சகல ஐஸ்வர்யம் கொண்டுவரும் அழகான ..அன்பான ..தாய்தந்தை ..சொந்தங்கள் அமையும் உங்களின் வீடு ..
சகல ஐஸ்வர்யம் கொண்டுவரும் அழகான ..அன்பான ..தாய்தந்தை ..சொந்தங்கள் அமையும் உங்களின் வீடு ...
புதிய வீடு எப்படி மகிழ்ச்சியை கொண்டு வருகிறது எனது சிறிய தகவல்களுடன் உங்களின் ஒரு வருட வீடு பற்றி அழகான உங்களின் மனம் ..எண்ணங்கள் ..அன்பை பொழியும் வீடு ...
வீடு என்ற சொல்லுக்கு சொர்க்கம் என்றோர் பொருள் உண்டு. நம் வீட்டை சொர்க்கம் போன்று வைத்திருப்பது நமது கைகளில்தான் உள்ளது. கொஞ்சம் சிரத்தை எடுத்துச் சில செயல்களைச் செய்தாலே, நமது வீடு நம்மை மட்டுமல்ல, வீட்டுக்கு வருபவர்களையும் பரவசப்படுத்தும் இனிமையான இடமாக மாறும்.
வீட்டின் அமைப்பை நல்ல ஆரோக்கியமான உணர்வுகளைத் தூண்டும் வண்ணங்களால் ஆனதாக மாற்றுங்கள். வண்ணங்களுக்கும் நம் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கண்களை உறுத்தாத, இயல்பான வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அடிக்கலாம். பொதுவாக, சமையலறை மற்றும் ஹால் மஞ்சள் நிறத்திலும் படுக்கை அறை பச்சை நிறத்திலும் இருப்பது நல்லது
நம் அழகுணர்வின், நேர்த்தியின் வெளிப்பாடு நம் வீடுதான். எனவே அதை எப்போதும் சுத்தமாகவும் அலங்காரமாகவும் வைத்திருங்கள். அலங்காரம் என்பது வேறு, ஆடம்பரம் என்பது வேறு. பொருட்களை நேர்த்தியாகவும், சுத்தமாகவும் அந்தந்த இடத்தில் வைத்திருந்தாலே வீடு பளிச்சென அழகாகத் தோன்றும். வாய்ப்பு இருந்தால் சித்திரங்கள், கைவினைப்பொருட்கள், கலை வேலைப்பாடுகள் கொண்டு நம் ரசனைக்கேற்ப வீட்டைஅலங்கரிக்கலாம்.
வீட்டை, பசுமை வீடாக மாற்றுவது உங்களை உற்சாகமாகவும், மனநிறைவோடும் வைத்திருக்கும். வீட்டுக்குள் ஆங்காங்கே மணி பிளான்ட், பூச்செடிகள் போன்ற குறைந்த வெளிச்சத்தில் வளரும் தாவரங்களைவைக்கலாம். அதிகத் தண்ணீரும் தேவைப்படாது. இயற்கைக்கும் நமக்குமான நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க... ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும். நன்றி வாழ்த்துக்கள் ஐஸ்வரியம் கலந்த ஐஸ்வர்யா -க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
Comments
Post a Comment