திருமதி. தர்மசம்வர்தினி அவர்கள்,
சதாபிஷேகம் .....
தலைமுறை தாண்டிய சிறுவர், சிறுமிகளும் குருவாக ஏற்றுகொள்ளபட்ட பெருமைக்குரியவர்.
மே 14, 2023 அன்று உடுமலைப்பேட்டையில் நடந்த சதாபிஷேகத்திற்கு ஒரு நாள் கழித்து உடுமலைப்பேட்டை யில் பள்ளியில் படித்த குடும்ப நண்பர் வெளிநாட்டில் வாழும் அருண்சங்கரின் பெற்றோரைச் சந்தித்தோம். எங்கள் அனைவரையும் எப்போதும் தங்கள் குழந்தையுடன் குழந்தையாக நடத்தும் திருமதி. தர்மசம்வர்த்தினி மற்றும் திரு.ராஜாராம் ஆகியோர் எங்களை அன்புடன் வரவேற்று வாழ்வாங்கு வாழ்த்தினர். . விழாவில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் ஆசிகளுக்காக அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வெளிநாட்டில் வாழும் வாசு அண்ணாவுடன் பள்ளிக்கால நினைவுகளை ஒரு மணி நேரம் கலந்துரையாடியது மகிழ்ச்சியுடன் ஞாயிறு நாள் அமைந்தது .
இருவருமே பள்ளி பாடங்களின் ஆசிரியர்கள் மட்டுமல்ல, பலமாணவ செல்வங்களை வழிநடத்தி எங்களுக்கு வழிகாட்டியாக எங்களை வழி நடத்துகிறார்கள்.
அவர்களின் மகன்கள் அவர்களின் குணாதிசயங்களுக்கும், சமூகத்தில் இருந்து அவர்கள் சம்பாதிக்கும் அன்புக்கும் வாழும் சான்றுகள்.
அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுக்காக எங்களது மனப்பூர்வமான பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறோம்.
என்னுடன் என் கல்லூரி தோழர் அப்சல் நூர் உடன் உடுமலையின் வரலாறு நூலை பரிசளித்து விடைபெற்றோம் ..
என்றும் அன்புடன் உடுமலை
சிவகுமார் வி கே..
9944066681









Comments
Post a Comment