பேட்டை முதல் குண்டு வரை
பேட்டை முதல் குண்டு வரை
திருப்பூர் வழக்கறிஞர் முருகராஜ் - கார்த்திகேயினி இணையரின் அன்பு மகள் சொர்ணமாலா அவர்களின் திருமணத்திற்கு சென்று வந்த பதிவுதான் பேட்டை முதல் குண்டு வரை
ஆம் உடுமலைப்பேட்டை முதல் கடமலைக்குண்டு வரை வியாழக்கிழமை காலை 6.40 க்கு சிவா வீட்டுக்கு வந்துவிட்டார். அவசர அவசரமாக குளித்துவிட்டு 6.50 புறப்பட்டு உடுமலை வந்து சிவா அம்மாவின் கையால் ஒரு வரக்காபி குடித்து தினமலர் செய்தித்தாள் பார்க்கும் போதோ அண்ணாமலை யுனைவர்சிட்டி போலி டாக்டர் பட்டம் குறித்து மகிழுந்தில் பேசிக்கொண்டு வந்ததும் வந்தவுடன் இந்த செய்தி பார்த்ததும் ஒரே நேர்கோடாக இருந்தது. இப்படியெல்லாம் இன்னமும் மக்கள் இருக்கிறார்கள். என்ன செய்ய, அவர்கள் அப்படித்தான். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் கதைதான் நினைவுக்கு வந்து சென்றது.
மகிழுந்து 7.30 வெளியில் மேம்பாலம் தாண்டும்போது 7.40 சிவா அம்மா இந்தா பத்து நிமிசத்துல போயிர்லா என்று சொன்னதும் அவரது உறவினர் பல்லடத்தில் சின்னச்சாமி சுசிக்கின்றா என்று அம்மா சொன்னதும், சிவாவும் தெலுங்கில் பதில் சொல்ல உடுமலை கடந்தோம். ஜல்லிபட்டி கிந்த போன் சேசேது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது பயணக்கட்டுரை குறித்தான ஒரு புரிதல் வந்தது. 18347 கி.மீட்டர் தொடங்கி குறிக்கப்பட்டது.
சின்னவீரம்பட்டி, தாண்டி கோட்டமங்கலம் குடிமங்கலம் சுகுணா தீவனம் செல்லும்போது வேகத்தடை ஏறி இறங்கியதும் இதற்காக இரண்டு உயிர்கள் பலி கொடுத்த பிறகே இந்த வேகத்தடை அமைக்கப்பட்டது என்று பேச்சுடன் குடிமங்கலம் வந்து, பூளவாடி பிரிவு, சாலைப்புதூர், பெரியபட்டி, தாண்டும் போது பல்லடம் சின்னச்சாமி தொலைபேசி வர ஜல்லிபட்டி தீசுக்கின்னாரு என்று சிவா சொல்ல அடுத்த மூன்று நிமிடத்த்தில் ஜல்லிபட்டி.
கேத்தனூர் வேகத்தடை அடுத்து பத்து நிமிடத்தில் ப.வடுகபாளையம் சின்னச்சாமி நின்றிருக்க அவரை ஏற்றிக்கொண்டு வாகனம் புறப்பட்டது. மணி 8.45. பசி வயிற்றைக்கிள்ளியது. நேரமே எழுந்ததால் பசி. பல்லடம் தாண்டியவுடன் சின்னக்கரை மணிவண்ணன் நினைப்பு வர அவருக்கு தொலைபேசி அடித்தால் தஞ்சாவூர். சரி நாங்க உங்க வீடு தாண்டிப்போறோம் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே மகாலட்சுமி நகர், வெட்டுப்பட்டான் குட்டை, டி.கே.டி. அடுத்து வீரபாண்டி பிரிவு , பழவஞ்சிபாளையம் தி.மு.க ஆபிஸ் தாராபுரம் சாலையில் வாகனம் திரும்ப மணி 9.15 சரிதான் வாகன நெரிசல் திருப்பூரில் கடந்த காலங்களில் பார்த்த வாகன நெரிசல் இல்லை. மிகவும் அளவாகவே இருந்தது. 1987 ல் திருப்பூர் இருந்த போது இருந்த நெரிசலையும் தற்போது பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நெரிசலையும், கோபி தாய்த்தமிழ்ப்பள்ளிக்காக போன போது இருந்த நெரிசலையும் , திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி போகும் போது இருந்த நெரிசலையும் எண்ணிப்பார்க்கும் போது திருப்பூர் உண்மையில் வணிகம் குறைந்து மாறி விட்டதாகத் தெரிகிறது.
