்தோடே வாகனம் சென்றுகொண்டிருக்கிறது.
இதற்குள் துணைத்தலைவர் ராஜ்சுந்தரம் தொலைபேசியில் வந்து மகிழம் குறித்தான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். வியாழக்கிழமை சாமராயப்பட்டி மகிழம் இயற்கை உர அங்காடி திறக்கப்பட்டது.
சிவா, சார் வி.கே.எஸ். வுர்றேன்று சொன்னாரு நீங்க கூப்பிட்டு பேசுங்க என்று சொன்னதும் உடனே வி.கே.எஸ். ஆவர்களுக்கு அழைப்பு கொடுக்க அவரோ, சந்தோஷமா போயிட்டு வாங்க . நா வர்ரேன்னு சொல்லவே இல்லை என்று கூறிவிட்டார். உடனே நானும் சேலத்தில் சிவப்பிரியன் வருவதாகவும் அவரை அழைத்துச்செல்வதால் அமர்ந்து செல்ல நெருக்கடி யாக இருக்கும் என்றும் பேசிக்கொண்டிருக்க வாகனம் அருக்காணியம்மாள் உணவகத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது.
சரி, ஒரு டீ குடித்துவிட்டு போகலாம் என்றவுடன் ஏதோ புகை வருது என்று சொல்ல இருவரும் யோசனை செய்ய, இNதூ இந்த விறகு எரிக்கும் புகைதான் என்று மனம் அமைதிப்படுத்திக் கொண்டனர்.
சரி, அருக்காணிஅம்மாள்உணவகத்தில் தேநீர் செலவு, பிஸ்கட் வாங்கியது 135 பாப்பாவுக்கு நிலக்கடலை 30 சேர்த்து 165. சிவா எதுவும் வேண்டாமெனச்சொல்ல இன்னும் எவ்வளவு தூரம் போகனும். ஏதுவுமே வேண்டாமென்று சொல்லிவிட வாகனம் புறப்பட்டது.
தொடர்ந்து ராஜ்சுந்தரம், மளிகை செல்வம், லட்சுமிபதி, வீட்டம்மா, விஜி மேடம் என மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டு வந்துவிட்டு தொலைபேசியை கொஞ்சம் ஓய்வு கொடுத்து இனி பேசுவதில்லை பிறகு பேசவில்லை. இடையில் சதீஷ் சார் தொலைபேசி எடுக்கவில்லை. 1.36 திருவாச்சி எனும் ஊரைக் கடந்து செல்லும்போது முனைவர் ஷெர்லி அழைத்து நிகழ்வு சிறப்பாக நடந்தது தனக்கும் வாய்;ப்பு கொடுத்தமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மகேந்திரன் இவரிடம் படித்தது இன்றுதான் தெரிந்தது. ஷெர்லி இந்த நிகழ்வுக்கு வந்தது கூடுதல் பலமே. அவரும் நிகழ்வில் தனக்கான முத்திரையைப் பதித்தார் என்பதே தனிக்கதை. இவர்களுடன் ராஜ்சுந்தரம், வி.கே.எஸ். சும் வருகை தந்ததும் கூடுதல் சிறப்பு.
பேசிக்கொண்டிருக்கும் போது பெருந்துறை அருகில் வாகனம் செல்வது தெரிந்தது. சக்தி குழுமங்களின் கட்டிடங்களும், சாலையில் பாலம் அமைக்கும் வேலைகளும் பகுதியாக இருந்தது. பெருந்துறை என்றதும் அம்பேத்கார் ஆய்வாளர் மதிவண்ணன் பெயரும் முகமும் வந்து சென்றது. சிவாவிடம் மதிவண்ணன் குறித்தும், பேசிக்கொண்டே செல்ல, தாழையூர் வந்தது. தொலைபேசியும் நின்றது.
ஈரோடு பகுதி அடுத்து சேலம் வருவதற்கான அறிகுறிகளாக விநாயக மிசன் கட்டிடங்களும், 108 சிவலிங்கக் கோயிலும் வழிமேல் வந்து சென்றது. சேலத்திற்கு முகப்பே இந்த விநாயகா சத்ய பாமா பல்கலைக்கழகம் என்றும், கிருபானந்த வாரியாரால் தான் இந்த பல்கலைக்கழகம் உருவாக்கம் பெற்றதெனக்யுகூறிக்கொண்டே சென்றார்.
மீண்டும் லட்சுமிபதியின் தொலைபேசி எம்.பி குறித்தும், எம்.பியிடம் பேசியது குறித்தும் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக பேசிக்கொண்ட செல்லவேண்டியதாயிற்று. மகளிர் திட்டம் சார்பில் குழு அமைக்கவும், அதற்கு எம்.பி. பார்ப்பதெனவும் பேசிக்கொண்டோம். அடுத்த கிழமை உயர்நிலைப்பள்ளிக்கு சென்று தொகை காணாமற் போனது குறித்தும், தலைமையாசிரியர் சதீஷ் குறித்தும் நேரில் பேசுவதாகச் சொன்னார். மேலும் மகளிர் குழு எவ்வளவு முகாமையானது ஏன் தொடங்கவேண்டும், எப்படி தொடங்க வேண்டும் என்றெல்லாம் லட்சுமிபதி கேட்டறிந்தார். என்ன செய்ய வாகனத்தில் செல்லும் போது டைம் பாசாக வேண்டுமே,
அடுத்து சிவா சார் தோழர் இத வீடியோ எடுங்க என்றதும் தொலைபேசி நிறுத்தி வைத்து விட்டு அடுத்த வேலைக்குச் செல்லவேண்டியதாயிற்று. சீட் பெல்ட் ரொம்ப நேரம் போடாமல் இருந்ததால் வண்டிக்கு கத்திக் கத்தி தொண்டை கட்டி நின்றுவிட்டதாகச் சிவா சொன்னார். லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீட் பெல்ட் போட்டுக்கொண்டு வாகனம் சென்று கொண்டிருந்தது.
