உடுமலை வரலாறு is feeling grateful with Kumararaja Thirumurthi
·
உடுமலை மாரியம்மன் கோயில் திருத்தேரோட்ட விழா🥰😍🌦️🌨️💦🌱🌳🌴🐘
உடுமலை மற்றும் சுற்று வட்டார மக்களின் பண்பாட்டு விழாவாகக் கடந்த 250 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது தளி பாளையப்பட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதனால் ஒவ்வொரு திருத்தேரோட்ட நிகழ்வும் இப்பொழுது போன்று இல்லாமல் மூன்று நாட்களுக்கு மரத்தாலான திருத்தேரை மக்களே இழுத்துச்செல்வர்.
முதல் நாளில் தளிசாலையில் வடக்கு குட்டை வீதி வரையிலும், இரண்டாவது நாளில் தலைகொண்டம்மன் கோயில் வரையிலும் மூன்றாவது இறுதி நாளில் திருத்தேர் நிலைக்கு வரும். ஒவ்வொரு நாளும் தேருக்கு முன்பாக வேடபரி எனும் அப்போதைய தொப்பை மந்தை பாளையத்துக்காரர் வெள்ளைக்குதிரையில் அமர்ந்து உலா வருவார்.
அவருக்குப் பிறகே தேரை வடம்பிடித்து மக்கள் இழுத்து வருவர். இந்தத் தேர்த்திருவிழாவின் போதுதான் பெரும்பாலான மக்கள் இங்கு திருவிழாவுக்கு வந்த பிறகு ஏப்ரல் 12 , 1801 ஆம் ஆண்டு தளி கோட்டை குண்டு வீசி தகர்க்கப்படுகிறது. தளி எத்தலப்ப மன்னர் காயங்களுடன் பொன்னாலம்மன் சோலை வழியாக கருமுட்டி செட்டில்மென்ட் வழியாக தளிஞ்சி சென்று விடுகிறார். தளி எத்தலப்ப மன்னர் கடைசியாக சென்ற இடத்தை இன்னமும் மன்னர் வழி என்று வழிபட்டு வருகின்றனர்.
மாரியம்மன் திருக்கோயில் பட்டத்தரசி என்னும் கோயிலோடு இயைந்த வரலாறு இன்னமும் மக்களுக்குச் சென்றடையவில்லை. கடந்த காலங்களில் பட்டத்தரசி அம்மன் கிணற்றில் தான் கம்பம் போட்டு எடுக்கபட்டு வந்தது. தற்போது அது பேருந்து நிலைய கிணற்றுக்கு மாற்றப்பட்டு விட்டது.
இது போன்ற ஏராளமான வரலாற்றுத் தரவுகள் இன்னமும் நம் மண்ணில் இருந்துள்ளது. இன்னமும் இருக்கின்றது. இந்த மறந்து போன வரலாற்றை மீண்டும் நினைவு கூறும் வகையில் மாரியம்மனை அம்மன் வழிபாட்டை நீர் வழிபாட்டை மீண்டும் நினைவு கூர்வோம்.
உடுமலை வரலாற்றை உடுமலை மாரியம்மன் வழிபாட்டு வரலாற்றை மக்கள் வரலாற்றோடு கொண்டாடுவோம்.
உடுமலை வரலாறு 20.04.2022🥰📚✍️🙏
Comments
Post a Comment