அவ்வளவாக இல்லாவிட்டாலும் அடுத்த ஐந்து நிமிடங்களில் போக்குவரத்து கிளியர். விவேகானந்த பள்ளி வந்ததும், தோழர் இந்த வழியா எனக்கேட்கா கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நான்கைந்து முறை சென்றாலும் சிவாவுக்கு இன்னமும் அந்த இடம் தெரியாது போன்றே பேசுகிறார்.
சரி ஜெயசக்தி நகர் வந்துவிட்டதா? இல்லை, இங்குதான் திமுக மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் இல்லம் தாண்டி 12 ஆவது வீதியில் முருகராஜ் இல்லம். ஒரு வழியாக 9.30 க்கு தீருப்பூர் மணமகள் இல்லம் சென்றடைந்தோம்.
இல்லத்திற்குள் சென்றால் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்க, சரி சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அடுத்த ஐந்து நிமிடம் எங்களுக்கு இட்லி, பொங்கல், மினி ஊத்தாப்பம். சுவையாக இருந்தது. பொங்கல் கேட்டு சாப்பிட்டேன். சுமார்12.30 மணி வரை ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டார் அனுப்பிய வாகனம் வந்துவிட்டதா? தாராபுரம் வந்துட்டாங்க அங்க டிபன் சாப்பிட்டு வர்றாங்க . . பேச்சோடு பேச்சாக மணி 11.10 பிறக 11.30 உறவினர்கள் ஒரு சிலர் நண்பர்கள் பலர் பக்கத்து வீட்டு தோழிகள் பலர் என வீடு கல்யாண வீடாக கலகலத்தது.
மணி 12. ஆகப்போகிறது. வண்டி வந்திடுச்சு சரி வந்தவர்களை கவனிங்க, பெண்ணுக்கு வளையல் பொட்டும் பூ வைக்க அடுத்த எற்பாடுகள் நடந்தது. பெண்ணை இருக்கையில் உட்கார வைத்து பூ பொட்டு வைக்க, நான் மட்டும் பொண்ணுக்கு கன்னத்தில் சந்தனமும், குங்குமம் தடவி விட்டேன். சந்தனம் தடவி குங்குமம் பொட்டு வைக்கவேண்டும். அமுதாவிற்குபொட்டு வைக்கும் போது என் தாய் சொன்ன நினைவு. அது போன்று செய்து விட்டேன். தொகை ஏ.டி.எம். அட்டை பணம் எடுக்காமல் சிவாவிடம் ஆயிரம் பெற்று ஐநூறு மணப்பெண் கையில் கொடுத்தேன்.
அனைவரும் சற்று நிதானித்துப் பார்த்தது புரிந்தது. சரி அடுத்து சீர் சடங்குகள் முடிந்தது. வண்டி ஏறலாம். சுமார் நான்கைந்து தோழிகளுடன் மணப்பெண் கிளம்ப வேனில் ஒரு சிலரும், முருகராஜ் வாகனத்தில் மணப்பெண் தாய், அவரும் ஓட்டுநரும் ஓட்ட, வாகனம் கிளம்பியது. முணி 12.45
நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு குடும்ப திருமணத்திற்கு கலந்து கொண்ட மன நிறைவு. வாகனம் மீண்டும் விவேகானந்த பள்ளி வந்து இடது புறம் திரும்பி சுமார் 2 கி.மீட்டர் சென்றதும் பாதை கருப்பராயன் கோவிலில் வாகனத்திற்கு தேங்காய் உடைத்து வண்டிக்கு எலுமிச்சம் பழம் வைத்து மீண்டும ;பயணம்.