சேலம் டோல்கேட் வாகனம் நின்றுவிட்டது. ஏனெனில் அந்த இக்வடாஸில் பணம் இல்லை. எனவே, என்ன செய்ய, மீண்டும் திரும்பி வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு டோல் கேட் தாண்டி சென்று ரோட்டில் இருந்த நண்பரிடம் சொல்லி இருந்த ஒட்டியை எடுத்துவிட்டு ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய சுமார் 30 நிமிடங்களுக்கு மேலானது. ஆதார் அட்டை உடனடியாகக் கிடைக்கவில்லை. அதைத் தேடி எடுத்து வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அதை ஏக்டிவேட் செய்ய முப்பது நிமிடங்களுக்கு மேலானது. சுpவா வும் பாப்பாவும் வண்டியில் அமர்ந்து கொண்டனர்.
பிறகு மீண்டும் அதே டோல்கேட்டில் வந்து அதைக்காட்டிவிட்டு மீண்டு வந்து ஒட்டி வாங்கிய நண்பரிடம் கொடுத்து அந்த ஒட்டியை கிழித்து எறிந்துவிட்டு இந்த ஏர்டெல் ஒட்டியை ஒட்டினார். வாகனம் 30 நிமிட இடைவெளிக்குப்பிறகு கிளம்பியது. மணி 2.30க்கு மேல், பசி வயிறைக் கிள்ளி எடுத்தது. சரி தண்ணீர் பாட்டல், என்னசெய்ய பாப்பாவிடம் கேட்க மரியாதையில்லாமல் பேச, இனி வரும் குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்கள் வேறு என்ன செய்ய,? அறிவும் வேண்டுமென்ற செய்வது தெரிகிறது. அவர் எப்போது தெரிந்துகொள்வார் என்று கவலையே மேலோங்கி இருந்துது.
பூசாரிபட்டி தாண்டி வாகனம் ஒரு ஓரத்தில் நிறுத்த காரில் அமர்ந்தே எலுமிச்சச் சோறு சாப்பிட தண்ணீர் பாட்டல் 40 ரூபா இதோடு மதிய உணவு முடிந்தது. உணவுக்குப்பிறகு சின்னதிருப்பதி, தீவட்டிபட்டி, தளவாய்பட்டி, காரவள்ளி என கன்னடப் பெயர்களோடு ஊர்ப்பெயர் துவங்குவதும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வருவதற்கான அறிகுறிகளும் தென்பட்டது.
ஜோடுக்குழி, தொப்பூர் அடர்ந்த வனப்பகுதி, காட்டுக்குள் வாகனம் செல்வது போல் மிகவும் மெதுவாக ஊர்ந்து சென்றது. மேலும் பகுதி மிகவும் ஏற்றமாக இருந்ததால் வாகனம் விரைந்து செலுத்த இயலவில்லை. தொப்பூர் டோல் கேட் பணமிருந்ததால் உடனடியாக போகமுடிந்தது. ஈக்வடாஸ் எனும் பெரு வணிகத்தின் காரணமாக ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள், இதனைக் கடந்து செல்கிறது என சின்னதாக ஒரு கணக்கு போட்டுப் பார்த்துக்கொண்டு பயணம் செய்தோம். கார் 80, லாரி 150 எனக் கணக்கிட்டு ஒரு நாளைக்கு 250 முதல் 1000 வரை வாகனங்கள் வந்து செல்கின்றன. எளிமையாக இந்தக் கணக்குப் பார்த்தால் குறைந்தது பத்துலட்சம் முதல் நாற்பது இலட்சம் வரை எளிமையாக வசூலாக இருக்கும்.
சுhலை போட்டுக்கொண்டமைக்காக இவ்வாறு கோடிக்கணக்கில் மக்களிடம் வசூல் செய்வது மிகவும் கொடுமையான செயல் என்றும், இதைத் தவிர்ப்பது தடுப்பது என்பது குறித்தும் நமது மக்களிடம் ஒரு விழிப்புணர்வு இல்லை என்பதே தெரிகிறது.
பாளையம்புதூர், நக்காவது அணை, வைரகவுண்டன்புதூர், தேன்கனிக்கொட்டை இங்கிருந்து ஓசூர் 99 கி.மீட்டர் இருக்கிறது. இன்னமும் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகும் என்பது மடடும் தெரிகிறது.
பாலக்கோடு , முத்துப்பட்டி, ராயம்பட்டி, மொட்டுப்பாட்டி,குப்பன்கரை, பாலப்பட்டி, நக்கணம்பட்டி, , கோரோக்கோட அள்ளி என்ற ஊர்களும் கடந்து சென்றது. இதில் கோரக்கோட அள்ளி என்பது கே அள்ளி என்று சுருக்கமாகவும் கூறப்படுகிறது. காரி மங்கலம், ஜகத்தாப், பொத்தாபுரம், எர்ரஹள்ளி, தென்பெண்ணை ஆறு இவற்றையும் கடந்து செல்கிறோம். இதில் வரும் பொத்தாபுரம் என்பது இப்பகுதி மக்களின் மிகப்பபெரிய நாட்டுப்புறத் திருவிழாவாக இருந்துள்ளது.
