உங்களின் வாழ்க்கையில் நீங்கள் தாமதமாக உணர்ந்த உண்மைகள் என்னென்ன?

கேள்வி :

உங்களின் வாழ்க்கையில் நீங்கள் தாமதமாக உணர்ந்த உண்மைகள் என்னென்ன?

 பதில் :


         கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் கல்லூரி படிக்கும் போது எடுத்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தற்போது இருப்பதை விட ஒல்லியாகவும் அது பதினேழு-இருபத்து இரண்டு வயது பருவம் என்பதால் அந்த வயதுக்கு ஏத்த இளமையும் முகத்தில் இருந்து 'நம்மளும் பாக்க நல்லாத்தான் இருந்துருக்கோம்' என ரசிக்க வைத்தது.

 

அட கல்லூரி என்ன கல்லூரி, போன வருஷம் எடுத்த புகைப்படங்கள் கூட இப்போ பாக்குறப்போ அழகாத்தான் தெரிஞ்சது. இப்போ எதுக்கு இத சொல்றேன்னா , நிஜமாகவே அந்தப் புகைப்படங்கள் எடுத்தப்போலாம் இப்படி யோசிச்சதுமில்ல; ரசிச்சதுமில்லஎவ்ளோ ஃபோட்டோஸ் எடுத்தாலும் திருப்தியே வராது.

இதில் இருந்து என்ன தெரியுதுன்னா

இன்னைக்கு நாம எப்படி இருக்கோமோ அப்போதே நல்லா ரசிச்சுக்கணும். ஏன்னா நம்ம நினைச்சது விட நாம அழகாகத் தான் இருக்கிறோம்இன்னும் 5 வருஷம் கழிச்சு இந்த உடலமைப்பும் இளமையும் முக அமைப்பும் மாறி இருக்கும் ‌‌. அப்போ வந்து இப்போ இருக்குற புகைப்படங்களை ரசிக்குறதுக்குப் பதிலா இப்போதே ரசிச்சுக்கலாமே.

·         அப்புறம் எனக்கு வருஷா வருஷம் வர்ற ஒரு வியாதி ஒண்ணு இருக்கு. போன வருஷம் இந்நேரம் சந்தோஷமா இருந்தோம்ல; அப்போலாம் இப்ப இருக்கிற மாதிரி கவலையே இல்லாம ஜாலியா இருந்தோம் எனபோன வருஷம், அதுக்கு முந்துன வருஷம் என கடந்து போன பழைய வருஷத்த நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருப்பேன்.

 

ஆனா போன வருஷமும் இதே மாதிரி அதுக்கு முந்தின வருஷங்களை நினைச்சு கவலைப்பட்டுட்டு தான் இருந்தேன். அப்புறம் ஒரு கட்டத்துக்கு அப்புறம்தான்புரிஞ்சது, எவ்ளோ கவலைகள் இருந்தாலும் என்னைய சந்தோஷமா வச்சுக்க சில காரணங்களும்சில மனிதர்களும் உடன் இருக்கிறார்கள் , அதுவும் இல்லாம நம்ம வாழ்க்கையில அந்தந்த சூழ்நிலைகள், வயது, செயல்கள் இதுக்கு ஏத்த மாதிரி பொறுப்புகள், கவலைகள், சந்தோஷங்கள் எல்லாம் கலந்து கட்டி வந்துட்டு தான் இருக்கும். இதுக்குள்ள நான்தான் சந்தோஷமா என்னைப் பாத்துக்கணும்னு இப்போ கொஞ்ச காலமாகத்தான் புரியுது.

நிறைய விஷயங்கள் சொல்லலாம். வெளிய சொல்லிக்கிற அளவுக்கு இவை இரண்டும் தான் சமீப காலங்களில் நான் உணர்ந்து கொண்ட விஷயங்கள்.😊


நன்றி ..


Comments