ஜக்கையன் சார் பதில் பதிவு :
உடுமலை சிவக்குமார் கேள்வி : எனக்கு நீண்ட வருடங்களாக ..ஒரு கேள்வி ...ஜக்கையன் சார் இடம் ...கேட்கவேண்டும் ..நம் சமுதாயம் வளர என்ன மாதிரியான சிந்தனைகள் வேண்டும் ...சிறு குறிப்பு தந்தால் நன்றாக இருக்கும் ...
ஜக்கையன் சார் பதில் பதிவு :
சாதிக் கட்சிகள் இன்றைய காலகட்டத்தில் வெற்றி பெருவதில்லை. பமக போன்ற பெருவாரியான மக்கள்தொகை கொண்ட சாதி 90களில் பெற்ற வெற்றி தற்போது ஏன் சாத்தியமில்லை.கிருஷ்ணசாமி இப்போது ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஏன் தோற்றார். இன்னும் இதுபோன்று சில சாதிக் கட்சிகள் வென்று இன்று காணாமல் போயுள்ளது என்பது எதைக் காட்டுகிறது. மக்கள் அரசியல்மயமாகிக்கொண்டுவருகிறார்கள் எளிய சாதி உணர்ச்சிகள் என்பது ஒரு சிறு இன்பம் அது வெகுகாலம் நிலைக்காது. பொதுத்தொண்டு என்கிற தளத்தில் சாதி மதம் பாராமல் செய்யும் காரியங்கள்தான் தலைவர்களை அடையாளப்படுத்தும். அதற்கு எடுத்துக்காட்டே பல பாளையங்களில் கம்பளத்தார் எல்லா மக்களோடும் சேர்ந்து பயணித்தது ஒரு காரணம். காலச்சூழலுக்கு ஏற்ப்ப அவர்கள் மாறத் தவறியதன் விளைவு இன்று அந்த இனம் வெற்று ஆண்ட பரம்பரை பேச்சுக்களோடு சென்றுகொண்டுள்ளது. கல்வி, அரசுப்பணிகள் பெண்கள் கல்வி போன்றவற்றில் நம் சமுதாயம் கவனம் செலுத்தும்பொழுது இவைகள் காலப்போக்கில் சாத்தியப்படும் வாய்ப்புகள் உருவாகும்.
மிக்க நன்றி உங்களின் பதிவிற்கு ..ஜாக் சார் ...சிந்திக்க ..நன்றிகள்
Comments
Post a Comment