இங்கு கொற்றவைத் தெய்வம் எனும் பெண் மக்களை வழிபடும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். நமது கொங்கு மண்ணில்பெரும் தெய்வ வழிபாடு, சிறு தெய்வ வழிபாடாக இல்லாமல், பெண் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை நாம் உற்று கவனிக்கவேண்டும். இந்த கொங்கு நாடு ஈரோடு, சேலம், அடுத்து தர்மரபுரி, கிருஷ்ணகிரி வரைக்கும் வேளாளர்கள் இருந்தமைக்கும் இங்கு தாய்த்தெய்வ வழிபாடு வழக்கில் இருந்தமைக்கும் நமக்கு ஏராளமான கல்வெட்டுகள் இருந்தமைக்கும் சான்றுகள் கிடைத்துள்ளது. 24 நாடுகளில் கொங்கு நாடு இருந்தமைக்கும் சான்றுகள் கிடைத்துள்ளது.
தென்பெண்ணை ஆறு வரும் வரைக்கும் இதையே பேசிக்கொண்டு வந்தோம் நேரம் 5.20 ஆகிவிட்டது. இதற்கு முன்னர்தான் ஓசூர் ஒப்புரவாளன் அவர்களிடம் பேசி இவ்வாறு தொல்லியல் கருத்தரங்கிற்கு வருவதாகச் சொன்னதும் கட்டாயம் தானும் பங்கேற்பதாகவும். பேசிவிட்டு நண்பருடன் சூடப்பா திருமண மண்டபம் சென்று பார்த்துவிட்டு வந்து ஆமாம் தோழர் எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. நீங்கள் ஓசூருக்கு வந்து அழையுங்கள் என்றார்.
மாலை 5.17 க்கு கிருஷ்ணகிரி எனும் பகுதியை மேம்பாலம் வழியாகக் கடந்து செல்கின்றோம். கிருஷ்ணகிரியைக் கடந்து செல்லும் மிகப்பெரிய நீர்த்தேக்கம் தெரிந்தது. பரிசல் பயணமும் நடந்து கொண்டிருந்தது. சாலையின் மேல் இவ்வளவு பெரிய நீர்த்தேக்கமா எனக் கேட்க கிருஷ்ணகிரி நகராட்சியால் பராமரிக்கப்படும் நீர்த்தேக்கம் என்பதும் பரிசல் அதிகப் பயன்படுத்தியிருப்பதையும் பார்க்க முடிந்தது.
அடுத்து பய்யம்பள்ளி இவ்விடம் வந்ததும் அருகே கே.ஜி.எப் என பெயர்ப்பலகை தெரிந்தது. அடுத்த நிமிடமே சட்டப்படிப்பதற்காக 2010 முதல் 2016 வரை கே.ஜி.எப் சென்று வந்ததும், கடைசியாக வாணியம்பாடி மலைப்பகுதியில் வரும்போக வாகனம் பிரேக் பிடிக்காமல் கம்பியில்மோதி நின்று உயிர் பிழைத்ததும் நினைவுக்கு வந்தது.
அதே போல் கே.ஜிஎப் பஸ் ஸ்டாப்பில் இறங்கி விடுதியில் தங்கியிருந்ததும் மூன்றாண்டுகள் சட்டம் படித்ததும் முழுமையாக முடிக்க முடியாமல் போனதும் நினைவுக்கு வந்து சென்றது. இன்னும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அங்குதான் உள்ளது. இதுவரைக்கும் சென்று வாங்க நேரமில்லாமல் போய்விட்டது. நல்ல ஊர், ஊரகம் எனும் பகுதி சிவாவுடன் ஒரு முறை அங்கு சென்று வரவேண்டும்.
அடுத்து கண்மூடித் திறப்பதற்குள் சுமார் 5 அல்லது 6 கி.மீ சென்றிருக்கும். ஜிஞ்சுபள்ளி, பந்தனப்பள்ளி, பாலபொன்ராயபள்ளி, கும்மனூர்,பணியாண்ட பள்ளி, சாம்பல்பள்ளம் என கன்னடத்துப் பெயர்களோடு ஊர்களும் கடந்து சென்றது. நாமும் கன்னட தேசத்திற்குள் நுழைகிறோம் என்ற எண்ணத்தோடு கிருஷ்ணகிரி அடுத்து ஓசூரும் வந்துவிட்டது. இல்லை ஓசூருக்குள் வந்துவிட்டோம். மணி 6 க்குமேல் மீண்டும் ஒப்புரவாளனை அழைத்துப்பேசும்போது இன்றைய நிகழ்வு முடிந்துவிட்டது. நீங்கள் விடுதிக்கு சென்றுவிடுங்கள் சென்றார். சரி கூகுள் மேப் போட்டு கௌரிசங்கர் விடுதிக்குச் சென்றோம்.
மணி. 6.50 சரி ஒப்புரவாளனை அழைத்துக்கொண்டு புத்தகத் திருவிழா போகலாம் என தீர்மானித்து அவரை அழைக்க, அவரும் வந்து விடச் சம்மதித்து அடுத்த 15 நிமிடங்களில் வந்துவிட்டார். அதற்குள் உள்ளே சென்று அறை போட்டு விட்டு வெளியே வந்து காத்துக்கொண்டிருந்தோம்.
