டிஜிட்டல் கரன்சின்னா என்ன? க்ரிப்டோ கரன்சி ஆபத்தா?

-செழியன் ஜானகிராமன்

 

மத்திய அரசு டிஜிட்டல் கரன்சி வெளியிட்டுள்ளதுஇதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள், மாற்றங்கள் என்னக்ரிட்டோ கரன்சி யை வாங்க வைக்க  பல முயற்சிகள் நடக்கின்றன! க்ரிப்டோ கரன்சியை வாங்கலாமாதாறுமாறாக நடக்கும் க்ரிப்டோ கரன்சி மோசடிகளுக்கு என்ன தீர்வு

க்ரிப்டோ கரன்சியை இந்திய அரசே வெளியிடப் போகிறது என்று பலர் நினைத்துக் கொண்டு இருந்தனர். அதன் முன்னோடியாக தான் முன்கூட்டியே க்ரிப்டோ வர்த்தகத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது என்றும் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்துள்ளவர்கள் பேசி வந்தனர்.

இந்தக் கட்டுரைக்குள் நுழைவதற்கு முன்பு க்ரிப்டோ கரன்சிக்கும்டிஜிட்டல் கரன்சிக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்ப்போம்!

டிஜிட்டல் கரன்சி என்பது புதியதான ஒன்றல்ல. சில வருடங்களாகவே நாம் டிஜிட்டல் கரன்சி உபயோகித்து வருகிறோம். சிறிய டீ கடையில் கூட டீ குடித்து 10 ரூபாயைக் கூகுள் பே (Gpay) வழியாகப் பணம் அனுப்புகிறோம். அந்த டீக்கடைக்காரர் மளிகைக் கடைக்குச் சென்று கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி பணத்தைக் கூகுள் பே வழியாக மளிகை கடைக்காரருக்கு அனுப்புகிறார்.

இந்த இரண்டு பரிவார்த்தனையில்  நேரிடையாக பணத்தாள் பயன்படுத்தவில்லை. டிஜிட்டல் வழியாக வெறும் எண்கள் பரிமாறப்பட்டது. இதுவும் டிஜிட்டல் கரன்சிதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பணத்தாள் பயன்படுத்தாமல் மொபைல், கம்ப்யூட்டர்  வழியாக அனுப்பப்படும் பணப் பரிவர்த்தனை அனைத்தும் டிஜிட்டல் கரன்சிதான். இதையே சில மாறுதல்கள் கொண்டு அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிட்டுள்ள கரன்சிதான் டிஜிட்டல் கரன்சி ஆகும்.

சரி டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட டிஜிட்டல் கரன்சி என்ன மாற்றங்களைக் கொண்டு வரும்? எப்படிச் செயல்படுகிறது?

 

தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய்த் தாள் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படுகிறது. அதாவது 1 ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்று என்ன விதங்களில் பணம் தாள் உள்ளதோ, அதே வகையில் டிஜிட்டல் ரூபாய் இருக்கும்இந்த டிஜிட்டல் ரூபாயை ஒரு  wallet வழியாகச் சேமித்து வைக்க, பரிமாற்றம்  செய்ய முடியும்வங்கி கணக்கு தேவை இல்லை.

பணத்தாள் போன்றே டிஜிட்டல் கரன்சியும் வங்கி வழியாகவே மக்களுக்குச் செல்லும். முதல் கட்டமாகச் சோதனை அடிப்படையில் 4 வங்கிகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, .சி..சி. பாங்க், யெஸ் பாங்க், .டி.எப்.சி பாங்க் இதை செய்யும். (State Bank of India, ICICI Bank, Yes Bank and IDFC First),  4 நகரங்களில்(Mumbai, New Delhi, Bengaluru and Bhubaneswar) சில குறிப்பிட்ட வாடிக்கையாளர் மூலம் சோதிக்கப்படுகிறது.

பிறகு 4 வங்கிகள் இதில் இணைகின்றன! அவை பாங்க் ஆப் பரோடா, யுனியன் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எப்.சி பாங்க், கோடாக் மகெந்திரா ஆகியவையாகும்! (Bank of Baroda, Union Bank of India, HDFC Bank and Kotak Mahindra)  அதே போல் சோதிக்கும் நகரங்களும் விரிவு படுத்தப்படுகிறது. (Ahmedabad, Gangtok, Guwahati, Hyderabad, Indore, Kochi, Lucknow, Patna and Shimla).

இந்த இரண்டு சோதனை முயற்சி வெற்றி அடைந்து இதில் ஏற்படும் இன்னல்களை களைந்து பிறகு நாடு முழுவதும் அனைத்து மக்களும், அனைத்து வங்கிகளும் பயன்படுத்தப்படுத்தும் நிலை வரும்.

