பவா செல்லதுரை ..Biography...


பவா செல்லதுரை


பவா செல்லதுரை(பிறப்பு: ஜுலை 27 ,1965 )தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க புனைவு எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் ,கதைசொல்லி, களப்பணியாளர்,திரைப்பட நடிகர், இயற்கை விவசாயி, அரசியலாளர். அடித்தள மக்களின் வாழ்க்கையை வலுவாகச் சித்தரித்த படைப்பாளி. மனித வாழ்வின் அவலங்களையும் நெகிழ்ச்சியான தருணங்களையும் எழுதியவர் . முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மாவட்டச் செயலாளராகவும், தலைவராகவும், மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நூற்றுக்கும் மேலான கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார்.

பிறப்பு,கல்வி

பவா செல்லதுரை தனக்கோட்டி அய்யாவிற்கும், தனம்மாளுக்கும் ஜுலை 27 ,1965 அன்று திருவண்ணாமலையில் பிறந்தார். தந்தை பழங்குடி மாணவர்களுக்கான உண்டுறை பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், விடுதிக்காப்பாளராகவும் இருந்தார்.

திருவண்ணாமலையிலுள்ள சாரோன் போர்டிங் பள்ளியில் தொடக்ககால பள்ளிப் படிப்பையும், டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வியும்பயின்றார். திண்டிவனம் அரசினர் கலைக்கல்லூரியிலும், திருவண்ணாமலைக் கல்லூரியிலும் இளம் வணிகவியல் (பி. காம்) பட்டப் படிப்பு பயின்றார்.

தனிவாழ்க்கை

நன்றி கனலி.இன்

1993-ல் திருவண்ணாமலை சாரோன் போர்டிங் பள்ளியில் நடந்த கலை இலக்கிய மாநாட்டில் கே.வி.ஷைலஜாவுடன் ஏற்பட்ட சந்திப்பு, காதலாக மலர்ந்து, இருவரும் ஏப்ரல் 10, 1994 அன்று திருமணம் செய்து கொண்டனர்.‌ கே. வி. ஷைலஜா சிதம்பர நினைவுகள் , சுமித்ரா போன்ற புகழ்பெற்ற மொழியாக்கங்களைச் செய்தவர், எழுத்தாளர். மகன் வம்சி . ஆவணப்படம் மற்றும் குறும்படங்களை இயக்குபவர். மகள் மானசி ஆயிஷா என்னும் புத்தகத்தை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

பவா செல்லத்துரை தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

தந்தை ஆசிரியராகப் பணி புரிந்ததால் பவா செல்லதுரையின் பள்ளிப் பருவம் பல்வேறு ஊர்களில் கழிந்தது. அந்த அனுபவங்களும், ஜெயகாந்தனின் 'ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்நாவலை வாசித்த தாக்கமும் சேர்ந்து பதினாறூவது வயதில் உறவுகள் பேசுகிறது என்ற நாவலை எழுதினார். அது திருவண்ணாமலையிலிருந்து வெளிவந்த தீபஜோதி இதழில் வெளியாகியதுவசந்தம் என்ற கையெழுத்துப் பிரதி நடத்திய அனுபவம் அவரை மேலும் எழுதத் தூண்டியது.

எழுத்தாளர் உதயசங்கருடனான நட்பும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனான தொடர்பும் பவா செல்லதுரையின் தீவிர இலக்கிய வாசிப்புக்குக் காரணமாயினபுதுமைப்பித்தன், வண்ணதாசன்வண்ணநிலவன்சுந்தர ராமசாமி என வாசிப்பு வளர்ந்தது. 89-ல் பவா செல்லதுரை மேடைகளில் வாசித்த, இதழ்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் கந்தர்வனின் முன்னுரையோடு வெளிவந்தது. கல்கியில் வெளியான முகம் சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசைப் பெற்றது.

சிறுகதைகள்

பல இதழ்களில் வெளியான பவா செல்லதுரையின் சிறுகதைகள் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற தொகுப்பாக வெளிவந்தன. இச்சிறுகதைத் தொகுப்பில் வேட்டை[1]பச்சை இருளன்சத்ரு[2] கதைகள் பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றவை. இரண்டாவது கதைத் தொகுப்பு டொமினிக் வம்சி வெளியீடாக 2016-ல் வந்ததுடொமினிக் ஜெயகாந்தனின் ஹென்றியின் சாயல் கொண்ட பாத்திரப்படைப்பு.

