குப்பை முனி - அனுபவ வைத்திய முறை
குப்பை முனி - அனுபவ வைத்திய முறை
நம் முன்னோர்கள்,
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள் என்பதையும், மனிதனின் உடம்பு என்பது உயிருக்கு மூலாதாராமாக இருப்பதையும், அதை ஒவ்வொரு வயதிலும், எப்படியெல்லாம்
பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை இயற்கையோடு இயைந்த வாழ்வு என்று குறிப்பிடுவார்கள்.
அந்த இயற்கை என்பது தோழர் முத்துநாகு தொகுத்த குப்பமுனி எனும் நானூற்று எண்பத்தொரு மிகவும் ஆற்றல் வாய்ந்த மூலிகை மருந்துகளையும் எளிமையான மருத்துவ முறைகளையும் நாம் படித்தறிந்தாலே நம் முன்னோர்கள்
மூத்தோர்கள் எப்படியெல்லாம்
வாழ்ந்திருப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், கண்டமனூர் ஜமீனில் இவரது தாத்தா குப்புசாமி பண்டுவராக இருந்துள்ளார்.
அதனால்தான் என்னவோ, இயல்பாகவே இவரது எழுத்துருவாக்கமும் மரபு மருத்துவம் சார்ந்தும், அரிய மூலிகை எனும் நாட்டு மருத்துவம் சார்ந்தே இருக்கிறது.
பொதுவாக சமூக நலனில் அக்கறையோடு பாடாற்றும் நபர்களைக் காட்டிலும், சமூகத்தைப் புரிந்தும், தெளிந்தும், கருத்தியலோடு
போராடும் முத்துநாகுவின்
எழுத்தும் பேச்சும் தெளிந்த மருத்துவராகவே வெளிப்படுத்தும்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று மருத்துவ நூலோர் சொல்லும் வாதம். பித்தம். சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும்.செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோஇ குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.என்பதை அனைவரும் அறிந்துணரும் வகையில் நாடி குறித்தான மருத்துவத்தை
வாத, பித்தம், சிலேப்பன என்பதை மிகவும் எளிமையாக அனைவரும் படித்தறியும்
வகையில் படைத்துள்ளார்.
மனித வாழ்வு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைக்
கொடுத்திருக்கும், ஆனால் மரண பயம் என்பதை எல்லோரும் எல்லா வயதிலும் நினைத்து அச்சப்படவும், வேதனைப்படவும்
செய்யும், ஆனால் குப்பமுனி எனும் நூலைப் படித்துவிட்டால் மரண பயம், அச்சம் என்பது முற்றாக முழுமையாக நீங்கிவிடும். அந்தளவிற்கு
மனித உடம்பின் ஒவ்வொரு வகையான நோய்களுக்கும்
வள்ளுவர் சொன்னது போன்று
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
குணங்குறிகளால் நோயைத் துணிந்து. அதன் காரணத்தையும்
தெளிந்து. தீர்க்கும் வழியையும் அறிந்து. செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும் மருந்தாளுநர் இரா.முத்துநாகு ஒவ்வொன்றையும் ஆராய்ந்தறிந்து
எழுதியுள்ளார். மேலும், நம் கண் முன் இருக்கும் இலைதழைகளில் உள்ள மருத்துவ குணங்களையும், கொரோனோ காலங்களில் நிலவேம்பு , சூரணப்பொடிகளால்
நிவர்த்தி செய்யப்பட்ட
நோய்களையும் குறிப்பிட்டுச்
சொல்கிறார்.
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும்
ஆறு.
முன்னுண்டது அற்றபின். உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும்; அதுவே பெறுவதற்கரியதான
இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும்
வழி
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
உடலுக்கு மாறுபாட்டைச்
செய்யாத உணவையும். தன் மனம் விரும்பியபடி
அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால்.
அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை
ஆங்கில மருந்துக்கடைகளில் குப்பிகளில் அடைத்துக் கொடுத்தாலும் அதன் உயிர்ப்புச்சத்து
தமிழ் மண்ணிலிருந்து
சென்றுள்ள மூல மருந்துகளே என்பதையும் இந்த நூலைப்படித்தறிந்தால் தெரிந்து கொள்ளலாம்.
குப்பமுனி – என்ற நூலை எழுதி இதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அனுபவ வைத்திய முறை என்பதை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தம்முடைய வீட்டில் பயன்படுத்தும் அஞ்சறைப்பெட்டியிலிருந்து தொடங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும், சுக்குக்கு மீறிய மருந்து இல்லை, உடம்பை சீராக்கும் சீர்மைப் பொருளான சீரகத்திற்கு நிகரான மருந்தும் இல்லை என்பதை நாட்டுப்புற வழக்காறு மொழிகளால் அறிந்து கொள்ள முடிகிறது.
சுளுந்தீ ஏழு பதிப்புகளைத் தாண்டி எட்டாவது பதிப்பாக வெளிவருவது போன்று குப்பமுனி எனும் இந்த அனுபவ வைத்திய முறை நூலும் இந்த சமூக மக்களுக்குப்பயன்படும், பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக எழுத்தாளர் இரா. முத்துநாகு இதனைக் கொண்டு வந்துள்ளார்.
நல்லதொரு எளிமையான மருத்துவ நூலினை படைத்திட்ட எழுத்தாளர் இரா. முத்துநாகு அவர்களுக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் நன்றிகளையும் , வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம்.
உடுமலை வரலாறு 20.03.2023



Comments
Post a Comment