udumalai varalaru 2022...

 சனவரி 4 ஆம் தேதி  கோயிற் கலை ஆய்வாளர் முனைவர் சசிகலா  உடுமலை ஜிவிஜி கல்லூரி வரலாற்றுத் துறையில் உரை

போளரப்பட்டி மந்திரக்கல், கடத்தூர் கொங்க விடங்கீஸ்வரர் கோயில், மருதீசர் கோயில் ஆய்வுப்பணிகள் உடன்  முனைவர் விஜயலட்சுமி, வி.கே.சிவகுமார்

சுனவரி 5 பேரூர் திருப்பெருந்திரு மருதாசல அடிகளார் அவர்களுக்கு உடுமலை வரலாறு மற்றும் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிப்பு

சனவரி 8 நஞ்சேகவுண்டன்புதூர் உச்சிமாகாளியம்மன் கும்மி ஆட்டக்குழுவினர் பிப்ரவரி நிகழ்வுக்காக  படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

சனவரி 10 ஆம்நாள்  கோவை மாவட்ட அருங்காட்சியக மண்டல அலுவலர் திரு. நந்தகுமார் போளரப்பட்டி மந்திரக்கல் ஆய்வுக்கு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்தல்

சனவரி 15 ஆம் நாள் திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருநாள் நிகழ்வு

சனவரி 21 ஆம் நாள் உடுமலை வரலாற்று நூலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் வழங்குதல்

சனவரி 24 ஆம் நாள் திருவள்ளுவர் திருக்கோட்டத்திற்கு உடுமலை ரோட்டரி சங்கத்தினரால்  மேற்கூரை அமைக்கப்பட்டு  மாண்புமிகு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் மூலம் திருவள்ளுவர் திருக்கோட்டத்திற்கு ஒப்படைக்கப்படும் நிகழ்வு

சனவரி 28 வெற்றி ( டிராவலிங் தமிழா சேனல்)  கரைவழிநாட்டு குழுமூர் நூல் பரிசளிப்பு

சனவரி 30 ஆம் நாள் புளியம்பட்டி மால கோயில் ஆய்வு உடன்  முனைவர் விஜயலட்சுமி, வழக்கறிஞர் சத்தியவாணி, 

அன்று மாலை  கோவை வனத்துறைக்கல்லூரி பேராசிரியர்களுடன் உடுமலை வரலாறு நூல் பரிசளிப்பு


பிப்ரவரி 8 உடுமலை வரலாற்று துணைத்தலைவர் திரு.வி.கே.செல்வராஜ் புதல்வன்  திரு.வி.கே.எஸ். பிரபாகரன் திருமண வரவேற்புக்கு பதாகை வைத்தது (பர்வீன் சுல்தானா வருகை)

பிப்ரவரி 10  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  கார்வேந்தன் அவர்களுக்கு உடுமலை வரலாறு தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிப்பு

தோழர் அப்துல் கய்யும் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தல்

பிப்ரவரி 27 சென்னை புத்தகக்கண்காட்சியில்  அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களால் உடுமலை வரலாற்று நடுவத்தின் வெளீயிடான  தென்கொங்கின் தொன்மங்கள் சென்னை புத்தகக்கண்காட்சியில் வெளியிடப்பெற்றது.


மார்ச் 2 ஆம் நாள்  மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.

மார்ச் 3 நகர மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு மு. மத்தீன் அவர்களுக்கு மலர்கீரிடம் வழங்கி சால்வை அணிவிக்கப்பட்டது


மார்ச் 5 ல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

மார்ச் 6 ல் உடுமலை அமிர்தநேயன் அவர்களுக்கு நூல் வழங்கப்பட்டது.

மார்ச் 7 ல்  திராவிட இயக்கத் தமிழர் அமைப்புச்செயலாளர் திரு.கா.சு. நாகராசன் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.

மார்ச்10 ல் மாவட்ட ஆளுநர் முனைவர் நித்தியானந்தம் தாளாளர் ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லூரி அவர்களுக்கு  உடுமலை வரலாறு நூல் பரிசளிப்பு

மார்ச் 15 ல் ஸ்ரீ ஜிவிஜி கல்லூரி செயலாளர் திருமதி சுமதி கிருஷ்ணபிரசாத் அவர்களுக்கு தென்கொங்கின் தொன்மங்கள் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 

மார்ச் 15 ல்  கரட்டுமடம் பரமேஸ்வரன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டுநூல் பரிசளிக்கப்பட்டது.