பவா செல்லதுரை தமிழில் மாய யதார்த்தக் கதைகளை படைப்பாக முன்வைப்பதற்கான கூட்டு முயற்சியை கோணங்கி, மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைந்து மேற்கொண்டார்ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும் என்ற தமிழ், இலத்தீன் அமெரிக்க கதைகளின் தொகுப்பில் ஜெயமோகன்எஸ்.ராமகிருஷ்ணன்கோணங்கி.தமிழ்ச்செல்வன், பவா செல்லதுரை, கே.ஷாஜகான், போப்பு ஆகியோரின் தமிழ்க் கதைகளும், போர்ஹேயில் துவங்கி பல பிரபலமான இலத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் கதைகளின் மொழியாக்கங்களும் இடம்பெற்றன. பவா செல்லத்துரை எழுதிய கதைகளில் சத்ரு, பச்சை இருளன், ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் மாய யதார்த்தக் கூறுகளைக் கொண்டவை.

நினைவுக்குறிப்புகள்

பவா செல்லத்துரை தன் நினைவுகளை வெவ்வேறு நூல்களாக எழுதியிள்ளார்19 டி.எம். சாரோனிலிருந்து என்ற கட்டுரைத் தொகுப்பு பவா செல்லதுரை தன் வாழ்வில் எதிர்கொண்ட பல்வெறு தனித்தன்மையுடைய ஆளுமைகளுடனான அனுபவங்களின் தொகுப்பு. எல்லா நாளும் கார்த்திகை தொகுப்புஜெயகாந்தன், பாலுமகேந்திரா, மம்முட்டிசுந்தர ராமசாமி, பாரதிராஜா, நாசர்வண்ணநிலவன்சா.கந்தசாமி போன்ற பிரபலங்களின் அறியாத மற்றொரு முகத்தை, அவர்களது அக உலகை, ஆசைகளை, ஏக்கங்களை, எண்ணங்களைக் காட்டிய படைப்பு.

குறும்படங்கள்

·         "ஏழுமலை ஜமா" என்னும் சிறுகதையை கருப்பு கருணா குறும்படமாக இயக்கியுள்ளார்.

·         "ஏழுமலை ஜமா" என்னும் சிறுகதை ரோஸ்லின் இயக்கத்தில் 'கூத்தேஎன்ற பெயரில் குறும்படமாக்கப்பட்டுள்ளது.

·         'நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை' கதையை மைக்கேல் அருண் எழுதி இயக்க பினு ஒளிப்பதிவு செய்தார்.

·         'வலி' என்ற சிறுகதையை 'காயம்' என்னும் பெயரில் கணேஷ் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

திரைப்படம்

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கிய பவா செல்லத்துரை இப்போது முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் குணச்சித்திர நடிகராக அறியப்படுகிறார். 2016ல் வெளிவந்த ஜோக்கர் பவா செல்லத்துரை நடித்த முதல் திரைப்படம்.

கதை சொல்லல்

பவா செல்லதுரை அவருடைய நண்பர் ஜே.பி. யின் வேண்டுகோளுக்கிணங்க ஐம்பது பேர் முன்னிலையில் தமிழிலக்கியக் கதைகளைச் சொல்ல ஆரம்பித்து நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தில் கதை சொல்லத் துவங்கினார். எழுத்தாளனாக அடைந்ததைவிட, பத்துமடங்கு வாசகர்களை கதைசொல்லியாக அடைந்திருப்பதாகவும், தனது புத்தகங்களை மட்டுமல்லாது தான் கதை சொல்லும்போது குறிப்பிடுகின்ற அனைத்து எழுத்தாளர்களின் கதைகளையும் தனது வாசகர்கள் தேடி வாசிக்கிறார்கள் என்பதை ஒரு வெற்றியாகவே பாரப்பதாகவும் பவா தெரிவிக்கிறார். ஒரு கதைசொல்லியாக பல்வேறுநாடுகளுக்குச் சென்று பவா செல்லத்துரை இலக்கியக் கதைகளை கூறிவருகிறார். பெருங்கதையாடல் என்னும் தலைப்பில் நாவல்களையும் கதைகளாகச் சொல்லிவருகிறார். முத்துலிங்கம் தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லி என்று பவா செல்லத்துரையை குறிப்பிடுகிறார்.

