உடுமலைப்பேட்டை பெயர் காரணம் செவிவழி செய்தி . 🥰📡🎙️📚🖋️
உடுமலைப்பேட்டை பெயர் காரணம் செவிவழி செய்தி . 🥰📡🎙️📚🖋️
ஒருசமயம் மதுரை மன்னர் திருமலைநாயக்கரின் மனைவி மதுரை பழைய அரண்மனையை தனது தகப்பனார் கோழியை அடைத்து வைக்க பயன்படுத்தும் கோழிக்கூண்டு போன்று உள்ளது என கேலி செய்தார். திருமலைநாயக்கர் கோபமடைந்தார் . அந்த கோபத்தின் விளைவு அன்னார்ந்து பார்த்தால் தலையில் கட்டியிருக்கும் தலைப்பாகை அவிழ்ந்து கீலே விழவேண்டும் அந்த அளவுக்கு மிக உயரமான சுவர்களை கொண்ட புதிய அரண்மணை கட்ட உத்தரவிட்டார்.
மதுரை திருமலைநாயக்கர் மகால் கட்டி முடிக்கப்பட்டது. திறப்புவிழாவிக்கு 72 பளையக்காரர்கள் வரவழைக்கப்பட்டனர். அந்த சமயம் ஒரு போட்டி நடத்தப்பட்டது. திருமலைநாக்கர் மகாலின் உயரமான சுவற்றில் ஏறி அதன் மோல்கூரையை தொடவேண்டும் என்பதே அந்த போட்டி. அங்கிருந்த அனைத்து பாளையக்காரர்களும் முயற்சி செய்தனர். உயரமான சுவற்றில் ஏற முடியவில்லை. இறுதியாக தளி பளையத்தின் வீரர்கள் அந்த பேட்டியில் களமிறங்கினர்.
அவர்கள் தாங்கள் கொண்டுவந்த உடும்புகளின் உடலில் கயற்றினை கட்டி அதை திருமலைநாயக்கர் மகாலின் மேற்கூரையின்மீது வீசினர். உடும்பு நன்றாக மேற்கூரையை பற்றிக்கொண்டது. வீரர்கள் உடும்பில் தொங்கும் கயற்றினை பிடித்துக்கொண்டு சுவற்றில் ஏறி மேல்கூரையை அடைந்தனர். வெற்றிக்கனியை பெற்றனர்.
இந்த வெற்றியை பறைசாற்றும் விதமாக தளி பாளையத்தின் வர்த்தக நகரமான சக்கரகிரி என்ற நகரத்தின் பெயரை உடும்புமலைப்பேட்டை என்று பெயர்மாற்றம் செய்தனர்.
இந்த பெயரே உடுமலைப்பேட்டை என்று மறுவியது.
இந்த செய்தியை எனக்கு கூறிவர் எனது தாத்தா தெய்வதிரு. மலையாண்டிசாமி நாயக்கர் குண்டலப்பட்டி.
தகவல் : உடுமலைப்பேட்டை பில்லவாநாயக்கன் சாலையூர் சதீஸ்குமார் ..🥰📡🎙️📚🖋️🌈
Comments
Post a Comment