அதற்குள் எதிரில் இருந்த பூர்விகா அருகில் இருந்த கோயில் அந்த மக்களின் உணவு முறைகள் அறிந்து கொள்ள முடிந்தது. பெரும்பாலும் அந்த ஊர்க்காரர்கள் என்பது மிக மிகக் குறைவு. வெளியூரிலிருந்து வந்து குடியேறிய மக்களே அதிகம். கன்னடத்தில் ஒச ஊர் என்பது ஓசூர் ஆனது. நமது பகுதியில் புதூர் புத்தூர் போன்று அதுவும்.நல்லூர் என்பதையும் இவ்வாறாகக் கொள்ளலாம். மக்கள் கூடும் சிறிய பகுதியாக இருந்து, தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியாக இருப்பதால் அதிகமான பெரிய பெரிய கம்பெனிகள் இருப்பதாலும், அந்தக் கம்பெனிகளில் பணியாற்றும் பணியாளர்கள் இருப்பதாலும் ஊர் விரிவடைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ளது.
இங்கு படையாட்சி கவுண்டர்களே அதிகம். எருமையை அதிகமாக மேய்க்கின்றனர். மேலும்,நிலங்களில் உழைக்கும் இடைநிலை சாதிப் பெருமக்களே அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளது. பண விவசாயம் அதிகளவில் இல்லை. அதே போல் பருத்தி, தென்னை, மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது; பெரும்பாலும் தரிசு நிலங்களாகவே உள்ளது.
இனி வரும் காலத்தில் இதுவும் கடந்து தரிசு நிலங்கள் அனைத்தும் மக்கள் வசிப்பிடங்களாக மாற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தோழர் ஒப்புரவாளன் புதுக்கோட்டையிலிருந்து பஞ்சம் பிழைக்க இங்கு வந்தவர். டைட்டான் கம்பெனியில் உறுதிப்பணியாளராக பணிபுரிந்த வருகிறார் இங்கு 5000 த்திற்கும் மேலிருந்த பணியாளர்கள் தற்போது ஆயிரக்கணக்கில் மட்டுமே இருப்பதாகக் கூறுகிறார். முதலில் இருந்த உறுதிப்பணியாளர்கள் அனைவரும் விலக ஒப்பந்தப்பணியாளர்கள் சேர்க்க, குறைந்த கூலியில் தற்போது அவுட்சோர்சிங் பணியாளர்களை சேர்த்துக்கொள்வதாகவும் கூறுகிறார்.
மணி 7 தோழர் வந்துவிட்டார். சரி புத்தகத் திருவிழா போகலாம் என்று மகிழ்வுந்தில் அவரையும் ஏற்றிக்கொண்டு சென்றோம். நல்ல போக்குவரத்து நெருக்கடி சுமார் அரை மணி நேரம், ஒரு கிலோ மீட்டர் கடந்து செல்ல, சிவாவும் நெருக்கடியில் வண்டி ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார். நெருக்கடியான பாதை, நெருக்கடியான பாலம், அடுத்த பெரிய ஹோட்டல், அங்குதான் புத்தகத்திருவிழா, அங்கு சென்றவுடன் ஏற்கனவே தேநீர் குடிக்கவேண்டும் என்று பேசியிருந்தோம். ஒப்புரவாளன் மரபுஉணவு நன்றாக இருக்கும் என்று திணை சம்பா கலவை சாதம், ஒரு வாழைப்பூ வடை, ராகி பணியாரம் ஒன்று என பங்கு போட்டு சாப்பிட்டுக்கொண்டோம். பில் 240 ரூபாய். பரவாயில்லை.
அடுத்து அங்கேயே நண்பர்களுக்கு புத்தகம் கொடுத்து படம் எடுத்துக்கொண்டோம். புத்தகத் திருவிழா நுழைந்து அங்கு பாரதி பதிப்பாலயம் நண்பர், பனசை அரங்கன் ஆகியோரும் பார்த்துவிட்டு வந்தோம். கொங்கு தமிழக வரலாறு கா.அப்பாதுரையார் புத்தகம் வாங்கிக்கொண்டு வந்தோம் மணி. 8.50 நேரே ஒப்புரவாளன் இல்லத்திற்கு வளைந்து வளைந்து சுமார் 9 வளைவுகள் முனிஸ்வரன் நகர், அதற்குள் ஒரு நகர் என கொண்டு போய்விட்டு விட்டு திரும்பி வந்தோம்.
அங்கு அவருக்கு இரு மகன்கள் மற்றும் அவரது இல்லாளுடன் பேசிவிட்டு புத்தகம் கொடுக்க அவர் மனைவி படம் எடுத்துக்கொடுத்தார் ஒரு தேநீர் குடித்துவிட்டு உடனடியாகக் கிளம்பி வழி தெரியாமல் கூகுள் மேப் போட்டு தேன்கனிக்கோட்டை ரோடு வந்து கௌரி சங்கர் வலதுபுறம் வந்து மீண்டும் 9.50 க்கு விடுதி வந்து சேர்ந்தோம்.