அரசியல்

பவா செல்லத்துரை இடதுசாரிக் கொள்கைகள் கொண்டவர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) சார்புடைய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளில் செயல்பட்டார். பின்னர் நேரடிப்பொறுப்புகளில் இருந்து விலகி கட்சி ஆதரவாளராக நீடிக்கிறார்.

அமைப்புப் பணிகள்

பவா செல்லதுரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது திருவண்ணாமலையில் கலையிலக்கிய இரவு என்னும் முழுஇரவு கலைநிகழ்வை தொடங்கி நடத்தினார். முற்போக்கு எழுதாளர் சங்கத்தின் சார்பில் இலக்கியக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் நடத்தியுள்ளார். அவ்வமைப்பில் இருந்து விலகியபின் தனிப்பட்ட முறையில்முற்றம்’ ‘டயலாக்' போன்ற இலக்கிய உரையாடல் அமைப்புகளை உருவாக்கி மாதாமாதம் ,நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

பவா செல்லத்துரை உருவாக்கியிருக்கும் பண்பாட்டு செயல்பாட்டுக்கான இடம் பத்தாயம் என பெயரிடப்பட்டுள்ளது. இங்கு தங்குமிடங்களும் இலக்கியநிகழ்வுக்கான அரங்கும் உள்ளன. இலக்கியச் சந்திப்புகளும், கருத்தரங்குகளும் இங்கே நிகழ்கின்றன.

விருதுகள், ஏற்புகள்

·         தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

·         தமிழக அரசின் சிறந்த கட்டுரைக்கான விருது - எல்லா நாளும் கார்த்திகை

·         நொய்யல் இலக்கிய விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

·         சிறந்த நடிகருக்கான விருது- 2021 - செந்நாய்

ஆவணப்படம்

ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கத்தில் பவா என்றொரு கதை சொல்லி ஆவணப்படம் செந்தழல் ரவி, எஸ்கேபி கருணாவின் உருவாக்கத்தில், (ஒளிப்பதிவு-சரவணகுமார், படத்தொகுப்பு-தயாளன்) வெளிவந்தது. பவா என்ற கதை சொல்லியின் ஆளுமை என்ற ஒரு கோணத்தில் மட்டுமே இந்த ஆவணப்படம் அடையாளப்படுத்துகிறது.

இலக்கிய மதிப்பீடு

பவா செல்லதுரையின் படைப்புகள் மனித வாழ்வின் அவலங்களை, நெகிழ்ச்சியான தருணங்களைச் சொல்பவை. கூத்துக் கலைஞன், கள்வன், வேட்டைக்காரன்,கிணறு வெட்டும் ஒட்டன், இருளர், பறையர் என எளிய, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல், சமூக அமைப்பு, அவர்களின் துயரம், இவற்றின் இடையே இழையோடும் அன்பு ஆகியவை அவரது புனைவுலகின் பேசுபொருள்கள். நெகிழ்ச்சியான மன ஓட்டங்களைச் சொல்வதற்காக கற்பனாவாதம் கலந்த எழுத்துமுறையைக் கையாள்கிறார்.