இதே நேரத்தில் கையால் பரிமாறும் பணமும்   பயன்பாட்டில் இருக்கும். டிஜிட்டல் கரன்சி தற்போது இணையம் வழியாகப் பரிமாறப்பட்டு வருகிறது. இணையம் இல்லாமல் எப்படிப் பயன்படுத்துவது போன்ற முயற்சிகளும் நடைபெற்று வருகிறதுமுழுவதும் டிஜிட்டல் கரன்சி மட்டும் பயன்படுத்தும் நிலை வர 10 ஆண்டுகள் மேல் ஆகும்.

தற்பொழுது google pay பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த டிஜிட்டல் கரன்சியை எளிமையாகப் பயன்படுத்தலாம்.

இப்பொழுது க்ரிப்டோ கரன்சியை பார்ப்போம்!

ஒரு நாட்டின் கரன்சி அந்த நாட்டின் மத்திய வங்கி தான் வெளியிடும். மக்களால்  அதை வெளியிட முடியாது. அப்படி இருப்பதால்தான் பணம் என்றும் மதிப்பு மிக்கதாக உள்ளது. யார் வேண்டுமென்றாலும் வெளியிடலாம் என்ற நிலை இருந்தால் அதற்கு மதிப்பும் இருக்காது, நம்பகத்தன்மையும் இருக்காது. இதுதான் க்ரிப்டோ கரன்சி விஷயத்தில் நடந்து வருகிறது.

 

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் கரன்சி தெளிவாக அதன் மதிப்பைக் குறிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பு எந்த காலத்திலும் மாறாது. ஒரு ரூபாய் டிஜிட்டல் கரன்சி எந்த ஆண்டும் ஒரு ரூபாய் தான். அவை இரண்டு ரூபாயாக மாறாது. ஆனால், இங்கு தான் கிரிப்டோ கரன்சி மாறுபடுகிறது.

ஓர் கிரிப்டோ கரன்சி மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். அதே போல் குறைந்து கொண்டும் வரும். நிலையாக ஒரு மதிப்பு அதற்கு இருக்காது.  1 ரூபாய் 2 ரூபாயாக மாறும், 100 ரூபாயாகவும் மாறும்! அதே போல் மதிப்பு குறைந்து 50 பைசா வரும்! சில நேரம் பூஜ்யம் கூட ஆகிவிடும்நிலையான மதிப்பு இல்லாததால் க்ரிப்டோ கரன்சியை  நம்பி எந்தச் செயலும் செய்ய முடியாது. செய்ய முயற்சித்தால் நம்பகத் தன்மை போய்விடும்.

சிறு அளவிலான நம்பகத் தன்மை கூட இதன் மீது வைக்க முடியாததற்குக் காரணம், க்ரிப்டோ கரன்சியை வெளியிடுவது ஒரு நாட்டின் மத்திய வங்கி இல்லை. தனி நபரால்  வெளியிடப்படுகிறது. அதனால், அந்த நபரின் விருப்பத்தின் பெயரிலேயே அந்த கரன்சி செயல்படும். இதனால் மோசடிகள் தான் அதிகம் நடைபெறுகிறது.

க்ரிப்டோ கரன்சியின்  விலை மாறுதல்களை ஒரு உதாரணம் மூலம் பார்த்தால் இவை ஒரு ஆபத்தானது மட்டும் இல்லாமல் அவசியமற்றதும் ஆகும் என்று தெரிந்து கொள்ளலாம். கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஒரு பிட்காயின் விலை 37 லட்சம் ஆகும். இன்று ஒரு பிட் காயின் விலை 13 லட்சம் ரூபாய் ஆகும். 37 லட்சம் கொடுத்து வாங்கியவரின் நிலை என்னாவது?

எதிரியம் என்ற கிரிப்டோ கரன்சி ஒன்று 3 லட்சம் ரூபாயாக  இருந்தது தற்பொழுது அதன் விலை 96 ஆயிரம் ரூபாயாக உள்ளது.  FTX என்ற க்ரிடோ கரன்சி நவம்பர் 7ஆம் தேதி 1,760 ரூபாயாக இருந்து மறுநாளே 400 ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்து இன்று 104 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல்  அடுத்தடுத்து  வரும் க்ரிப்டோ கரன்சி விலை குறைந்து கொண்டே  உள்ளது! சில கிரிப்டோ கரன்சிகள் ஆட்டத்தை விட்டே வெளியேறிவிட்டது. அதாவது, முற்றிலும் வீழ்ச்சி அடைந்து பணம் போட்டவர்கள் ஏமாந்து போனார்கள்.