ஒரு குளியல் போட்டு உறங்கச் செல்ல, 10.20 காலையில் மரபு நடைப் பயணத்திற்கு அறம் கிருஷ்ணன் மற்றும் நான்கைந்து பேருடன் தொலைபேசியில் பேச சரியான விடை இல்லை. புதுக்கோட்டை மணிகண்டன் அவரும் தெரியவில்லை என்றார். சரி காலையில் 4.10 எழுந்து சிவாவை எழுப்ப, சிவா சரியாக தூங்கவில்லை. அறிவு சரியாக 4.30 க்கு சென்று குளித்துவிட்டு வந்தார் பிறகு சிவா, அடுத்து நான் 5.20. க்கு சென்று 5.35 க்கு வந்தேன். 5.50 க்கு அறையைக் காலி செய்துவிட்டு வெளியில் வர இன்னும் இருவர் வந்தனர்.
உடனடியாக அங்கு வந்த புதுக்கோட்டை மணிகண்டன் இன்னொரு நண்பருடன் நேரடியாக சூடப்பா மண்டபம் செல்ல, மணி 6.30 சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்பது தெரிந்தது. அங்கு தொல்லியல் ஆய்வறிஞர்கள், அறிஞர் பெருமக்கள் காத்திருந்தனர்.
ஒவ்வொருவராக வரவ ர பேருந்தில் ஏறச்சொல்ல, அங்கிருந்து தமிழ்ச்செல்வன், காப்பாட்சியர் ஆகிய இருவரும் அந்தப் பகுதிக்காரர்கள் எனத்தெரிந்தது. மதகொண்டபள்ளி, மற்றும் இரு கல்வெட்டுகள் பார்த்து சந்திரசூடேஸ்வரர் மலைமீது சென்று பார்த்துவிட்டு தீரும்பி வர மணி 11 ஆகிவிட்டது. சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் நேர விரயம் ஆனது.
காலையில் ஓசூர் மதகொண்டபள்ளி தேர்வட்டம் என பகுதி அங்கு ஒரு நடுகல், அதையும் பார்த்து மலைமீது செல்வதற்கு முன்பே, தேநீர் மாசில் என கொடுத்தார்கள். ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால் இதிலும் தெரிந்தது. மலை மீது அவரவர் விருப்பத்திற்கு ஏற ஏற இயலாதவர்கள் பேருந்தில் வரச்சொல்ல, பாதி அப்படி பாதி இப்படி சரி, என்ன செய்ய, நாங்கள் நடந்து செல்ல, போகும் வழியில் ஒரு சமணப்படுக்கை நமது ஐவர் மலை போன்று நல்லதொரு அமைப்பு இருந்தது. அழகான சமணப்படுக்கை வருமானம் தரக்கூடிய கோயிலாக மாற்றிவிட்டனர்.
இனிவரும் காலம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. நல்ல சலவைக்கற்கள், குடைவரைக்கோயில் என்று பெயர் மாற்றிவிட்டனர். என்ன செய்ய? பார்த்து விட்டு வெளியே வந்து மலை மீது ஏறினோம். நீண்ட இடைவெளிக்குப்பிறகு மலையேற்றம். சிறிய மலைதான். இருந்தாலும் தோற்றம் நன்றாக இருந்தது. சுகாதாரமில்லாதது நன்றாகத் தெரிந்தது. அவ்வளவு சுகாதாரக்கேடு. மேலே ஏறிச்சென்று மிதியடி விட்டு விட்டு கோயிலுக்குச் சென்று வெளியே வந்து பார்த்தால் மிதிடிய இல்லை. அவ்வளவதான் கால்வலி பொறுக்க இயலாதே என எண்ணி அருகில் விசாரித்த போது இதோ அங்கே கடைக்காரர்கள் எடுத்துச்சென்றுவிட்டார்கள் ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து மிதியடி பெற்றுக்கொள்ளுங்கள் என்றனர். ஒ..ஒ. சரிதான் இதுவும் நல்ல வேலை என்று நினைத்து மிதியடி போட்டுக்கொண்டு வெளியில் வர, பேருந்தும் மிகவும் சிரமப்பட்டு பேருந்து திருப்பி கிழே இறங்கும்போது நாங்களும் ஏறிக்கொண்டோம்.
ஆனால் பெரும்பாலான நபர்கள் பேருந்து கீழே நிற்பது தெரியாமல் மலை மீது காத்திருந்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் பிறகு இந்தக் கேள்வியை ஓட்டுநரிடம் தெரிவித்து உடனடியாக மலை மீது உள்ள மக்களை கீழே வரச் சொன்னரர்கள்.
ஒரு பேருந்து கீழே அப்படியே போய்விட்டது. இன்னொரு பேருந்தில் (நாங்கள் வந்த பேருந்து எண் 36) அனைவரும் ஏற, இன்னும் ஒரு சிலர் வராமல் இருக்க புதுக்கோட்டைக்காரர் சரி வண்டி எடுங்க என்று சொல்லி பேருந்தை ஒட்டச் செய்தார். அத்தனையும் பெரியவர்கள் சக்கரை வியாதி உள்ளவர்கள். மணி பத்தரை ஆகிறது என்று சத்தம்போடு எதிராளிகள் யாரும் பேசவில்லை. வாகனம் மீண்டும் மண்டபம் நோக்கி நகர்ந்தது. போகும் போது ஓசூர் நகர்ப்பகுதியை பார்க்க முடிந்தது. நகரம் மிகவும் சிறியதாகவும் அதன் வெளிப்பபகுதி மிகவும் பெரியதாகவும் இருப்பதை பார்க்க முடிந்தது.