எழுத்தாளர் பிரபஞ்சன், "பரவசம் தோய்ந்த, உணர்ச்சியில் சில்லிட்ட, வியப்பில் பூரித்த, அற்புதத்தில் ஸ்தம்பித்த, வார்த்தைகளால் பவா பேசுகிறார். பவாவின் கண்கள் பத்து வயதுச் சிறுமியின் விழிகள். கிராமத்திலிருந்து பட்டணம் வந்து, பேரடுக்குப் பெருவீடுகளைக் கண்டு திகைத்து நிற்கும் பத்து வயதுக் குழந்தையின் நிர்மலமான ஆச்சரியப் பார்வை அது. உணர்ச்சிகளை ஒளித்துப் போலி பெரிய மனுஷத்தனம் காட்டாத சத்தியத்தின் குரல் அவருடையது. மனித உன்னதங்கள் தன் தொட்டுவிடும் தூரத்தில் நின்றுகொண்டு தன் விகாசத்தை வெளிக்காட்டுகையில் அத் தருணத்தின் பேரொளியைக் கைகளுக்குள் பொத்தி அப்படியே, தொங்கும் உண்மையின் கவிச்சி வாசனையோடு எழுதுகிறார்" என்று பவாவின் எழுத்தை மதிப்பிடுகிறார். எழுத்தாளர் ஜெயமோகன்," பவா செல்லதுரையின் புனைவல்லாத படைப்புகளில் அன்பு, பரிவு ஆகியவை நிறைந்த ஒரு கொண்டாட்ட மனநிலை இருக்கும். எதிர்மறை அம்சமும், துயரமும் இல்லாத தன்மையிருக்கும். புனைவில் நேர்மாறாக பெருங்கருணையோடு துயரப் படுபவர்களைப் பார்த்து அல்லது துயரப் படுபவர்களின் குரலாக ஒலிக்கிற தன்மையைப் பார்க்கலாம்" என்று விமர்சிக்கிறார். "பவாவின் எழுத்து வாசிப்பவர்களைத் தடுமாற வைக்கிறது. சதா மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மனதைச் சற்றே இடம்பெயர வைக்கிறது" என்கிறார் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்.

நூல்கள்

நாவல்

·         உறவுகள் பேசுகிறது -1986

கவிதை

·         எஸ்தரும், எஸ்தர் டீச்சரும் – 1989

 

சிறுகதைத் தொகுப்பு

·         நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - 2008

·         டொமினிக் -2016

·         நீர் மற்றும் கோழி - 2017

கட்டுரைகள்

·         19, டி. எம். சாரோனிலிருந்து 2011

·         எல்லா நாளும் கார்த்திகை – 2013

·         நிலம் – 2014

·         பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல - 2016

·         பங்குக்கறியும் பின்னிரவுகளும்- 2018

·         மேய்ப்பர்கள்- 2020

·         இலக்கில்லா பயணங்கள்-2021

மொழிபெயர்த்த நூல்கள்

·         மலையாளத்திலிருந்து பால் சக்கரியா எழுதிய "தேன்"என்ற நூலை தமிழில் 2018-ல் மொழிபெயர்த்தார்.

தொகுத்த புத்தகங்கள்

·         கந்தர்வன் கதைகள் – 2012

·         ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்-1992

·         சிறகிசைத்த காலம் – 2013

·         நிராயுதபாணியின் ஆயுதங்கள் (ஜெயந்தனின் சிறுகதைகளடங்கிய தொகுப்பு )-2005

பிற மொழிகளில் பவா செல்லதுரையின் நூல்கள்

மலையாளம்

சிறுகதை தொகுப்பு

·         நட்சத்திரங்கள் ஒளிக்குந்ந கற்ப பாத்ரம் - திரு.ஸ்டான்லி

·         டொமினிக் - கே.எஸ். வெங்கடாசலம்

கட்டுரை

·         எல்லா நாளும் கார்த்திகை - மலையாளத்தில் டாக்டர் டி.என். ரகுராம்

·         வழிகாட்டி (மேய்ப்பர்கள்)- ஷஃபி செருமா விளவில்-2022

·         கிழக்கு நோக்கி சிரிச்ச பூ- அனுபவங்களும், கட்டுரைகளும்- கே.எஸ். வெங்கடாசலம்

ஆங்கிலத்தில் சிறுகதை மற்றும் கட்டுரைகள்

·         Dominic - சித்ராஜ் பொன்ராஜ்

·         Ruins of the Night - ஜானகி வெங்கட்ராமன்

·         From 19 DM Saron - பி. ராம்கோபால்

·         Shepherd - டாக்டர் கே. சுப்ரமணியன்

·         Shared Meat and Late Nights –2021 டாக்டர். லக்ஷ்மிபிரியா

·         Earth- டாக்டர். லக்ஷ்மிபிரியா

·         Carnival Called Life- லதா ராமகிருஷ்ணன்

தெலுங்கு சிறுகதைத் தொகுப்பு

·         நக்ஷத்தாரலூ தக்குண்ணா அபாயரான்யம் ( நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை கதைகளின் முழுத் தொகுப்பு) - ஜில்லாலே பாலாஜி



Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