மார்ச் 19 ல் திருப்பூர் மணிவண்ணன் அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை  ஏப்ரல் பயணத்திற்கு முன்னோட்டமாக இடங்கள் சென்று பார்க்கப்பட்டது. 

மார்ச் 27 ல்   ஆச்சிபட்டி நிகழ்வில் கதை சொல்லி பவா செல்லதுரை அவர்களுக்கு  உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.

மார்ச் 28 தென்கொங்கின் தொன்மங்கள் நிகழ்வு முதல் அழைப்பிதழ்  திரு. முத்துக்குமாரசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மார்ச் 30 ல்  திரு.சுபாஸ் கிருஷ்ணசாமி அவர்களுக்கு  தென்கொங்கின் தொன்மங்கள் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

மே 2 உடுமலை நகர மன்றத்தலைவர் அவர்களுக்கு திருவள்ளுவர் சிலை மற்றும் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிப்பு

மே 13 கிணத்துக்கடவு ஈஸ்வர் கலை அறிவியல் கல்லூரிக்கு முனைவர் பர்வீன் சுல்தானா வருகை. கல்லூரிக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிப்பு

மே 14  உடுமலை உடுமலை நகராட்சி ஆணையாளருக்கு உடுமலை வரலாறு நூல் மற்றும் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.

மே 15 பேருந்து வழங்கிய  பொள்ளாச்சி பி,ஏ. கல்லூரிக்கு  தென்கொங்கின் தொன்மங்கள் நூல் வழங்கி சால்வை அணிவிக்கப்பட்டது.  

மே 17 ல் திரு. அமர்ந்hத் அவர்களுக்கு தென்கொங்கின் தொன்மங்கள் நூல்  வழங்கி திருவள்ளுவர் சிலை  பரிசளிக்கப்பட்டது.

மே 28 ல் புதுக்கோட்டை சுற்றியுள்ள கோயில்கள் சித்தன்ன வாசல், குடுமியான் மலை, விஜயாலய சோழீஸ்வரம்  மரபு நடையில் பங்கேற்பு





சூன் 1 ஆம் நாள் மடத்துக்குளம் வந்த முனைவர் சுந்தரவள்ளி அவர்களுக்கு உடுமலை வரலாறு மற்றும் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.

சூன் 7 ஆம் நாள்  கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி தொல்லியல் கருத்தரங்கில்  உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் அறிமுகப்படுத்தி சிறப்புரை

சூன் 6 இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் வெற்றி பெற்ற  உடுமலை எஸ்வி.புரம் சந்தோஷ்குமார் அவர்களுக்கு உடுமலை வரலாற்று ஆய்வுநடுவத்தின் சார்பில்  உடுமலை வரலாறு நூல் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

சூன் 4 ல் கண்ணாடிப்புத்தூர்  திரு. கணபதி செல்வராஜ் அவர்களிடம் கண்ணாடிப்புத்தூர் கல்வெட்டு கோயில்கள் குறித்து நேரடி கள ஆய்வு

சூன் 5 ல்  திருப்பூர் முத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உடுமலை வரலாறு வெளியிட்டமைக்கு திருப்பூர் முத்தமிழ்ச்சங்கத்தின் விருது வழங்கப்பட்டது.

உடுமலை வனச்சரக அலுவலர் திரு. கணேஷ்ராம் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.

சூன் 9 ல்  உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் மதிப்புறு தலைவர் முனைவர் விஜயலட்சுமி அவர்களின் திருமகள் அனு - சூர்யா அவர்களுக்கு  திருமண வாழ்த்து வழங்கப்பட்டது.

சூன் 10 ல்  இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற திரு .சந்தோஷ்குமார் அவர்களுக்கு  மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கு.சண்முகசுந்தரம் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார்.

முனைவர் விஜயலட்சுமி அவர்களின் அன்புமகள் சூர்யா-அனு அவர்களின் திருமணம் கொரோனோ காலத்தில் யாரும் இல்லாமல் நடந்ததால் மீண்டும் அவர்கள் வெளிநாடு சென்று திரும்பி வந்த பொழுது வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் மணமக்களுக்கு வாழ்த்து மடல் வழங்கப்பட்டது. 

