என் பதில் :
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் டிரைவர் வேலை செய்து வந்தார் , அப்பா இல்லை , சொந்த வீடு , நிலம் , வங்கி சேமிப்பு இப்படி எதுவும் கிடையாது , சிறுவீட்டில் வாடகைக்கு தாய் தம்பியுடன் வசித்து வந்தார் , இடையில் அவர் தாய் தவறி விட்டார்
தினம் ஹோட்டல் , அப்போது என்னிடம் சொன்னார் நான் கல்யாணம் செய்து வாழ்வில் செட்டில் ஆகப்போகிறேன் என்று , அவருக்கு வயது அப்போது 23 தான் , நான் சொன்னேன் உன்னிடம் இப்போது துளியும் பணம் இல்லை , வீடு வாடகை கொடுக்க வேண்டும் , வங்கியில் சேமிப்பும் கிடையாது , பெற்றோர் சொத்து எதுவுமே இல்லை , ஒரு மூன்று வருடம் போகட்டும் அதற்குள் கொஞ்சம் காசு சேமித்துவிடு , தனியாரிடம் டிரைவர் வேலை , ஒரு இரண்டு மாதம் உனக்கு வேலை இல்லையென்றாலும் மிகவும் சிரமப்படுவாய் , மனைவி பிறகு பிள்ளகை என்று ஆகும் அவர்கள் படிப்பு செலவு இப்படி பல செலவுகள் வரும் சமாளிக்க கஷ்டபடுவாய் என்று எவ்வளவோ சொல்லியும் திருமணம் உடனே செய்தார் , பிறகு கொஞ்ச மாதத்தில் வேலை போனது , மூன்று நான்கு மாதம் வேலை கிடைக்கவில்லை , பிள்ளைகளும் பிறந்தன , இப்போது தினமும் புலம்புகிறார் அவசரப்பட்டு விட்டேனே என்று , வாடகை கொடுக்க முடியாமலும் , பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் , பண்டிகை விசேஷங்களில் பணம் இல்லை என்றும் நித்தம் புலம்பல் , கொரோனா நேரத்தில் அவர்க்கு வேலையும் இல்லாமல் சாப்பிட வழியும் இல்லாமல் , நான் ஒரு ஐந்து மாதம் என்னால் முடிந்தது மாதம் இரண்டாயிரம் கொடுத்து உதவினேன் , கொஞ்ச நாட்கள் முன்பு அவர் குழந்தையை (இப்போது தான் பள்ளியில் சேர்த்தார் ) உறவினர் ஒருவரின் உதவியால் நிதி வாங்கி கொடுத்தேன் , இப்போது புரிந்து இருக்கும் வாழ்வில் செட்டில் ஆவது பற்றி..நன்றி ..
Comments
Post a Comment