மண்டபம் வந்ததும் இறங்கி வேகமாக சென்று சிற்றுண்டி சாப்பிடப்போனால் அங்கும் பரிமாறுவதற்கு ஆட்கள் இல்லை. ஒருவரே இருப்பதால் பொங்கல், இட்லியும் சரியாகக் கிடைக்கவில்லை. இருந்து பரிமாற ஆட்கள் இல்லை,என்ன செய்ய, அவ்வளவுதான். சரி சாப்பிட்டுவிட்டு 11 .30 க்கு மண்டபத்திற்குள் சென்று திரு. ராஜவேலு அவர்களிடம் உடுமலை வரலாறு இரண்டாவது தொகுதி வெளியிட வேண்டும் என்று கேட்டதற்கு அவர் நேற்றே புத்தக வெளியீடு முடிந்தது இன்று இயலாதெனச் சொல்லிவிட்டார்.
என்ன செய்ய? மீண்டும் சிவா உள்ளுர் செயலர் அறம் கிருஷ்ணனிடம் பேச அவரோ அவரது நண்பரிடம் பேசி சரி பிற்பகல் பார்ப்போம் என்று சொன்னார்.அப்போது அறைக்குள் சென்று பேசிவிட்டு வந்ததை கவனித்த திரு. ராஜவேலு மீண்டும் அவரிடம் கேட்க இது போன்று அறம் கிருஷ்ணன் சொல்கிறார் என்றதும் சரி பிற்பகல் பொதுக்குழுவில் பார்ப்போம் என்றார். பொதுக்குழுவில் பொறுப்பாளர்கள் முழுவதுமாக மாறியது தெரியவந்தது. ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று மட்டும் தெரிகிறது.
தலைவராக மங்கைய்க்கரசி, அவர்தான் அடுத்த தொல்லியல் மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்துகிறார். சூலை மூன்றாவது வாரம். சிறப்பு. அடுத்து புதுக்கோட்டை மணிகண்டன் செயற்குழு உறுப்பினர். கோவை குமரவேல் ராமசாமி செ.கு. உறுப்பினர். தெ.கொ.சத. இருப்பது கண்டு கொஞ்சும் சங்கடமாகத்தான் இருந்தது. அவரைப்பற்றி முழுமையாகத் தெரியவில்லை என நினைக்கிறோம். சசிகலா சொல்லியிருக்க வேண்டும் ஏன் எனத்தெரியவில்லை. சரி. .
ஒரு வழியாக செயலாளர் செல்வகுமார், இணைச்செயலாளர் கோமகன், என பொறுப்பாளர்கள் மாறியது ராஜவேலு சுப்பராயலு பொறுப்பிலிருந்து விலகியதும் ஏதோ ஒரு காரணத்தைத் தேட மனம் முற்படுகிறது.
சரி ஒரு வழியாக பொதுக்குழு முடிந்தது. அதற்குள் மணிகண்டன் வந்து ராஜவேலு அவர்களிடம் சொல்ல உடனடியாக நூல் வெளியீட்டுநிகழ்வும் நடந்தது. திரு. ராஜவேலு, சுப்பராயலு, பூங்குன்றன், கோமகன், அறம் கிருஷ்ணன் என ஆளுமைகள் பெற்றுக்கொள்ள உடுமலை வரலாறு தொகுதி 2 வெளியிடப்பட்டது.
சரி நிகழ்வு முடிந்தது. இதற்குள் மதிய இடைவெளியில் ரசீது காணாமல் போய்விட்டது எனத்தேட ரசீதே போடவில்லை. ரூ.600 கொடுத்து ரசீது போட்டு ஒரு பேக் பெற்றுக்கொண்டார் சிவா, சரி, வாகனத்தை வைக்கப்போக, புதுக்கோட்டை நண்பர் புத்தகம் வேண்டுமென கேட்டுப்பெற்றுக்கொண்டார்.
மணி 4. இப்பொழுது கிளம்பினால் இரவு இல்லம் போகமுடியும் என அவசர அவசரமாகக்கிளம்ப, ஒப்புரவாளன் அவர்களிடம் சொல்லிவிட்டு, ஆவணம் புத்தகமும் பெற்றுக்கொண்டு புதுக்கோட்டை நண்பரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட மணி 4.15. சரி அவரும் சேலம் வரை விருப்பம் இருந்தாலும் வேண்டாமென நினைத்து அங்கேயே இறக்கிவிட்டோம்.
சரி எப்படிப்போலாம் போங்க சிவா, இப்படிப்போனா பெங்களுரு, அப்படிப்போன சேலம் என்று சொல்ல, இப்படியா போலாம் எனச் சொல்லிக்கொண்டே சிவாவும் வாகனத்தை ஓட்டி மேம்பாலப்பாலத்தைக் கடந்து விட்டார்.