தேங்காய் இருபது ரூபா, எலுமிச்சம்பழம் 50 ரூபாய் இவ்வளவும் வீண் என்ன செய்ய இது நம்பிக்கை சார்ந்த விசயம். தலையிட முடியாதே. சுரி தள்ளி நின்று வேடிக்கை பார்த்தோம். இவர்கள் மட்டுமல்ல, அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் புதுவாகனம், புது மணப்பெண்கள், திருமணத்திற்கு செல்பவர்கள், திருமணம் முடிந்து வருபவர்கள், பெண் பார்க்க செல்பவர்கள், வாகனம் ஓட்டிப் பழகுநர்கள் என எல்லா பக்த கோடிகளும் இப்படித்தான். பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இயல்பாக தேங்காய் உடைக்காமல் வழிபாடு மட்டும் செய்து விட்டு வந்தால் அந்தக் கடவுள் ஒன்றும் கோபிக்கப்போவதில்லi. ஆனால், மக்களின் மனசு லேசானது, பலவீனமானது. உணர்ச்சிகளுக்கு அடிமையானது இது போன்ற உணர்வு வயப்பட்ட நிலையிலேயே இந்த ஈராண்டு காலம் இந்த சமூகம் கிடக்கிறது. இவர்களைப் பற்றி என்ன சொல்ல? சரி அடுத்து,
பயணம் தொடர்ந்து, நீண்ட தூரம், தேனி வரைக்கும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல், போகும் போதே சிவா தன்னுடைய செலவில் எரிபொருள் போட்டுவிட்டார். அதே போல் வரும்போதும் அவரே பெட்ரோல் போட்டுவிட்டார்.
அவினாசிபாளையம், பொங்கலூர், தாராபுரம் சென்றது தெரியவில்லை. சாலையும் நன்றாக இருந்தது. சிவாவும் நன்றாக ஓட்டிக்கொண்டிருந்தார்.
சரி ஒட்டன்சத்திரம் வழக்கமாக நாம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும்போது கள்ளிமந்தயம் தொப்பம்பட்டி இடையில் திருப்பூர் சாலை குறுக்க போவோம். ஆனால், தற்போது அந்த தாழையூத்து சாலை குறுக்கே செல்ல பயணம் தொடர்ந்தது. இடையில் முருகராஜ் தொலைபேசி ஒட்டன்சத்திரம் அபூர்வா உணவகத்தில் மதிய உணவு அங்கு நாங்கள் காத்திருக்கிறோம் என்று சொன்னது போன்றே நாம் சென்று அமரும் வரை அவரும் சாப்பிடாமல் இருந்தார். மணி 2.30 அபூர்வா, போகும்போது பைபாஸ் வழியே செல்லாமல் ஒட்டன்சத்திரம் நகருக்குள் சென்று வந்ததும் தேவையில்லாத பயணம். கேட்கும் போது அந்த வண்டி போச்சு நானும் போயிட்டேன். சரிதா. .. என்ன செய்ய,
மதிய உணவு சாப்பாடு அனைவரும் குறைந்து 25 முதல் 30 பேர் இருப்பார்கள். காய்கறியுடன் சுவையான சாப்பாடு. முடியும்போது 3.15 அனைவரும் சாப்பிட்டு முடிக்க, சரி வாகனம் புறப்பட்டது, வேன் வத்தலக்குண்டு சென்று மாலை வாங்கி வருவதற்கு ஊருக்கள் செல்லும், நாம் பைபாஸ் செல்லலலாம் என்று சொல்லி முன்னே சென்று விட்டார்.
ஒட்டன் சத்திரம் தாண்டி செம்பட்டி பிரிவு வந்ததும் தோழர் இதுல தம்ப்கெட் நிறைய இருக்கு அவுங்க அந்த திண்டுக்கல் வழியாக போயிருப்பாங்க கேளுங்க என்று சொன்னதும் இல்லை இல்லை. நீங்க இந்த வழியா போங்க என்று சொல்லி மெதுவாக ச் செல்ல மல்லிகை மல்லசீலன் திருமணம் செய்து ஊர், கன்னிவாடி ஜமீன் நிலக்கோட்டை என கடந்த போத அவர்களின் வாகனம் கண்ணுக்குத் தெரிந்தது. ஆமா, சிவா நமக்காக அவுங்க ஸ்லோ பண்ணிட்டாங்க. சரி செம்பட்டி வந்துவிட்டது. இன்னமும் வளர்ச்சி பெறாத பகுதிகள். கொஞ்சம் வளர்ச்சி பெற்ற பகுதிகள்.