சூன் 16 ல் உடுமலை வரலாறு இரண்டாம் பதிப்பு முதல் பிரதி உடுமலை நகர மன்றத் தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சூன் 19, 20 சென்னையில்  தலைமைச்செயலகத்தில் அருங்காட்சியகத்தில்  ஆய்வுப்பணி

சூன் 23 திருமிகு வேலுசாமி அவர்களுக்கு  தென்கொங்கின் தொன்மங்கள், உடுமலை வரலாறு இரண்டாம் பதிப்பு வழங்கப்பட்டது.

சூன் 26 ல் உடுமலை காரத்தொழுவு கூட்டத்திற்கு வருகை தந்த சொல்லின் செல்வர்  திரு. நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.


சூலை 1 ஆம் நாள் கொழுமம் வீரசோழீஸ்வரர் திருக்கோயிலில் மாண்புமிகு  பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கற்பகம் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் கரைவழி நாட்டுக் குழுமூர் புத்தகத்தை மாதிரி வெளியீட்டு நிகழ்வு

சூலை 10 ல்  சூலூர் வரலாறு தொகுத்த  புலவர் செந்தலை கௌதமன் அவர்களுக்கும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. ராசா அவர்களுக்கும் உடுமலை வரலாறு நூல்  சூலூர் நிகழ்வில் வழங்கப்பட்டது.

சூலை 11 ல் கடத்தூர் பழம்பெரும் ஆசிரியர் திரு.பலராமன் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.

சூலை 15 காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் கல்விப்பரிசளிப்பு விழா  மலையாண்டிபட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

சூலை 16 ஆம் நாள்  புதுக்கோட்டையில் நடைபெற்ற தொல்லியல்  கழக மாநாட்டில்  உடுமலை வரலாற்றின் சார்பில்  வெளியிடப்பெற்ற தென்கொங்கின் தொன்மங்கள் நூல்  வெளியிடப்பெற்றது.

சூலை 17 பொற்பனை கோட்டை இருந்த இடம் சென்று பார்க்கப்பட்டது. 

சூலை 17 தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டது.

சூலை 19 ல் சென்னை அருங்காட்சிய பொறுப்பாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு உடுமலை வரலாறு மற்றும் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் வழங்கப்பட்டது.


சூலை 20 ல்  ஆவின் பால் துறையில் பணியாற்றும் உடுமலை மற்றும் தாராபுரம் சரகத்தின் வட்டார அதிகாரியாகப் பணியாற்றும் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.

சூலை 31 அன்று  தேவனூர்புதூர் அன்பு செல்வம் அவர்களுக்கு காந்தி நகர் தலைவர் திரு. குமாரராஜா அவர்களது இல்லத்தில்  உடுமலை வரலாறு மற்றும் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் நினைவுப்பரிசளிக்கப்பட்டது.


ஆகஸ்ட் 15 ல் உடுமலை அமுதப்பெருவிழாவில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில்  தளி எத்தலப்பர் அலங்கார ஊர்தி உடுமலையில் நகர் வலம் வந்தது.

செப்டம்பர் 3 ல் மடத்துக்குளம் மயானத்தில் திப்பு சுல்தான் காலத்தில் வாழ்ந்த ஒருவரின் இறப்பு உருது எழுத்துக்களால் கல்வெட்டாகப்பதிவு செய்யப்பட்டது. ஆய்வு செய்யப்பட்டது. உடன் முனைவர் விஜயலட்சுமி. திரு. வி.கே.செல்வராஜ். 

செப்டம்பர் 6 ல் நல்லாசிரியர் விருது பெற்ற  திருமதி நர்மதா அவர்களுக்கு உடுமலை வரலாற்றின் சார்பில்  உடுமலை வரலாறு நூல் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. உடன்  ஆர்.ஜி.எம்.கார்த்தி, எஸ்.கே.பி. அன்பரசு ஆசிரியர் , முனைவர் விஜயலட்சுமி. திரு. வி.கே.செல்வராஜ்

செப்டம்பர் 9  ல் கொழுமம்  வீரசோழீஸ்வரர் திருக்கோயில் பாலாலய நிகழ்வு கலந்துகொண்டு கரை வழி நாட்டுக்குழுமூர் நூல் வெளியிட அனுமதி பெறப்பட்டது.

