வணக்கம் , உடுமலையில் விரைவில் ஒரு பண்பாட்டின் பயணம் நூல் அறிமுக நிகழ்வு நடக்க உள்ளது. உடுமலையில் பெற்றுக்கொள்ளலாம்.
சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று
சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று நமது பொள்ளாச்சி நிலப்பகுதியில் 2300 ஆண்டுகளுக்கும் முன்பாக வசித்த, வாழ்ந்த மக்கள் கோவை மாவட்டம், பொள் ளாச்சி வட்டத்தில் கோவை செல்லும் பிரதான சாலையில் பொள்ளாச்சியில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஆச்சிப்பட்டி பிரிவி லிருந்து கிழக்கே 1 கி.மீ தொலைவில் குரும்பபாளையம் கிராமம் உள்ளது. இங்கு சங்க காலத்தைச் சேர்ந்த நெடுங்கல் ஒன்று கல் வட்டத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குரும்பபாளையத்தில் கிடைத் துள்ள நெடுங்கல் 14 அடி உயரமும், அதன் கீழ்ப்பகுதி 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த நெடுங் கல்லுக்கு முன்பாக 20 அடிச் சுற்ற ளவும் 55 செ.மீ உயரமும் கொண்ட ஒரு கல் வட்டமும் காணப்படுகிறது.. பெருங்கற்காலத்தில் தான் (கி.மு.1000 முதல் கி.பி. 100 வரை) மக்கள் தம் குடியிருப்புகளுக்கு வெளியே சற்றுத் தொலைவில் தனி யாக வேளாண்மை மற்றும் குடியி ருப்புக்கு பயன்படாத ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு இறந்த வர்களை அடக்கம் செய்யும் முறையை மேற்கொண்டனர். இவர்கள் இறந்தவர்களைப் புதைப் பதற்குப் பெருங்கற்களைப் பயன் படுத்திக் கல்லறைகளை ஏற்படுத்தி யதால் இக்காலம் பெருங்கற்காலம...
Comments
Post a Comment