4.30 மேம்பாலம் ஏற, வாகனம் இயல்புக்கு மாறாக வேகமாக ஓடியது. சுpவாதான் வேகமாக ஓட்டினார். ஓசூர் செல்லும்போது மிக நெடிய நீண்ட தூரம் சென்ற பயணம் அடுத்து ஒரு மணி நேரத்தில் கிருஷ்ணகிரி வந்துவிட்டோம். இடையில் தொட்டனப்பள்ளி, மரசாந்திரம், சாணப்பள்ளி, தட்சிணத்திருப்பதி கடந்து செல்லும் முன்பு ஒரு தேநீரும் குடித்து வாகனம் கிளம்பியது. இடையில் அறிவுடன் சச்சரவுகளுடன் பயணம். அவள் சரியாக கருத்தரங்கும் கவனிக்கவில்லை. எதையும்கூர்ந்து கவனிக்கவில்லை. சமையல்; கூடத்தில் தொலைபேசி பேசிக்கொண்டிருந்தார். அங்கு இருந்த அகழ்வாய்வுப்பொருள்கள் அவ்வளவு சிறப்பாக இருந்தது. அதைக்கூட பார்க்கவில்லை.
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இவரை சிறப்பு செய்யவில்லை. சிறப்பு செய்திருக்கவேண்டும். என்ன செய்ய? அட்ட குறிக்கை, சாப்பிடி, குருபரப்பள்ளி, ஓமந்தப்பள்ளி, இம்மிடிக்குண்டன்பள்ளி, சாம்பல்பள்ளம், மேழுமலை, இவ்விடத்தில்தான் போகும்போது அடர்ந்த காட்டுக்குள் சென்று ஒரு படம் எடுத்தோம்.
அடர்ந்த வனப்பகுதி என்பதால் நல்ல இறக்கம் விபத்துப்பகுதி என்ற பெயர்ப்பலகையும் இருந்தது. வாகனங்கள் பார்த்து செல்லவேண்டும் கொஞ்சம் ஏமாந்தால் கட்டாயம் விபத்து ஏற்பட்டுவிடும். 5.32 க்கு கிருஷ்ணகிரி ஏரியைத் தாண்டிவிட்டோம். அடுத்து மலையாத்த கள்ளி, கொரக்கூர், இங்கு காவல் துறை பீட், ஏதோ வசூலுக்கு நிற்கிறார்கள் எனத்தெரிந்தது. நல்ல அடர்ந்த காடு. இருபுறமும் தெரிந்தது. நல்ல இயற்கையான சூழல், அறிவும் அப்படியே உறங்க ஆரம்பித்துவிட்டாள்.
வாகனத்தை சற்று நிறுத்திவிட்டு இளைப்பாறிவிட்டு போத்தம்பள்ளி , அடிலம், குப்பன்கரை, கடையூர், பையுள்ளி, கன்னி,நாம்பட்டி, மரவாடி, பிடமனேரி, வேலக்கல், தொப்பூர், டோல் கேட்டும் வந்துவிட்டது. டோல் கேட் கட்டணம் மட்டும் 1400 வந்துவிட்டது. அதுவும் பெருந்துறைக்கு முன்பாக மீண்டும் எடுத்தது பெரும் சினத்தை கொடுத்தது. ஏர்டெல் ஏன் இப்படி செய்கிறான் எனவும் எண்ணத் தோன்றியது. வேறு நெட்வோர்க் மாற்றியாக வேண்டும்.
நேரத்தோடு வாகனமும் சேர்ந்து ஓடியது. போகும்போது வெகுநேரம், நீண்ட நேரம் ஆனது போல் தெரிந்தது. ஆனால் வரும்போது அவ்வாறு தெரியவில்லை. கிருஷ்ணகிரி, தர்மபுரி என எந்த ஊரையும் பார்க்காமல் அவினாசி மேம்பாலம் ஏறி ஓசூர் இறங்கியது இனி வரும் காலத்தில் மக்களின் வாழ்நிலையும் மக்களோடு சேர்ந்த பொருளாதாரமும் இப்படித்தான் இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.
ஈரோடு மக்கள், சேலத்து மக்கள், என யாரையும் பார்க்கவில்லை. மாறாக சாக்கடை வாசம் வந்ததும் தோழர் இது சேலத்தோட அடையாளம் என சிவா சொன்னார் இவ்வாறுதான் இனிமேல் இருக்கும் அந்த ஊர் மக்களை சென்று பார்க்க இயலாது போலும். ஏதேனும் கட்டாயத் தேவை இருந்தால் மட்டுமே அந்த ஊருக்குள் செல்ல வேண்டி வரும் . மாறாக தஞ்சாவூர் பயணத்தில் பெரம்பலூர் செல்வதற்காக திருச்சி வழி மாறியதும் மீண்டும் வேடசந்தூர் வந்து கீரனூரில் வழி மாறியதும் எச்சரித்துக்கொண்டே இருக்க, பல்லடத்திற்கு முன்பே மேம்பாலத்திலிருந்து இறங்கிவிட வைத்தது.
மணி 7.30 சேலம் செல்வி மெஸ்சில் பாப்பாவும் நானும் சிற்றுண்டி சாப்பிட சிவா ஒரு காப்பியோடு போதும் என வந்துவிட்டார். மீண்டும் 7.55 க்கு கிளம்பிய வாகனம், மெதுவாகவும், வேகமாகவும், வாகனத்தோடு வாகனமாகவும், லாரிகளின் பின்னாலும், கார்களின் முன்னாலும், பல்வேறு வாகனங்களின் இடையிலும் மாறி மாறி ஓட்டி வந்த சிவா ஒரு வழியாக தோழர் பல்லடம் வந்துவிட்டது பாருங்க என 40 கி.மீட்டருக்கு முன்பே சொல்ல, அறிவுpடம் சொல்லி கூகுள் மேப் போடும் போது 37 கி.மீ. 1.10 நிமிடம் சரி, இன்னமும் தொலை தூரம் என பேசிக்கொண்டே வர, வாகனங்கள் முந்திக்கொண்டும் பிந்திக்கொண்டும் சிவா தலைவலியோடு வாகனத்தை ஒட்டிக்கொண்டு வந்துவிட்டார்.