செப்டம்பர் 10 ல்  நஞ்சேகவுண்டன்புதூர் வள்ளிக்கும்மியின் 100 ஆவது நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. உடன் முனைவர் விஜயலட்சுமி, திரு. வி.கே.செல்வராஜ், வழக்கறிஞர் சத்தியவாணி

நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி கலாமணி ஆசிரியர் அவர்களுக்கும்  முனைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும்  உடுமலை வரலாறு நூல் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. உடன் முனைவர் விஜயலட்சுமி. திரு. வி.கே.செல்வராஜ்

செப்டம்பர் 11 ல் சோழமாதேவி திரு. சாகுல் அமிது அவர்கள் வீட்டில்  கரைவழி நாட்டு சோழமாதேவி குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு ஆகஸ்ட் 15 விடுதலை நாள் மலர் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 15 ஆம்நாள்  அண்ணா தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வு உடுமலை கிளை எண் 2 நூலகத்தில் கலந்து கொள்ளப்பட்டது. உடன் முனைவர் விஜயலட்சுமி,  துணைத்தலைவர்கள் திரு. வி.கே.செல்வராஜ், திரு. ராஜசுந்தரம்.

செப்டம்பர் 17 உடுமலை தொழிற்பயிற்சிக்கல்லூரியில் கலந்து கொண்டு தந்தை பெரியார் குறித்து சிறப்புரையாகப்பேசப்பட்டது. உடன் வி.கே.செல்வராஜ்.

செப்டம்பர் 18  கொழுமம் கல் மண்டபம் ஆய்வு செய்யப்பட்டது தினமலரில் செய்தியாக வெளியிடப்பெற்றது.

செப்டம்பர் 25 உடுமலை நாராயணகவி பிறந்த நாளுக்கு  30 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பதாகை வைக்கப்பட்டது.

செப்டம்பர் 20 ல் உடுமலை புத்தகத்திருவிழாவில் உடுமலை வரலாறு 15 புத்தகங்களும் தென்கொங்கின் தொன்மங்கள் 10 புத்தகங்களும் விற்பனைஆயின.

செப்டம்பர் 27 ல் உடுமலை வருகை தந்த  மதுரை பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூலும், தென்கொங்கின் தொன்மங்கள் நூலும் பரிசளிக்கப்பட்டது.

செப்டம்பர் 30 ல்  தி.மு.க.வின் முதுபெரும் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. விடுதலை விரும்பி அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.

அக்டோபர் 2 ல் உடுமலை மக்கள் பேரவையின் சார்பில் உடுமலை வரலாறு நூல் தொகுத்தமைக்காக  தலைவர் திரு. குமாரராஜா அவர்களின் பரிந்துரையில்  நினைவுப்பரிசும் சால்வையும் வழங்கப்பட்டது.

04.10. ல் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர் திரு.சுப்பிரமணியம் உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.

05.10. ல் காவல் துறை அதிகாரி திரு. செந்திலின் நண்பர் அவர்களுக்கு உடுமலை வரலாறு தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.

07.10. ல் கொழுமம் வீரசோழீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் திருமதி சங்கீதா அவர்களுக்கு தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.

09.10. ல் பொதுவுடைமைப்போராளி வரலாற்றில் திருவண்ணாமலை  நூல் தொகுத்த திரு. த.மா. பிரகாஷ் அவர்களுக்கு சால்வை அணிவித்து உடுமலை வரலாறு , தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது. 

நவம்பர் 20 ல் முண்டுவேலாம்பட்டி பல்லாக்குத்திருக்கோயில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. 

டிசம்பர் 4 ல் பொன்னாலம்மன் கோயில் கொற்றவை வழிபாட்டுக்கான சிலை ஆவணப்படுத்தப்பட்டு செய்தி வெளியிடப்பெற்றது.

டிசம்பர் 18 வீரசோழியம்மன் கோயில் ஆவணப்படுத்தப்பட்டு செய்தியாக்கப்பட்டது.

19.12. உடுமலை தி.மு.க.வின் முதுபெரும் ஆளுமை திரு. பருவதகண்ணன் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிப்பு


Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