செம்பட்டி வலது பக்கம் திரும்ப தேனி வாகனம் கொஞ்சம் விரைவாகச் செல்ல, வேளிர் புத்தகம் படித்துக்கொண்டே பல்லடம் சின்னச்சாமி அவர்களின் உரையாடல் இடையிடையே சிவா, சிவா அம்மா, தெலுங்குக் கீர்த்தனைகள். சரி கேட்போம். தேனி வழியாகச் செல்லும்போது எங்கே கொடைக்கானல் ரோடு வரும், ஆனால் சிவா வரும் என்கிறார். சரி வரவே இல்லை, வந்தது தேவதானப்பட்டி பிரிவு, கடந்த 2021 தீபாவளிக்கு வந்தது நினைவு வந்தது. பாதை தெரியாமல் செங்குறிச்சி வந்து, இரவு வடுகபட்டி வந்து அசைவ உணவுஉண்டு பாதை தெரியாமல் முதன்மை சாலை வந்ததும் நினைவுக்கு வந்து செல்ல, அட . . பத்லிகுண்டு, இதென்ன சிவா இப்படித்தான் இங்கிலிஸ்காரன் வாயில நுழைஞ்சிருக்கு என்ன செய்ய, வத்தலக்குண்டு, ஆங்கிலத்தில் பட்லி குண்டு,
பைபாஸ் தாண்டி குளத்தருகே வாகனம் நிற்க, சிவாவும் நிறுத்தினார் கேட்டால், வேன் வரட்டும் என்றார் வழக்கறிஞர். சரி, அப்படியே நீர்நிலை பார்த்துவிட்டு நீர் கழித்து வருவோம் என்று மூவரும் சென்று நீர்த்தேக்க அருகில் சென்றால் பொதுமக்கள் சுத்தம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததும், பொதுக்கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதையும் பார்க்க முடிந்தது. நிற்பதற்குள் வழக்கறிஞர் அழைத்து விட்டார். வாங்க வண்டி போயிடுச்சு, . . ஒ, அப்படியா . .
அடுத்து தற்படம் எடுத்த குளம். இதோ இங்கதான் செல்பி எடுத்தோம். தண்ணீர்க்குளம் அப்படியயே இருக்கிறது. சரி முத்துநாகு கேட்கலாமா என்று கேட்க அவரும், கானா விளக்கிலிருந்து வந்தால் 3 கி.மீட்டர் வர்றீங்களா எனக்கேட்க, வழக்கறிஞரோ, சேர்ந்து வந்துட்டோம் நேரா மண்டபம் போய்ட்டு அப்புற பேசலாம் என்றதும் சரி என்று முத்துநாகு அவர்களுக்க நாளைக்குப் பார்ப்போம் என்று செய்தி அனுப்பினேன். அவரும் அவருடைய வீட்டு லொகேசன் அனுப்ப மறுநாள் அது வேறு பக்கம் செல்ல. மீண்டும் பேருந்து நிலையம் சென்றது தனிக்கதை.
ஆம் இதோ வந்துவிட்டது. வைகை அணை. தோழர் நாம்ம இங்கு வந்திருக்கோம் என்று சிவா இதுவரைக்கும் நாம் வரவில்லை. பவானி சாசர் தோற்றம் என்றும், ஏற்கனவே வந்தது போன்று உணர்வு. 2006 ல் இளவரசன் திருமணத்திற்கு அவருடைய மகிழுந்தில் அழைத்து வந்தார் அப்போது நான் அறிவுடன் சென்றதும், மறுநாள்சனவரி 24 அறிவுக்கு பிறந்த நாள் துணி தேனி ஆனந்தம் துணிக்கடையில் துணி எடுத்ததும் நினைவு வந்து சென்றது.
வைகை அணை சுமார் 20 , 30 கிமீட்டர தூரம் கடந்து செல்லும்போது வைரமுத்துவின் எழுத்துக்களே நினைவுக்கு வந்து சென்றது. பெரியவரின் கதாப்பாத்திரம் வந்தது. வைகை அணை எவ்வளவு பெரியது வேளாண்மைக்கு எவ்வளவு நல்லது, இங்கிருக்கும் மக்கள் விவசாயம் பருவ விவசாயம் செய்யும் அளவிற்கு பண விவசாயம் செய்வதில்லையே என்ற நினைப்புடன் கடந்தோம். நமது பகுதியில் இது போன்று தண்ணீர் கிடைத்தால் தரிசு நிலங்களை விவசாய நிலமாக்கி விடுவார்கள். இங்கிருக்கும் வேளாளர்களுக்கும், வேட்டுவர்களுக்கும், விவசாயம் குறித்து அறிவு அந்தப் பகுதி மக்களுக்கு இப்பொழுதுதான் வந்து கொண்டிருக்கிறது என்று பேசிக்கொண்டிருக்கும் போது இங்கெல்லாம் சைட் போட்டு விற்கறதில்லை என்று சின்னச்சாமி சொல்ல, அடுத்த இரண்டு கி.மீட்டர் சைட் போட்டு மனையிடம் பிரிக்கப்பட்டது தெரிந்தது.
தொடரும் ......
Comments
Post a Comment