இந்த கேள்விக்கும், எனக்கும் பெரிய தொடர்பு உண்டு. அதனால் இந்த பதில்….
நானும் என்னுடைய கணவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். என்னை விட அவருக்கு 4 வயது அதிகம். அப்படி இருந்தாலும் நான் அவரை பெயர் சொல்லி, வாடா போடா என்றெல்லாம் தான் அழப்பேன் காதலிக்கும் வரையில்.
எப்போது அவர் என்னிடம் காதலை சொன்னாரோ, அன்றிலிருந்தே அவர் என்னை மரியாதையாக அழைக்கத் தொடங்கி விட்டார். ஆனால் என்னால் அப்படி மரியாதை கொடுத்து பேச முடியவில்லை. (பழக்க தோஷம்)
திருமணத்திற்கு பிறகு கட்டாயமாக மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். அப்படி மரியாதை கொடுத்து பேசும் போது, வேறு யாரோ ஒருவருடன் பேசுவது போன்ற உணர்வு, ஆரம்பத்தில் கஷ்டமாகத் தான் இருந்தது.
ஆனால் அவர் எனக்கு கொடுத்த மரியாதை, என்னை மாற்றிக் கொள்ள உதவியது.
இத்தனை வருடங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் மரியாதையோடு தான் அழைப்போம். (வாங்க, போங்க, இருங்க… இப்படி)
இதையும் தாண்டி, இரண்டு சந்தர்ப்பங்களில் இருவருக்கிடையிலும் மரியாதைக்கு இடமே இருக்காது. (சொல்லுடா, பேசுடி, எரும, பக்கி.. இப்படி)
- காதல் அதிகரிக்கும் போது. ❤️
- கோபம் அதிகரிக்கும் போது. 😡
- இப்படியான சந்தர்ப்பங்களில் தனிமையில் இப்படி பேசுவது தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். (எவ்வளவு தான் கோபம் வந்தாலும் அதை மூன்றாமவர் முன்னிலையில் வெளிப்படுத்தாத வரை.)
Comments
Post a Comment