ரோட்டரி சங்க நிகழ்வுக்கு அழைப்பிதழ்
எதிர்வரும் 02.07.2023 ஞாயிற்றுக்கிழமை உடுமலை ஜிவிஜி அரங்கில் மதிப்பமிகு மருத்துவர் சுந்தரராஜன் ரோட்டரி மாவட்ட ஆளுநராகப் பதவியேற்கிறார்.
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
மருத்துவப்பணிகளோடு சமூகப்பணிகளைத் தொடர்ந்து செயலாற்றி வரும் மருத்துவர், உடுமலை ப்ரியா கிளினிக் மருத்துவமனையோடு ப்ரியா நர்சிங் கல்லூரி எனும் செவிலியர் கல்லூரியைத் திறம்பட நடத்தி வரும் பேராளுமை. ரோட்டரி மாவட்ட ஆளுநர் பதவியையும் திறம்படச் செயலாற்ற உடுமலை மக்களின் சார்பிலும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பிலும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வோம்.
உடுமலை வரலாறு 28.06.2023🥰📗🖋️📡🏠
Comments
Post a Comment