இதற்கு எல்லாம் காரணம், கிரிக்கெட் பார்க்க வந்த நபரைக் கூப்பிட்டுச் சிறந்த ஆட்ட நாயகன் விருது கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது, க்ரிப்டோ கரன்சி விலை விலை உயர்வும், தாழ்வும்! சிறிதும் மதிப்பு இல்லாத க்ரிப்டோ கரன்சியை செயற்கையாக விலை உயர்த்தி, அனைவரையும் வாங்க வைத்து ஏதாவது சிறு தகவல்கள் கூட முதலீடு செய்தவர்களைக் கலவரம் செய்து அப்படியே க்ரிப்டோ கரன்சி விலை சரிந்து காணாமல் போய் விடுகிறது!

தங்கத்தை அடமானம் வைக்கலாம் அல்லது விற்று பணமாக மாற்றலாம்! வாங்கிய விலையில் நஷ்டம் வராது. இது போல் எந்த சிறு மதிப்பும் இல்லாத க்ரிப்டோ கரன்சியை வாங்கி ஏமாந்து போனவர்கள் தான் இன்று அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள். நாளும், பொழுதும் இவை குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன!

இங்குதான் டிஜிட்டல் கரன்சி vs கிரிப்டோ கரன்சி வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும்.

ஒரு ரூபாய் மதிப்பு உள்ள டிஜிட்டல் கரன்சி என்றும் அதே மதிப்புதான்.

ஒரு ரூபாய் க்ரிப்டோ கரன்சி மறுநாளே ஐந்து ரூபாயாக மாறலாம் அல்லது பூஜ்யம் ஆகலாம்.

டிஜிட்டல் கரன்சி நாட்டின் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. முறைப்படுத்தச் சட்ட திட்டங்கள் உண்டு.


கிரிப்டோ கரன்சி தனி நபர்கள் வெளியிடுகிறார்கள். எந்த சட்ட திட்டங்களும் இல்லை. முறைப்படுத்தபடுவதும் இல்லை. இதை விளம்பரமாகவே க்ரிப்டோ கரன்சி விளம்பரங்களில் பார்க்கலாம்.

டிஜிட்டல் கரன்சியை நாட்டின் வங்கி வழியாகவே மக்களைச் சென்று சேர்கிறது. கண்காணிக்க மத்திய வங்கி உள்ளது.

கிரிப்டோ கரன்சி யார் வேண்டுமானாலும் வெளியிடலாம்! யாரும் கண் காணிக்கவில்லை. இணையத்தில் நேரடியாக வாங்கலாம்.

ஒரு டிஜிட்டல் கரன்சி மற்றவர்களுக்குக் கொடுத்தால்அதற்கு ஈடாக அவர்கள் பொருள் கொடுப்பார்கள்.

க்ரிப்டோ கரன்சி மற்றவர்களுக்குக் கொடுத்தால் அதற்கு ஈடாகப் பணம் கொடுக்க வேண்டும். பணம் என்பது ஒன்றை வாங்கத்தான் பயன்படுத்துகிறோமோ தவிர, பணத்தையே பணம் கொடுத்து வாங்குவது தான் க்ரிப்டோ கரன்சி ஆகும்.

நூலக ஆணை ஒரு சிலருக்கே கிடைக்கிறதே ஏன்?

கடந்த ஆறு மாதத்தில் அனைத்து க்ரிப்டோ கரன்சிகளும் அதளபாதாளத்தில் விழுந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் ஆகும்ஊழலில் சம்பாதித்தவர்கள் வேண்டுமானால் இதில் முதலீடு செய்து அழிந்து போகட்டும். ஆனால், கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இதில் முதலீடு செய்யாதீர்கள்!

அரசு வெளியிடும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்துவோம். எந்த காரணம் கொண்டும் க்ரிப்டோ கரன்சி பக்கம் செல்லாதீர்கள். சிறு சேமிப்பை முழுவதும் இழந்துவிடுவீர்கள். நிறைய பேர் வலை விரிக்கிறார்கள், சிக்கிவிடாதீர்கள்!

இன்றுக்ரிப்டோ கரன்சி சிறந்ததுஎன்று சொல்லும் சிலரின் உள் மனம் கூட, ‘இது ஒரு ஆபத்தான சூதாட்டம்என்று சொல்லும். ஆனால், அது வெளியே கேட்பதில்லை.

 

கட்டுரையாளர்செழியன் ஜானகிராமன்

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