தேநீருக்கும் எங்கும் நிறுத்தப்படவில்லை. பல்லடம் சாலைக்கு முன்பே நிறுத்தி சற்று ஓய்வெடுத்து மீண்டும் அதே சர்வீஸ் ரோடில் மங்கலம் பிரிவுக்கு வந்துவிட்டோம். அப்போது ஒப்புரவாளன் என்ன தோழர் வீட்டுக்கு போயீட்டிங்களா என மிகவும் அக்கறையோடு உசாவினார்.
அகமதுசார் முந்தைய நாள் நிகழ்வை போட்டோ , போட்டோ எனக் கேட்டுக்கொண்டிருக்க சிவா வீடியோ அனுப்பிவிட்டார். மேடை நிழலும் வெயிலும் இருந்ததால் புகைப்படம் சரியாக வரவில்லை.
இப்பொழு மணி 9.15 தற்போது மீண்டும் அழைத்து பயணம் குறித்து, நேற்றைய நிகழ்வு குறித்து உசாவினார். நல்லதொரு அக்கறை, மங்கலம் தாண்டி பல்லடம் வந்தது. பல்லடம் தாண்டி உடுமலை சாலை வந்தது. லேசாக கண் அயர்ச்சி ஏற்பட்டது. பேசிக்கொண்டே வர வாகனமும் கொஞ்சம் வேகமாகத்தான் சிவா ஓட்டினார். மணி 10.40 எனது தாயின் ஊர் ஜல்லிபட்டி ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். இவ்விடத்தில்தான் எனது தாய் அவரது ஊருக்கு செல்ல இங்கு அமர்ந்திருப்போம். சிறுவயது முதல் இந்த ஜல்லிபட்டி நல்ல பரிச்சயமான ஊர். மிகவும் மகிழ்வாகவும் மன நிறைவாகவும் இருக்கும். தாய் இறந்த பிறகும் இந்தவழியாக செல்லும்போதுதான் பல்லடம் ராஜேஷ் இவ்விடத்தில் அமரர் ஊர்தியை நிறுத்தி என்னுடைய தாயின் உடலைப்பார்த்தார்.
ஏதோ அவரது விருப்பம் எனநினைக்கிறேன் அதனால் அவள் பிறந்த ஊர்வழியாக கோவை சென்றாள். நல்ல மழையில் திடிரென கண் முன் பார்த்தால் ஒரு காவலர் நின்று கொண்டு டார்ச் அடித்துக்கொண்டிருந்தார் குடிமங்கலம் நால்ரோடு வந்துவிட்டது. ஆம் மனக்கவலையோடு மனம் இருந்தாலும் வாகனம் நிற்காமல் சென்று கொண்டிருந்தது.
மணி 11.10 உடுமலை திருப்பூர் சாலை தொட்டுவிட்டோம் ஆம் சிவா என் வாழ்வில் நீண்டதொரு மகிழ்வுந்துப்பயணம் மகிழ்வுந்து வாங்கிய நாள் முதல் ஒரு நீண்ட பயணத்தை இன்று நிறைவு செய்துவிட்டோம். எல்லாம் வகையிலும் நமக்கு எதிரி நண்பர்கள் அதிகமாக மிக அதிகமாக இருந்தாலும் நமது பயணம், இது போன்று தேடுதல் சார்ந்த பயணங்களே நம்மை மற்றவர்களிடமிருந்து மாறுபடுத்திக்காட்டும்.
இது நமது வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர்களுக்கு பொருந்தும். வரும்போது இவ்வாறு கருத்தரங்குகள் நடத்தப் பேசினாலும், அது நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே மனம் இருந்தது. முடியாததை இயலாததை செய்து காட்டுவதே நம் பணி. இதனால்தான் அனைவரும் நம் மீது கோபமும் பொறாமையும் கொண்டிருக்கிறார்கள்.
முனைவர் விஜயலட்சுமி, வி.கேஎஸ், ராஜ் ஆகியோரிடம் நம்மை வேறுபடுத்திக் காட்டுவது மாறுபட்டு நிற்பதும் இது போன்ற பயணங்களே என்பதை எப்படி அவர்கள் அறிவார்கள். இதற்கான ஆன செலவு மிக அதிகம். இதையும் நாங்களே பகிர்ந்து கொண்டதால் எதிரிகளுக்கு கொஞ்சம் ஜீரணிக்க சிரமமாகத்தான் இருக்கும்.
பயணங்கள் நம்மை நிலைநிறுத்தும், நம்மை உயர்த்தும், நம்மை வழிநடத்தும், இதற்காக கொஞ்சம் சிரமம்தான் என்ன செய்ய, நமக்கு இதுதான் பொழுது போக்கு.. அதனால் நம் விருப்பப்படி செயல்படுவோம். மற்றவர் சொல்வதை கேட்டுக்கொள்வோம்.
அடுத்த பயணத்தில் மீண்டும் சந்திப்போம். இந்தப்பயணம் வழக்கம்போல் தலைவர் குமாரராஜா அவர்களுக்கும் சிவாவுக்கும், விருப்பப்படும் நெஞ்சங்களுக்கு போய்ச் சேரட்டும்.
Comments
Post a Comment